2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்

2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் (United Kingdom general election of 2015) ஐக்கிய இராச்சியத்தின் 56வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 மே 7 அன்று நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் அனைத்து 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து மக்களவைக்கும், கீழவைக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்பொதுத் தேர்தலில், இலண்டன் பெருநகர்ப் பகுதி தவிர்ந்த இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளில் உள்ளூராட்சி அவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல், 2015
United Kingdom general election, 2015
2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்
← 2010 7 மே 2015 (2015-05-07) 56வது →
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் →

மக்களவையின் அனைத்து 650 தொகுதிகளுக்கும்
326 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்46,425,386 (66.1%)
  First party Second party Third party
  டேவிட் கேமரன் எட் மிலிபாண்ட் Nicola Sturgeon
தலைவர் டேவிட் கேமரன் எட் மிலிபாண்ட் நிக்கோலா ஸ்டர்ஜியன்
கட்சி கன்சர்வேட்டிவ் தொழிற்கட்சி எஸ்.என்.பி
தலைவரான
ஆண்டு
6 டிசம்பர் 2005 25 செப்டம்பர் 2010 14 நவம்பர் 2014
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
விட்னி டொன்காஸ்டர் வடக்கு போட்டியிடவில்லை
முந்தைய
தேர்தல்
306, 36.1% 258, 29.0% 6, 1.7%
முன்பிருந்த தொகுதிகள் 306 258 6
வென்ற
தொகுதிகள்
331 232 56
மாற்றம் 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 25 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 26 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 50
மொத்த வாக்குகள் 11,334,920 9,344,328 1,454,436
விழுக்காடு 36.9% 30.4% 4.7%
மாற்றம் 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 0.8% 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 1.4% 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் 3.0%

2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்
வெற்றிபெற்ற கட்சியின் வண்ணங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.
* கன்சர்வேட்டிவ்களின் 331 தொகுதிகளில், மக்களவை சபாநாயகர் ஜோன் பெர்க்கோவின் பக்கிங்காம் தொகுதியும் அடங்கும். இது சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

முந்தைய பிரதமர்

டேவிட் கேமரன்
கன்சர்வேட்டிவ்

அடுத்த பிரதமர்

டேவிட் கேமரன்
கன்சர்வேட்டிவ்

டேவிட் கேமரன் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கும், எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் எனவும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்புகளே அதிகம் எனவும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த போதும், நடைபெற்ற தேர்தலில் பழமைவாதிகள் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சியமைக்கத் தேவையான தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.

தாராண்மைவாத சனநாயகவாதிகளுடன் கூட்டணி அமைத்து 2010 முதல் ஆட்சி செய்து வந்த பழமைவாதக் கட்சி 36.9% வாக்குகளைப் பெற்று, 331 தொகுதிகளை வென்று நாடாளுமன்றத்தில் 12 அதிகப்படியான இடங்களுடன் தனித்து ஆட்சியமைக்கிறது. 1992 இற்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் முதலாவது கன்சர்வேட்டிவ் அரசு இதுவாகும். அத்துடன், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகரித்த விருப்பு வாக்குகளுடன் மீளத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் என்ற பெருமையையும், மார்கரெட் தாட்சருக்குப் பின்னர் அதிக தொகுதிகளுடன் மீள வென்ற தலைவர் என்ற பெருமையையும் டேவிட் கேமரன் பெற்றார். எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிற் கட்சி, 232 தொகுதிகளை 30.4% வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொழிற்கட்சி அடைந்த மிகப் பெரும் தோல்வி இதுவாகும்.

இசுக்கொட்லாந்தில் இசுக்கொட்டிய தேசியக் கட்சி தாம் போட்டியிட்ட 59 தொகுதிகளில் 2010 தேர்தலை விட 50 தொகுதிகள் அதிகமாக 56 தொகுதிகளை வென்று மக்களவையில் மூன்றாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. இக்கட்சியின் சார்பில் களமிறங்கிய மாரி பிளாக் என்ற 20 அகவைப் பல்கலைக்கழக மாணவி, 1667இல் தன் 13 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான கிறித்தோபர் மோனாக்கை அடுத்த இளையவர் ஆவார்.

மக்களவையில் 57 உறுப்பினர்களை வைத்திருந்த தாராண்மைவாத சனநாயகவாதிகள் 49 இடங்களை இழந்து, மொத்தம் 8 இடங்களை மட்டுமே கைப்பற்றினர். 1974 ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் அடைந்த பெரும் தோல்வி இதுவாகும்...

தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், தாராண்மைவாத சனநாயகவாதத் தலைவர் நிக் கிளெக் ஆகியோர் தமது கட்சித் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.

முடிவுகள்

56வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி தலைவர் வாக்குகள் தொகுதிகள்
கன்சர்வேட்டிவ் கட்சி டேவிட் கேமரன் 11,334,920 (36.9%)
331 (50.9%)
331 / 650
தொழிற் கட்சி எட் மிலிபாண்ட் 9,344,328 (30.4%)
232 (35.7%)
232 / 650
ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி நைஜல் பராஜ் 3,881,129 (12.6%)
1 (0.2%)
1 / 650
லிபரல் டெமக்கிராட்சு நிக் கிளெக் 2,415,888 (7.9%)
8 (1.2%)
8 / 650
இசுக்கொட்டிய தேசியக் கட்சி நிக்கொலா ஸ்டர்ஜன் 1,454,436 (4.7%)
56 (8.6%)
56 / 650
பசுமைக் கட்சி நத்தாலி பெனெட் 1,154,562 (3.8%)
1 (0.2%)
1 / 650
சனநாயக கூட்டுறவுக் கட்சி பீட்டர் ரொபின்சன் 184,260 (0.6%)
8 (1.2%)
8 / 650
பிளெயிட் சிம்ரு லியான் வுட் 181,694(0.6%)
3 (0.5%)
3 / 650
சின் பெயின் ஜெரி ஆடம்சு 176,232 (0.6%)
4 (0.6%)
4 / 650
அல்ஸ்டர் கூட்டுறவுக் கட்சி மைக் நெஸ்பிட் 114,935 (0.4%)
2 (0.3%)
2 / 650
சமூக சனநாயக தொழிற் கட்சி அலிஸ்டயர் மெக்டொனெல் 99,809 (0.3%)
3 (0.5%)
3 / 650
ஏனையோர் N/A 349,487 (1.1%)
1 (0.2%)
1 / 650
331 232 56
கன்சர்வேட்டிவ் தொழிற்கட்சி எஸ்.என்.பி ஏனை-
யோர்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் முடிவுகள்2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் குறிப்புகள்2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் மேற்கோள்கள்2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் வெளி இணைப்புகள்2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்இங்கிலாந்துஇலண்டன் பெருநகர்ப் பகுதிஐக்கிய இராச்சியத்தின் மக்களவைஐக்கிய இராச்சியம்கீழவைநாடாளுமன்ற உறுப்பினர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுரதாதிருநாவுக்கரசு நாயனார்இரட்சணிய யாத்திரிகம்சிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நற்றிணைகபிலர் (சங்ககாலம்)ஆளி (செடி)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஊராட்சி ஒன்றியம்கள்ளழகர் கோயில், மதுரைவிண்டோசு எக்சு. பி.குறிஞ்சி (திணை)பெரியபுராணம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தனிப்பாடல் திரட்டுசமரச சுத்த சன்மார்க்க சங்கம்வன்னியர்மகரம்ஆய்வுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழர் பண்பாடுஇந்தியாவில் இட ஒதுக்கீடுஐங்குறுநூறு - மருதம்பெ. சுந்தரம் பிள்ளைதமிழர் அணிகலன்கள்தேவநேயப் பாவாணர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுத்துராமலிங்கத் தேவர்தாய்ப்பாலூட்டல்திருச்சிராப்பள்ளிபாண்டியர்இந்திய வரலாறுரச்சித்தா மகாலட்சுமிகோயம்புத்தூர்தமிழர் விளையாட்டுகள்தொல்லியல்வௌவால்இரட்டைமலை சீனிவாசன்அன்னை தெரேசாகைப்பந்தாட்டம்தமிழர்முல்லைக்கலிபெண்பஞ்சாங்கம்தமிழர் கப்பற்கலைகருக்காலம்கணையம்குடும்ப அட்டைதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்விளையாட்டுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சேரர்அரச மரம்மனித உரிமைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபாம்புபுதுக்கவிதைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திராவிட மொழிக் குடும்பம்மருதம் (திணை)வெ. இறையன்புஅவுன்சுஜெயகாந்தன்நிதி ஆயோக்கன்னத்தில் முத்தமிட்டால்முள்ளம்பன்றிதங்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திவ்யா துரைசாமிஅரண்மனை (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிசுடலை மாடன்பெரும்பாணாற்றுப்படைதமிழ் மன்னர்களின் பட்டியல்🡆 More