விலங்குக் காட்சிச்சாலை

விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடமே விலங்குக் காட்சிச்சாலை ஆகும்.

விலங்குகளை அவற்றின் இயற்கை வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை, உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை அனைவரும் காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரும் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன.

விலங்குக் காட்சிச்சாலை
சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை, கலிபோர்னியா, மே 2007.

வரலாறு

விலங்கு காட்சியகத்தின் வரலாறு என்பது நீண்ட வரலாறைக் கொண்டது. உலகின் மிகப் பழமையான உயிரியல் சேகரிப்பு தோராயமாக, கி.மு 3500 காலகட்டத்தில் எகிப்தில் இருந்ததாக 2009 ஆண்டு ஹிராகோன்போலிஸ் என்ற பகுதியில் நடந்த அகழாய்வின் மூலமாக தெரியவந்தது. இங்கு கவனத்தைக் கவரும் விலங்குகளான நீர்யானைகள், ஹர்டிபீட்ஸ் மான்கள், யானைகள், பபூன் குரங்குகள், காட்டுப் பூனைகள் போன்றவை சேகரிப்பில் இருந்துள்ளன. கி.மு. 11 நூற்றாண்டில் மத்திய அசீரிய பேரரசின் மன்னராக அசூர் பெல் கலா என்பவர் இருந்தபோது விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின், சீன பேரரசியான டான்கி என்பவர் மான் இல்லத்தை கட்டிவைத்திருந்தார். மேலும் சீன அரசர் வென் ஆப் ஜூ என்பவர் லிங்க்-யூ என்னும் விலங்கு காட்சியகத்தை வைத்திருந்தார் இது 1,500 ஏக்கர் (6.1 ச.கி.மீ) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்து நன்கு அறியப்பட்ட விலங்கு சேகரிப்பு மையம் என்பது இசுரேல் நாட்டின் அரசியான செமிராமிஸ் மற்றும் அசிரியா மன்னர் அசூர்பானிபால், பாபிலோனியா மன்னரான நேபுகாத்நேச்சார் போன்றோர் ஆகியோர் அமைத்திருந்தது ஆகும். கி.மு நான்காம் நூற்றாண்டில் உயிரியல் பூங்காகள் பல கிரேக்க நகர நாடுகளில் இருந்தன ; பேரரசர் அலெக்சாந்தர் அவர் போரில் வென்ற நாடுகளில் இருந்து விலங்குகளை கிரேக்கத்திற்கு அனுப்பி வைத்ததாக அறியப்படுகிறது. ரோமப் பேரரசர்கள், ஆய்வுக்கும், அரங்கில் பயன்படுத்தவும் விலங்குகளை தனியார் சேகரித்து வைத்திருந்தனர்

இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஹென்றி விலங்குகளை வுட்ஸ்டாக்கில் சேகரித்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது இதில் சிங்கங்கள், சிறுத்தைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குளின் தொகுப்பை தன் அரண்மனையில் வைத்திருந்தார். இடைக்கால இங்கிலாந்தில் மிக முக்கியமான விலங்கு தொகுப்பு இலண்டன் கோபுரத்தில் இருந்தது, இது அரசர் ஜான் மூலம் 1204 இல் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஹென்றி தன் திருமணப் பரிசாக 1235 இல் மூன்று சிவிங்கிகளை புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் பிரடெரிக்கிடம் இருந்த பெற்றார். 1264 இல், சேகரிப்பில் இருந்த விலங்குகள் கோபுரத்தின் முக்கிய மேற்கு வாயிலின் அருகில், உள்ள புல் டவர் என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டு இந்த இடத்திற்கு லயன் டவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த விலங்கு தொகுப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் முதலாம் எலிசபெத் ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் போது, காட்சியகத்திற்கான நூழைவுக் கட்டணம் மூன்று அரை வெள்ளிப்பணம், அல்லது சிங்கங்களுக்கு உணவாக கொடுப்பதற்கு ஒரு பூனை அல்லது நாய் என்று இருந்தது. இந்த விலங்கு காட்சியகத்தை திறந்தபோது விலங்குகள் விலங்குகள் லண்டன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன.

வெளி இணைப்புகள்

விலங்குக் காட்சிச்சாலை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Zoos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இயற்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

செஞ்சிக் கோட்டைஇயேசுசன்ரைசர்ஸ் ஐதராபாத்நீ வருவாய் எனகுணங்குடி மஸ்தான் சாகிபுசிறுநீரகம்தமன்னா பாட்டியாஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பொது ஊழிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திராவிட மொழிக் குடும்பம்சேலம்இராமலிங்க அடிகள்உவமையணிநவதானியம்மகாபாரதம்வெள்ளியங்கிரி மலைகா. ந. அண்ணாதுரைபூக்கள் பட்டியல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தேம்பாவணிவெ. இராமலிங்கம் பிள்ளைசிலப்பதிகாரம்பெண்கம்பர்108 வைணவத் திருத்தலங்கள்பாரிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்தியாவில் பாலினப் பாகுபாடுதரணிஇந்தியன் பிரீமியர் லீக்காதல் கொண்டேன்ஆகு பெயர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்குறிஞ்சி (திணை)வெண்பாதிருவிழாஇந்திய மக்களவைத் தொகுதிகள்மு. கருணாநிதிபெரும்பாணாற்றுப்படைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கவலை வேண்டாம்ஆற்றுப்படைகிறிஸ்தவம்செக் மொழிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மங்காத்தா (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிங்கம் (திரைப்படம்)உள்ளீடு/வெளியீடுசித்ரா பௌர்ணமிகடல்ஆண்டுசென்னை சூப்பர் கிங்ஸ்அன்புமணி ராமதாஸ்மானிடவியல்மதுரைஜே பேபிகற்றாழைபயில்வான் ரங்கநாதன்சூரைதிருப்பூர் குமரன்காம சூத்திரம்சின்னம்மைஊராட்சி ஒன்றியம்சங்ககால மலர்கள்பூனையானையின் தமிழ்ப்பெயர்கள்வெண்குருதியணுவல்லினம் மிகும் இடங்கள்பட்டா (நில உரிமை)மணிமேகலை (காப்பியம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்நற்றிணைநாச்சியார் திருமொழிமதுரைக் காஞ்சி🡆 More