இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A.

Millikan,22 மார்ச்சு 1868 – 19 டிசம்பர் 1953) என்பவர் அமெரிக்க ஆய்வியல் இயற்பியலறிஞர். இவர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பைத் (Charge of electron) துல்லியமாகக் கணக்கிட்ட முறைகளுக்காகவும் ஒளிமின் விளைவில்(Photo electric effect) இவருடைய ஆய்வுகளுக்காகவும் 1923-ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றவர். 1921-இல் பிரஸ்பெல்சு என்ற இடத்தில் நடந்த சால்வே மாநாடு என்று சிறப்புப் பெற்ற இயற்பியல் அறிஞர்களின் மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கியவர்.

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்
இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்
பிறப்பு(1868-03-22)22 மார்ச்சு 1868
மோரிசன், இலினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புதிசம்பர் 19, 1953(1953-12-19) (அகவை 85)
சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
கல்வி கற்ற இடங்கள்ஓபர்லின் கல்லூரி
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மைக்கேல் பப்பின்
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்
அறியப்படுவதுஎதிர்மின்னியின் ஏற்றம்
அண்டக் கதிர்கள்
விருதுகள்காம்ஸ்டொக் பரிசு (1913)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1923)
பிராங்கிளின் விருது (1937)

வாழ்க்கையும், கல்வியும்

இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868 அன்று பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891-ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன.

இயற்பியல் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். 1893-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895-ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.

பணிகளும், ஆராய்ச்சிகளும்

மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார்.

1909-ல் ஒற்றை எலக்ட்ரான் மூலம் கடத்தப்படும் மின்னூட்டத்தை தீர்மானிக்கும் தொடர் கட்டச் சோதனைகளை நிகழ்த்தினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரியர்சன் சோதனைக் கூடத்தில் துணை ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். அங்கு 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார்.

பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார்.

ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார்.

பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

விருதுகள்

ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறைவு

இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ராபர்ட் மில்லிகன் 85 வயதில் (1953) மறைந்தார்.

மேற்கோள்கள்

Tags:

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் வாழ்க்கையும், கல்வியும்இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் பணிகளும், ஆராய்ச்சிகளும்இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் விருதுகள்இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் மறைவுஇராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் மேற்கோள்கள்இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன்நோபெல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

குமரி அனந்தன்ஹோலிஇராபர்ட்டு கால்டுவெல்காதல் மன்னன் (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்திருச்சிராப்பள்ளிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஆசியாசித்த மருத்துவம்அபுல் கலாம் ஆசாத்ஹர்திக் பாண்டியாஅல் அக்சா பள்ளிவாசல்மொழிமக்காகலம்பகம் (இலக்கியம்)ஹஜ்நீலகிரி மாவட்டம்இராவணன்சைலன்ஸ் (2016 திரைப்படம்)தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்இரட்டைக்கிளவிஒற்றைத் தலைவலிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராவண காவியம்லோகேஷ் கனகராஜ்இசுலாம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்பாண்டியர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அஸ்ஸலாமு அலைக்கும்ஹதீஸ்விசயகாந்துஇசுலாமிய வரலாறுரோபோ சங்கர்சவூதி அரேபியாசாரைப்பாம்புதட்டம்மைபிரித்விராஜ் சுகுமாரன்மூலம் (நோய்)பத்துப்பாட்டுவிருதுநகர் மக்களவைத் தொகுதிஜவகர்லால் நேருநெல்லியாளம்அளபெடைசேலம் மக்களவைத் தொகுதிபெங்களூர்மனத்துயர் செபம்வட்டாட்சியர்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்இந்திய ரிசர்வ் வங்கிஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)குருத்து ஞாயிறுகோயம்புத்தூர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஆத்திசூடிசீவக சிந்தாமணிதேர்தல்தமிழ் மாதங்கள்கெத்சமனிஇந்திரா காந்திமண் பானைஇரட்சணிய யாத்திரிகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைபிரேமலதா விஜயகாந்த்பச்சைக்கிளி முத்துச்சரம்திதி, பஞ்சாங்கம்பசுபதி பாண்டியன்அமலாக்க இயக்குனரகம்கொல்கொதாபாரிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மணிமேகலை (காப்பியம்)🡆 More