கைகாட்டி நண்டு: ஒரு நண்டு பேரினம்

கைகாட்டி நண்டு அல்லது பிடில் நண்டு (Fiddler crab) என்பது ஓசிபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை நண்டாகும்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்த ஓசிபோடிடே குடும்பததில் குறைந்த எண்ணிக்கையில் பேய் நண்டு மற்றும் சதுப்புநில நண்டு இனங்கள் உள்ளன. இந்த முழு குழுவும் சிறிய நண்டுகளைக் கொண்டாதக உள்ளது. இவற்றில் மிகப்பெரிய வகை என்பது இரண்டு அங்குலம் (5) செமீ) குறுக்கலவு கொண்டது ஆகும். கைகட்டி நண்டுகள் கடற்கரைகள், உவர் ஏரிகள், சேற்றுப்பாங்கான நிலங்களில் காணப்படுகின்றன. கைகாட்டி நண்டுகள் அவற்றின் பாலியல் ஈருருமையான கடிகால்களுக்காக மிகவும் பிரபலமானவை; ஆண் நண்டுகளின் ஒரு கடிகால் மற்றொரு கடிகாலை விட மிகப்பெரியதாக இருக்கும். அதே நேரத்தில் பெண் நண்டுகளின் இரு கடிகால்களும் ஒரே அளவானவை. இவை இரவில் வளைக்குள் உறங்கி, பகலில் நடமாடக்கூடியவை. இவை நேராக நடக்காமல் பக்கவாட்டில் நடக்கும்.

கைகாட்டி நண்டு: ஒரு நண்டு பேரினம்
கைகாட்டி நண்டு

பிற வகை நண்டுகளைப் போலவே, கைகாட்டி நண்டுகள் வளரும்போது வளர் உருமாற்றம் அடைகின்றன. ஏதாவது ஒரு காரணத்தால் இவை கால்கள் அல்லது கடிகால்களை இழந்தால், இவை வளர் உருமாற்றம் அடையும்போது புதிய உறுப்பு வளர்கிறது. ஆண் நண்டுகளின் பெரிய கடிகால் உடைந்துவிட்டால் மறுபக்கத்தில் உள்ள சிறியகடிகலைக்கூட பெரிய கடிகாலாக வளர்த்துக் கொள்ளக்கூடியவை.

சூழலியல்

இந்த நண்டுகள் மேற்கு ஆப்பிரிக்கா, மேற்கு அத்திலாந்திக், கிழக்கு பசிபிக், இந்தோ-பசிபிக், போர்ச்சுகலின் அல்கார்வ் பகுதியின் மணல் அல்லது சேறும் நிறைந்த கடற்கரைகளில், அலையாத்தித் தாவரங்கள், உவர் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. கைகாட்டி நண்டுகள் அவற்றின் தனித்துவமான சமச்சீரற்ற கடிகாலால் எளிதில் அடையாளம் காணப்படுகின்றன.

கைகாட்டி நண்டு: ஒரு நண்டு பேரினம் 
ஆண் எலுமிச்சை-மஞ்சள் கடிகால் கொண்ட ஃபிட்லர் நண்டு (ஆஸ்ட்ரூகா பெர்ப்லெக்ஸா ), அதன் பெரிய கடிகாலை அசைக்கும் காட்சி

கைகாட்டி நண்டுகள் தங்களை கடிகாலை அசைத்து, சைகைகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன; ஆண் நண்டுகள் தங்கள் பெரிய கடிகாலைக் காட்டி அதை பயன்படுத்தி பெண் நண்டுகளைக் கவர்கின்றன. பெண் நண்டைக் கண்டால் ஆண் நண்டு இந்த பெரிய கடிகாலை உயர்த்தி நடன அசைவுகளை செய்து கவர்ந்து தன் வளைக்கும் அழைத்துச் செல்லும். இதன் வண்ணமயமான பெரிய கடிகாலானது பிடில் இசைக் கருவியைப் போல இருப்பதால் இதற்கு பிடில் நண்டு என்ற பொதுப் பெயர் கிடைத்தது.

நண்டானது தன் சிறிய கடிகாலைப் பயன்படுத்தி தரையில் இருந்து வண்டலை வாய்க்கு கொண்டுவருகிறது. அங்கு அதில் உள்ள பாசி, நுண்ணுயிர்கள், பூஞ்சை, இறந்த கடலுயிரிகளின் உடல்கள் போன்றவற்றை பிரித்து உண்கிறது.


குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

Tags:

நண்டுபால் ஈருருமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருநராற்றுப்படைராதிகா சரத்குமார்காதலர் தினம் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்மண்ணீரல்நெல்வ. உ. சிதம்பரம்பிள்ளைவிண்ணைத்தாண்டி வருவாயாஇடலை எண்ணெய்நான் சிரித்தால்மலையாளம்யாழ்காப்பியம்மருத்துவம்தனுஷ் (நடிகர்)நடுக்குவாதம்தொலைக்காட்சிதமிழ்நாடுகாலிஸ்தான் இயக்கம்பண்டமாற்றுகருப்பை நார்த்திசுக் கட்டிகம்பர்பிளிப்கார்ட்குணங்குடி மஸ்தான் சாகிபுஉ. சகாயம்மக்காகாளமேகம்எட்டுத்தொகைதிருமந்திரம்குண்டலகேசிநஞ்சுக்கொடி தகர்வுகோயம்புத்தூர்மொழிசோழர்கணியன் பூங்குன்றனார்கலைகார்ல் மார்க்சுஅன்புநன்னூல்ஜிமெயில்இலங்கைவிரை வீக்கம்பேரிடர் மேலாண்மைஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்சடங்குபுதுமைப்பித்தன்பவுனு பவுனுதான்கரகாட்டம்கன்னி (சோதிடம்)பாண்டவர்பெரியபுராணம்நயன்தாராஇன்ஃபுளுவென்சாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஔவையார்ஹரிஹரன் (பாடகர்)ஜவகர்லால் நேருமக்களாட்சிநண்பகல் நேரத்து மயக்கம்சிட்டுக்குருவிஉளவியல்அனைத்துலக நாட்கள்விஸ்வகர்மா (சாதி)அஸ்ஸலாமு அலைக்கும்வைணவ சமயம்இட்லர்திருவள்ளுவர்வராகிபதிற்றுப்பத்துஇணைச்சொற்கள்ஜெயம் ரவிசென்னைதேவநேயப் பாவாணர்கொச்சி கப்பல் கட்டும் தளம்கற்றது தமிழ்அகரவரிசைஐம்பெருங் காப்பியங்கள்சிவனின் 108 திருநாமங்கள்மருந்துப்போலி🡆 More