பரீத்கோட் இராச்சியம்

பரீத்கோட் இராச்சியம் (Faridkot State) பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் பிரித்தானிய இந்தியாவிற்கு வெளியில் பஞ்சாப் பகுதியில் இருந்த தன்னாட்சி பெற்ற சீக்கிய சுதேச சமஸ்தானம் ஆகும்.

இது தற்கால பஞ்சாப் மாநிலத்தில் பரித்கோட் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது.

பரீத்கோட் இராச்சியம்
ਫ਼ਰੀਦਕੋਟ ਰਿਆਸਤ
பரீத்கோட் இராச்சியம்
மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா
பரீத்கோட் இராச்சியம்
1803–1947 பரீத்கோட் இராச்சியம்

Flag of பரீத்கோட்

கொடி

Location of பரீத்கோட்
Location of பரீத்கோட்
1911ஆண்டு பஞ்சாப் நிலப்படத்தில் பரீத்கோட் இராச்சியம்
வரலாற்றுக் காலம் பிரித்தானிய இந்தியா
 •  நிறுவப்பட்டது 1803
 •  இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1892 1,652 km2 (638 sq mi)
Population
 •  1892 97,034 
மக்கள்தொகை அடர்த்தி 58.7 /km2  (152.1 /sq mi)

வரலாறு

ஜெய்சல்மேர் இராச்சியத்தை நிறுவிய கபூரா 1643இல் கோட்காபுரா என்ற வேள்புல அரசை நிறுவினார். இது 1743இல் பிரிந்து பரூத்கோட் உருவானது. 1807இல் இரு இராச்சியங்களும் இலாகூரின் சீக்கியப் பேரரசின் கீழ் இருந்தன. ஆனால் 1809இல் இது பிரித்தானியரின் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பில் இருந்தது. இந்த நிலை 1947இல் இந்திய விடுதலை வரை நீடித்தது.

முதலாம் சீக்கியப் போரின்போது பரீத்கோட்டின் ஆட்சியாளராக இருந்த பகார்கா சிங் பிரித்தானியர்களுடன் இணைந்து சீக்கியபே பேரரசை எதிர்த்தார். இதற்கு கைமாறாக பிரித்தானியர்களால் கோட்காபுராவும் நாபா இராச்சியத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும் இந்தியக் கிளர்ச்சியின் போதும் பிரித்தானியரை ஆதரித்தனர். 1858இல் பரீத்கோட் ஆட்சியாளர் மன்னராக ஏற்கப்பட்டனர். 11 துப்பாக்கி வணக்கம் வழங்கப்பட்டது.

1941இல் இந்த மன்னராட்சியின் பரப்பளவு 1652 ச.கிமீயாக இருந்தது; மக்கள்தொகை 188,000 ஆக இருந்தது. ராசா அரிந்தர் சிங் (1918-1956) சூலை 15, 1948இல் புதிய இந்திய ஒன்றியத்துடன் இணைய ஒப்பமிட்டார். ஆகத்து 20, 1948இல் உருவான பெப்சு மாநிலத்தின் அங்கமாயிற்று. நவம்பர் 1, 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபு மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.

1878-1901 காலகட்டத்தில் பரீத்கோட் சொந்தமான அஞ்சல்துறையும் தனக்கான அஞ்சல் தலைகளை வெளியிடும் உரிமைகளையும் கொண்டிருந்தது.

பரீத்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்களின் பட்டியல்

குறிப்பு: பதவிக்காலம் முன்னதாகவும் வாழ்நாள் பிந்தையதாகவும் தரப்பட்டுள்ளன.

  • சர்தார்
    • 1763 - 1782 : அமீர் சிங்
    • 1782 - 1798 : மொகர் சிங்
    • 1798 - 1804 : கரத் சிங் (+1804)
    • 1804 : டால் சிங் (+1804)
    • 1804 - 1826 : குலாப் சிங் (v.1797-1826)
    • 1826 - 1827 : அத்தர் சிங் (1823-1827)
    • 1827 - 1846 : பகார் சிங் (1800-1849)
  • இராசா
    • 1846 - 1849 : பகார் சிங்
    • 1849 - 1874 : வாசிர் சிங் (1811-1874)
    • 1874 - 1898 : விக்ரம் சிங் (1842-1898)
    • 1898 - 1906 : பல்பீர் சிங் (1870-1906)
    • 1906 - 1918 : பிரிசேந்தர் சிங் (1896-1918)
  • மகாராசா
    • 1918 - 1918 : பிரிசேந்தர் சிங்
    • 1918 - 1948 : அரீந்தர் சிங் (1915-1989)

இதனையும் காண்க

உசாத்துணைகள்

  • William Barton: The princes of India. Delhi 1983
  • Andreas Birken: Philatelic Atlas of British India, CD-ROM, Hamburg 2004
  • Imperial Gazetteer of India, 2. பதிப்பு 26 தொகுதி, ஆக்சுபோர்டு 1908–1931, இங்கே: [2]
  • G. B. Malleson: An historical sketch of the native states of India. London 1875, Reprint Delhi 1984
  • Subhash Parihar: Muslim Monuments in a Sikh State. In: Islamic Studies, Vol. 45, No. 2, Sommer 2006, S. 269–293
  • Joseph E. Schwartzberg (Hrsg.): A historical atlas of South Asia. 2. Auflage, New York/Oxford 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-506869-6

மேற்சான்றுகள்

Tags:

பரீத்கோட் இராச்சியம் வரலாறுபரீத்கோட் இராச்சியம் பரீத்கோட் இராச்சியத்தின் ஆட்சியாளர்களின் பட்டியல்பரீத்கோட் இராச்சியம் இதனையும் காண்கபரீத்கோட் இராச்சியம் உசாத்துணைகள்பரீத்கோட் இராச்சியம் மேற்சான்றுகள்பரீத்கோட் இராச்சியம்சீக்கியம்பஞ்சாப் பகுதிபரித்கோட் மாவட்டம்பிரித்தானிய இந்தியாபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுகருத்தடை உறைஅஸ்ஸலாமு அலைக்கும்நெல்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மனித உரிமைதேவநேயப் பாவாணர்பெயர்ச்சொல்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குறிஞ்சி (திணை)சுயமரியாதை இயக்கம்திவ்யா துரைசாமிதன்யா இரவிச்சந்திரன்அய்யா வைகுண்டர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்எயிட்சுகருக்காலம்வேளாண்மைபறவைகலாநிதி மாறன்பி. காளியம்மாள்நம்மாழ்வார் (ஆழ்வார்)வசுதைவ குடும்பகம்சொல்இரண்டாம் உலகப் போர்முத்துராஜாஅறம்ஒன்றியப் பகுதி (இந்தியா)இந்தியத் தேர்தல் ஆணையம்பயில்வான் ரங்கநாதன்இந்தியக் குடியரசுத் தலைவர்திராவிட மொழிக் குடும்பம்அவுரி (தாவரம்)கிராம நத்தம் (நிலம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஆண்டாள்சச்சின் டெண்டுல்கர்கார்ல் மார்க்சுஅகத்தியர்அவதாரம்இளையராஜாசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்செப்புஇந்திய உச்ச நீதிமன்றம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)முலாம் பழம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாங்குஆதிமந்திதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அம்மனின் பெயர்களின் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிலம்பம்இந்திய தேசியக் கொடிபட்டா (நில உரிமை)நோய்சென்னை சூப்பர் கிங்ஸ்நாடார்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஐங்குறுநூறுகொன்றைசிவனின் 108 திருநாமங்கள்மாதம்பட்டி ரங்கராஜ்மயங்கொலிச் சொற்கள்பாலை (திணை)சிவாஜி (பேரரசர்)பட்டினத்தார் (புலவர்)இரட்டைமலை சீனிவாசன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)அண்ணாமலையார் கோயில்இனியவை நாற்பதுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சச்சின் (திரைப்படம்)நன்னன்வேற்றுமைத்தொகை🡆 More