விளாதிமிர்

விளாதிமிர் (ஆங்கில மொழி: Vladimir ; உருசிய மொழியில் : Владимир) என்பது மாஸ்கோவின் கிழக்கே 200 கிலோமீற்றர் (120 மைல்) தொலைவில் உள்ள கிளைஸ்மா நதியில் அமைந்துள்ள உருசியாவின் விளதீமிர் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நிர்வாக மையமாகும்.

இந்த நகரத்தில் 2010 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 345,373 மக்கள் வசிப்பதாகவும், 2002 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 315,954 மக்கள் வசிப்பதாகவும், 1989 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 349,702 மக்கள் வசிப்பதாகவும் பதிவு செய்யப்பட்டது. உருசிய வரலாற்றில் விளாதிமிர் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நகரம் 12 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் நாட்டின் தலைநகராக செயல்பட்டது.

நிர்வாகமும், நகராட்சியும்

விளாதிமிர் என்பது விளாதீமிர் மாகாணத்தின் நிர்வாக மையமாகும். நிர்வாகப் பிரிவுகளின் கட்டமைப்பிற்குள் இது பதினேழு கிராமப்புறங்களுடன் சேர்ந்து விளாதிமிர் நகரமாக இணைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு சமமான அந்தஸ்துள்ள நிர்வாக அலகு ஆகும். விளாதிமிர் நகரம் நகராட்சி பிரிவாக விளாடிமிர் நகர்ப்புற ஓக்ரக் என இணைக்கப்படுகின்றது.

பொருளாதாரம்

விளாதிமிர் நகரில் பல மின், இரசாயன தொழிற்சாலைகள், பல உணவு பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் இரண்டு பெரிய வெப்ப மின் நிலையங்கள் ஆகியன அமைந்துள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க தளங்கள் காணப்படுவதால் சுற்றுலாத்துறை நகரத்தின் பொருளாதாரத்தில் பங்குவகிக்கின்றது.

இராணுவத் தளம்

உருசிய மூலோபாய ஏவுகணை படைகளின் 27 வது காவலர் ஏவுகணை இராணுவத்தின் தலைமையகம் இந்த நகரில் அமைந்துள்ளது. விளாதிமிர் பனிப்போரின் போது டோப்ரின்ஸ்கோய் விமானப்படையின் தளமாக அமைந்தது.

காலநிலை

விளாதிமிர் நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் நீண்ட, குளிர்ந்த குளிர்காலம் மற்றும் குறுகிய, சூடான கோடைகாலங்களுடன் ஈரப்பதமான கண்ட காலநிலையை கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Vladimir
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 7.1
(44.8)
9.5
(49.1)
17.8
(64)
27.8
(82)
34.0
(93.2)
34.4
(93.9)
37.1
(98.8)
36.5
(97.7)
29.5
(85.1)
25.0
(77)
14.8
(58.6)
9.2
(48.6)
37.1
(98.8)
உயர் சராசரி °C (°F) -5.6
(21.9)
-5.0
(23)
1.5
(34.7)
10.9
(51.6)
18.6
(65.5)
22.1
(71.8)
24.3
(75.7)
22.0
(71.6)
15.7
(60.3)
8.0
(46.4)
-0.4
(31.3)
-4.4
(24.1)
9.0
(48.2)
தினசரி சராசரி °C (°F) -8.5
(16.7)
-8.5
(16.7)
-2.5
(27.5)
5.7
(42.3)
12.6
(54.7)
16.6
(61.9)
18.8
(65.8)
16.5
(61.7)
10.8
(51.4)
4.6
(40.3)
-2.4
(27.7)
-7.0
(19.4)
4.7
(40.5)
தாழ் சராசரி °C (°F) -11.3
(11.7)
-11.5
(11.3)
-5.8
(21.6)
1.4
(34.5)
7.3
(45.1)
11.8
(53.2)
14.0
(57.2)
12.1
(53.8)
7.2
(45)
2.1
(35.8)
-4.7
(23.5)
-9.4
(15.1)
1.1
(34)
பதியப்பட்ட தாழ் °C (°F) -39.7
(-39.5)
-36.1
(-33)
-30.0
(-22)
-16.1
(3)
-9.0
(15.8)
0.0
(32)
3.9
(39)
0.0
(32)
-6.3
(20.7)
-18.9
(-2)
-27.2
(-17)
-43.0
(-45.4)
−43.0
(−45.4)
பொழிவு mm (inches) 40
(1.57)
30
(1.18)
29
(1.14)
33
(1.3)
45
(1.77)
78
(3.07)
63
(2.48)
62
(2.44)
52
(2.05)
61
(2.4)
48
(1.89)
44
(1.73)
585
(23.03)
ஈரப்பதம் 86 82 76 71 67 73 76 79 82 85 88 87 79
சராசரி மழை நாட்கள் 5 3 6 12 15 17 15 15 16 16 10 5 135
சராசரி பனிபொழி நாட்கள் 26 23 16 6 1 0 0 0 1 6 18 25 122
ஆதாரம்: Pogoda.ru.net

போக்குவரத்து

1861 ஆம் ஆண்டு முதல் விளாதிமிர் மற்றும் மாஸ்கோ இடையே தொடருந்து இணைப்பு காணப்படுகின்றது. விளாதிமிர் M7 நெடுஞ்சாலையால் மாஸ்கோ மற்றும் நிஸ்னி நோவ்கோரோடுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போக்குவரத்தில் பேருந்துகள், தள்ளுவண்டிகள், வேன் வண்டிகள், வாடகையுந்துகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன.

விளாதிமிர் பேருந்து சேவை நகரத்தை விளாடிமிர் ஒப்லாஸ்டின் அனைத்து மாவட்ட மையங்களுடனும், மாஸ்கோ, இவானோவோ , கோஸ்ட்ரோமா , நிஸ்னி நோவ்கோரோட் , ரியாசான் , யாரோஸ்லாவ்ல் மற்றும் பிற நகரங்களுடனும் இணைக்கிறது.

விளாடிமிர் நிலையம் வழியாக தினமும் குறைந்தது 20 ஜோடி நீண்ட தூர தொடருந்துகள் பயணிக்கின்றன. விளாதிமிர் ஆண்டு முழுவதும் நேரடி தொடருந்து இணைப்புகளை மாஸ்கோ (குர்ஸ்க் நிலையம் ), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் நிஷ்னி நோவ்கோரோட் ஆகியவற்றுக்கு வழங்குகிறது. விளாதிமிர் 2010 ஆம் ஆண்டு கோடையில் இருந்து பெரக்ரின் பால்கான் அதிவேக தொடருந்து நிறுத்துமிடங்களில் ஒன்றாகும்.

இந்த நகரம் நகர மையத்திற்கு 5 கி.மீ மேற்கே உள்ள செமியாசினோ விமான நிலையத்தால் சேவை செய்யப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இடங்கள்

நவீன விளாதிமிர் என்பது பண்டைய ரஷ்ய நகரங்களின் பாதுகாக்கப்பட்ட தளங்களை கொண்ட ஒரு பகுதியாகும். இந்த நகரம் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோவால் குறிப்பிடப்பட்ட மூன்று முக்கிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது.

அஸ்புஷன் கதீட்ரல் - கதீட்ரல் 1158–1160 ஆம் காலப்பகுதியில் இல் கட்டப்பட்டது. 1185–1189 ஆம் காலப்பகுதியில் இல் விரிவுபடுத்தப்பட்டது. 1810 ஆம் ஆண்டில், நியோகிளாசிக்கல்பாணியில் ஒரு உயர்ந்த மணி-கோபுரம் சேர்க்கப்பட்டது.

செயிண்ட் டெமெட்ரியஸ் கதீட்ரல் - பழமையான தேவாலயம் ஆகும்.

கோல்டன் கேட் - இது 1158–1164 ஆண்டுகளில் கோபுரம் போன்று கட்டப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனரமைக்கப்பட்ட பின்னர் வாயில் போன்ற தற்போதைய வடிவத்தைப் பெற்றது.

சான்றுகள்

சான்றுகள்

Tags:

விளாதிமிர் நிர்வாகமும், நகராட்சியும்விளாதிமிர் பொருளாதாரம்விளாதிமிர் இராணுவத் தளம்விளாதிமிர் காலநிலைவிளாதிமிர் போக்குவரத்துவிளாதிமிர் பிரசித்தி பெற்ற இடங்கள்விளாதிமிர் சான்றுகள்விளாதிமிர் சான்றுகள்விளாதிமிர்ஆங்கில மொழிஉருசிய மொழிஉருசியாமாஸ்கோவிளதீமிர் மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடலை எண்ணெய்இட்லர்ஆறுமுக நாவலர்வேல ராமமூர்த்திஉயிர்ச்சத்து டிஒற்றைத் தலைவலிராம் சரண்எச்.ஐ.விதொண்டைக் கட்டுஅதியமான் நெடுமான் அஞ்சிதமிழ்நாடுஹஜ்பதினெண்மேற்கணக்குகர்மாஆப்பிள்கொன்றை வேந்தன்திருப்பாவைதஞ்சாவூர்பகாசுரன்இன்ஃபுளுவென்சாசீமான் (அரசியல்வாதி)வெண்குருதியணுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்எயிட்சுமுத்துராஜாநவக்கிரகம்இரட்டைக்கிளவிஔவையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நாய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இயேசுஜலியான்வாலா பாக் படுகொலைசோழிய வெள்ளாளர்கருக்காலம்கலித்தொகைபாட்டாளி மக்கள் கட்சிவெளிச் சோதனை முறை கருக்கட்டல்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்சீனாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழர்முகம்மது நபிதமிழ்நாடு காவல்துறைநான் ஈ (திரைப்படம்)மனித மூளைநூஹ்உப்புச் சத்தியாகிரகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காதல் மன்னன் (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)சங்க காலம்திரௌபதிமூசாகார்ல் மார்க்சுஅரபு மொழிவிநாயக் தாமோதர் சாவர்க்கர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பெருமாள் முருகன்தனுசு (சோதிடம்)தமிழர் சிற்பக்கலைபெண்கணையம்உலக நாடக அரங்க நாள்புற்றுநோய்டி. ராஜேந்தர்சுந்தர காண்டம்திரு. வி. கலியாணசுந்தரனார்பாண்டி கோயில்சுருட்டைவிரியன்இந்திய புவிசார் குறியீடுதனுஷ் (நடிகர்)சிங்கம்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)மலேரியாமுதலாம் இராஜராஜ சோழன்இந்திய வரலாறுபராக் ஒபாமா🡆 More