சார்லி சாப்ளின் 2

சார்லி சாப்ளின் 2 (Charlie Chaplin 2) 2019இல் தமிழில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம்.

இதை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ரானி மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 2002இல் வெளிவந்த சார்லி சாப்ளின் என்றப் படத்தின் தொடர்ச்சியாகும். படத்திற்கான இசையை அம்ரேஷ் கணேஷ் மேற்கொண்டார். இப்படத்தை டி. சிவா தனது அம்மா கிரியேஷனுக்காக தயாரித்திருந்தார். இப்படம் 2019 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.

சார்லி சாப்ளின் 2
சார்லி சாப்ளின் 2
சுவரிதழ்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புடி. சிவா
கதைசக்தி சிதம்பரம்
கதைசொல்லிசிவா
இசைஅம்ரேஷ் கணேஷ்
நடிப்புபிரபுதேவா
நிக்கி கல்ரானி
ஒளிப்பதிவுசௌந்தரராஜன்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
கலையகம்அம்மா கிரியேஷன்ஸ்
வெளியீடு25 ஜனவரி 2019
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

திரு (பிரபு தேவா) ஒரு திருமண உறவை உருவாக்கும் மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் 99 ஜோடிகளுக்கு தன் நண்பர்களான அரவிந்த் ஆகாஷ் மற்றும் சந்தனா ராஜுடன் இணைந்து திருமணம் செய்விக்கிறார். பிறகு, திருவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கின்றனர். அதே சமயத்தில் மருத்துவர் ராமகிருஷ்ணனின் (பிரபு) மகளான சாரா (நிக்கி கல்ரானி)-யை கண்டவுடன் காதலில் விழ, இது சாராவுக்கும் தெரிய வர அவரும் ஒப்புக்கொள்கிறார். இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடும் நடக்கிறது. இப்போது கதை பின்னோக்கி நகர்கிறது. மருத்துவர் இராமகிருஷ்ணனின் (பிரபு) மகள் சாரா (நிக்கி கல்ராணி) மீது திருவுக்கு காதல் உண்டாகிறது. இவர்களின் பெற்றோர்கள் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். அப்போது திருவின் நண்பன் துபாய் ராஜாவின் மூலம் அவள் மீது திருவிற்கு ஒரு சந்தேகம் வந்து விடுகிறது. அவளை திட்டி ஒரு காணொளி எடுத்து அவளுக்கு அனுப்புகிறான். திருவும் அவரது நண்பர்களும் செய்யும் ஒரு பெரிய தவறு திருமணம் நின்று விடும் கட்டத்தை அடைகிறது. பின்னர் உண்மை தெரிந்த திரு அந்த காணொளியை சாரா பார்ப்பதற்குள் தடுத்து நிறுத்த முயல்கிறான். அவ்வாறு செல்லும் வழியில், அவர்கள் ஒரு வனக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு தங்கள் காரை இழக்கிறார்கள், ஆனால் தடையைத் தாண்டி முன்னேறுகிறார்கள். ஆனால் அதனால்தான் அவர்கள் திருப்பதி என்பவரை நோக்கி விரைகிறார்கள். அது நடந்ததா?, கடைசியாக அவர் தடைகளைத் தாண்டி, தனது காதலியை மணந்தாரா? என்பது மீதமுள்ள கதையாகும்.

நடிகர்கள்

பிரபுதேவா - திரு
பிரபு - இராமகிருஷ்ணன்
நிக்கி கல்ரானி - சாரா
அதா சர்மா - "உளவியல்" சாரா
விவேக் பிரசன்னா - துபாய் ராஜா
அரவிந்து ஆகாசு - ஆகாஷ்
சந்தனா ராஜ் - மஹி
டி. சிவா - சிதம்பரம்
செந்தில்குமார் - தங்கலட்சுமி
ரவி மரியா - புல்லட் புஷ்பராஜ்
லுத்புதீன் - "பலகுரல்" மணீஷ்
தேவ் கில் - கடத்தல்காரன்
சமீர் கோச்சார் - கைபேசிக் கடைக்காரர்
கிரேன் மனோகர் - எம்.எல்.ஏ. பக்கோடா நாயுடு
சாம்ஸ் - Chaams]] - ஓரினச்சேர்க்கையாளர்
சிசர் மனோகர் - புல்லட் புஷ்பராஜின் உதவியாளர்
வேல்முருகன் - புல்லட் புஷ்பராஜின் உதவியாளர்
கோமல் சர்மா
அமித் பார்கவ் சாராவின் சகோதரியின் கணவர்
அஸ்வின் ராஜா- விடுதிப் பணியாளர்
கோலிசோடா சீதா - சுமங்கலி
செந்தில் - சிறப்புத் தோற்றம்

ஒலிப்பதிவு

இப்படத்தின் ஒலிப்பதிவை அம்ரேஷ் கணேஷ் மேற்கொண்டுள்ளார். விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' இறுதிப் போட்டியில் வென்ற செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இப்படத்திற்காக தங்கள் சொந்தப் பாடலான "சின்ன மச்சன்" எனறப் பாடலைப் பாடினர். பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த படத்தின் "இவள ரொம்ப" பாடலுக்காக பிரபு தேவா பாடலாசிரியராக அறிமுகமானார். சரிகம என்ற நிறுவனம் ஒலிப்பதிவை வெளியிட்டது.

சார்லி சாப்ளின் 2
ஒலிப்பதிவு
    அம்ரேஷ் கணேஷ்
வெளியீடு2018
இசைப் பாணிஒலிப்பதிவு
நீளம்17:08
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகம, இந்தியா
இசைத் தயாரிப்பாளர்அம்ரேஷ் கணேஷ்
அம்ரேஷ் கணேஷ் காலவரிசை
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
(2018)
சார்லி சாப்ளின் 2
(2018)
பொட்டு
(2019)

சின்ன மச்சான் - செந்தில், ராஜலட்சுமி
இவள் ரொம்ப - அம்ரேஷ் கணேஷ்
மாமு மாமு - அம்ரேஷ் கணேஷ்
ஐ வான்ட் மேரி யு - கேபி. மகாதேவன், கே. தாஸ்குப்தா

வெளியீடு

சார்லி சாப்ளின் 2 படம் 2019 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.

சந்தைப்படுத்தல்

படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2019 ஜன்வரி 15 தைப்பொங்கல் அன்று வெளியிட்டார்.

விமர்சனங்கள்

"பிலிம்பீட்.காம்" என்ற இணையதளத்தில் இவ்வாறு எழுதுகிறது "பழைய காலத்து கதையில், வாட்ஸ்அப், பேஸ்புக், இண்டர்நெட் போன்ற விஷயங்களை இணைத்து, அப்டேட்டட் வெர்ஷனாக தரமுயன்றிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். ஆனால் பெரும்பாலான காட்சிகள் பழைய பொட்டி கம்ப்யூட்டராக அலுப்பையே தருகின்றன. சார்லி சாப்ளின் முதல் பாகத்தை போலவே இதையும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக எடுக்க நினைத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். ஆனால் அந்த அளவுக்கு ரசிக்கக்கூடிய காமெடிக் காட்சிகள் படத்தில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறை. உடலமைப்பும், துறுதுறுப்பும் 17 வருடங்களுக்கு முந்தைய அதே பிரபுதேவாவை ஞாபகப்படுத்துகிறது. முகத்தில் மட்டுமே வயது தெரிகிறது. தன்னால் முயன்றவரை படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மனிதர்"

"சினிமா.தினமலர். காம்" என்ற இணையதளத்தில் இவ்வாறு எழுதுகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு படத்தை அதே பாணியில் எடுத்திருப்பதை போன்ற உணர்வே இரண்டாம் பாகத்திலும் ஏற்படுகிறது. முதல் பாகத்தில் கதை என்பது இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஒரு வரிக் கதையைக் கொண்டு இயக்குநர் முழுப்படத்தையும் நகர்த்தியிருக்கிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சார்லி சாப்ளின் 2 கதைச் சுருக்கம்சார்லி சாப்ளின் 2 நடிகர்கள்சார்லி சாப்ளின் 2 ஒலிப்பதிவுசார்லி சாப்ளின் 2 வெளியீடுசார்லி சாப்ளின் 2 சந்தைப்படுத்தல்சார்லி சாப்ளின் 2 விமர்சனங்கள்சார்லி சாப்ளின் 2 மேற்கோள்கள்சார்லி சாப்ளின் 2 வெளி இணைப்புகள்சார்லி சாப்ளின் 2சக்தி சிதம்பரம்சார்லி சாப்ளின் (திரைப்படம்)நகைச்சுவைத் திரைப்படம்நிக்கி கல்ரானிபிரபு (நடிகர்)பிரபுதேவா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்புகுதுப் நினைவுச்சின்னங்கள்சைவத் திருமுறைகள்முன்மார்பு குத்தல்தூதுவளைகழுகுமலை வெட்டுவான் கோயில்அரசழிவு முதலாளித்துவம்கோயம்புத்தூர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)மலையாளம்ஆய்த எழுத்து (திரைப்படம்)விஜய் (நடிகர்)புஷ்பலதாநீரிழிவு நோய்கு. ப. ராஜகோபாலன்கருக்காலம்விபுலாநந்தர்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமருதமலை முருகன் கோயில்அப்துல் ரகுமான்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பொருநராற்றுப்படைசிங்கப்பூர்நபிநெருப்புகாற்று வெளியிடைஎகிப்துஇரைப்பை அழற்சிஹூதுகம்பர்தமிழ்த்தாய் வாழ்த்துசிங்கம்பெரியபுராணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஹஜ்நூஹ்மருந்துப்போலிநெல்லிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்காதலும் கடந்து போகும்குடலிறக்கம்திருக்குறள்உளவியல்ஆந்திரப் பிரதேசம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதாயுமானவர்தற்கொலைஉ. வே. சாமிநாதையர்பராக் ஒபாமாகருப்பு நிலாமீன் சந்தைதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசித்தர்மக்களவை (இந்தியா)புறநானூறுகாமராசர்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பூரான்புதன் (கோள்)இந்திய நிறுமங்கள் சட்டம், 1956மனித உரிமைமுதுமலை தேசியப் பூங்காகிறிஸ்தவம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்புலிவினைச்சொல்எட்டுத்தொகைமரபுச்சொற்கள்கட்டுவிரியன்சனகராஜ்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சங்க இலக்கியம்விண்ணைத்தாண்டி வருவாயாமஞ்சள் காமாலைமேகாலயா🡆 More