பதினெண் புராணங்கள்

மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப் பெற்ற பதினெட்டு புராணங்களாகும்.

இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.

வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் பொ.ஊ.மு. 6-ம் அல்லது பொ.ஊ.மு. 7-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

18 மகா புராணங்கள்

  1. பிரம்ம புராணம்
  2. பத்ம புராணம்
  3. விட்ணு புராணம்
  4. சிவ புராணம்
  5. பாகவத புராணம்
  6. நாரத புராணம்
  7. மார்க்கண்டேய புராணம்
  8. அக்னி புராணம்
  9. பவிசிய புராணம்
  10. பிரம்ம வைவர்த்த புராணம்
  11. லிங்க புராணம்
  12. வராக புராணம்
  13. கந்த புராணம்
  14. வாமன புராணம்
  15. கூர்ம புராணம்
  16. மச்ச புராணம்
  17. கருட புராணம்
  18. பிரம்மாண்ட புராணம்

மகாபுராணங்கள்

பழமையான புராணங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் அவற்றைப் பிற்காலத்தவர்கள் மகாபுராணம் என்று அழைத்தனர். திருப்பூவணப் புராணத்திலே 46,0 695, 1272 ஆகிய பாடல்களில் புராணங்கள் 18 எனக் குறிப்பிடப் ​பெற்றுள்ளது. அவை, 1) சைவம், 2) பவிஷ்யம், 3) மார்க்கண்டம், 4) இலிங்கம், 5)காந்தம், 6) வராகம், 7) வாமனம், 8) மச்சம், 9) கூர்மம் 10) பிரமாண்டம் 11) காருடம் 12) நாரதீயம், 13) விஷ்ணு, 14) பாகவதம், 15) பிரமம், 16) பதுமம், 17) ஆக்னேயம், 18) பிரமகைவர்த்தம் என்பன.

இவற்றை முறையே, "மச்சம் கூர்மம் வராகம் வாமனம், பிரமம் வைணவம் பாகவதம் சைவம், இலிங்கம் பௌடிகம் நாரதீயம் காணுடம், பிரமகைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம் பிரமாண்டம் ஆக்கினேயம் பதுமம் என்றிவை பாற்படு பதினெண் புராண மாகும்" எனத் திவாகரச் சூத்திரம் கூறுகிறது.

இப்பதினெண் புராணங்களும், திருப்பூவணப் புராணத்தில் கீழ்க்கண்ட பாடல்களில் வரிசைப் படுத்திப் பாடப் பெற்றுள்ளன.

"சைவ மார்க்கண்டங் காந்தந்தந்தங்கியவி லிங்கங் கூர்மம் வையகம்புகழ் வராகம் வாமனமருவு மச்சம் பொய்யறு பிரமாண்டஞ் சீர்பொருந்துநற் பவுடிகத்தோ டெய்திய பிரமம் பாற்பமிசைத்திடுமிவற்றினோடும்"

"காதல்கூர் நாரதீயங் கருடம் வயிணவஞ்சூழ் மாதிரம்புகழும் பாகவதத்துடன்மருவுமேத பேதமி லாக்கிநேயம் பிரமகைவர்த்தமியாவு மோதிடநின்னாற்கேட்டோமொன்பதிற்றிருபுராணம்" (பாடல் எண் 315, 316)

மேலும் "பிரமகைவர்த்தமாம் பெரும் புராணத்திற் றருமஞ்ஞன் காதை யத்தியாயஞ் சாற்றிடி னருமை யிங்கெழுபஃதந்த நாலதிற் கரைதரு சவுனக கருத்திற் காண்டியால்" (பாடல் 565) என்ற திருப்பூவணப் புராணப் பாடல், இப்பதினெண் புராணங்களையும் "மகாபுராணங்கள்" என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

சிவ புராண பிரச்சணை

குறிப்புகள்

மேற்கோள்

பதினெண் புராணங்கள்

மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப் பெற்ற பதினெட்டு புராணங்களாகும்.

  • பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.
  • பாரத பண்பாடு, விவேகானந்த கேந்திரம் வெளியீடு, விவேகானந்தபுரம், கன்னியாக்குமரி - 02.

Tags:

பதினெண் புராணங்கள் 18 மகா புராணங்கள்பதினெண் புராணங்கள் மகாபுராணங்கள்பதினெண் புராணங்கள் சிவ புராண பிரச்சணைபதினெண் புராணங்கள் குறிப்புகள்பதினெண் புராணங்கள் மேற்கோள்பதினெண் புராணங்கள் உசாத்துணைபதினெண் புராணங்கள்உப புராணங்கள்பேரண்டம்மனுவந்தரம்வாயு புராணம்வியாசர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூர்யா (நடிகர்)நரேந்திர மோதிதிருவள்ளுவர் சிலைஎஸ். சத்தியமூர்த்திஉத்தராகண்டம்திருவாசகம்மாமல்லபுரம்தமிழர் பண்பாடுதெருக்கூத்துபக்கவாதம்சமுதாய சேவை பதிவேடுகணினிபிச்சைக்காரன் (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்ரமலான்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கரகாட்டம்இமாம் ஷாஃபிஈதமிழ்த்தாய் வாழ்த்துபாரிபெண்சேவல் சண்டைபுனர்பூசம் (நட்சத்திரம்)விடுதலை பகுதி 1தனுஷ் (நடிகர்)சிவனின் 108 திருநாமங்கள்பத்துப்பாட்டுமுக்கூடற் பள்ளுநீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)மருதம் (திணை)மோகன்தாசு கரம்சந்த் காந்திஅகழ்ப்போர்பேரிடர் மேலாண்மைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்போதைப்பொருள்வேளாளர்ஊராட்சி ஒன்றியம்பழமுதிர்சோலைகம்பர்மேகாலயாவேதம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857மதுரைநாம் தமிழர் கட்சிசுரைக்காய்மெட்பார்மின்பைரவர்ஆதம் (இசுலாம்)பாளையக்காரர்நான்மணிக்கடிகைஇசைஓவியக் கலைபூப்புனித நீராட்டு விழாதிருக்கோயிலூர்தமிழ் நாடக வரலாறுகுணங்குடி மஸ்தான் சாகிபுமலையாளம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காயத்ரி மந்திரம்உடனுறை துணைபுதுச்சேரிமு. க. ஸ்டாலின்முதலாம் இராஜராஜ சோழன்இராவணன்அயோத்தி தாசர்சேலம்அகத்தியர்வாழைப்பழம்உதயநிதி ஸ்டாலின்பெயர்ச்சொல்நாச்சியார் திருமொழிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்அறுபது ஆண்டுகள்குருதிச்சோகைமியா காலிஃபாசெங்குந்தர்🡆 More