லோரி மாகாணம்

லோரி மாகாணம், ஆர்மீனியாவின் மாகாணங்களில் ஒன்று.

இது நாட்டின் வடபகுதியில், ஜியார்ஜியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய நகரமான வனாட்சோர், இதன் தலைநகரம் ஆகும். இங்கு ஸ்டெபனாவன், அலாவெர்டி, ஸ்பிட்டாக் ஆகிய மற்ற நகரங்களும் குறிப்பிடத்தக்கவை. இந்த மாகாணத்தில் உள்ள சனாகின் மடாலயம் உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.

லோரி
Lori

Լոռի
மாகாணம்
லோரி Lori-இன் சின்னம்
சின்னம்
ஆர்மீனியாவில் லோரி மாகாணத்தின் அமைவிடம்
ஆர்மீனியாவில் லோரி மாகாணத்தின் அமைவிடம்
நாடுஆர்மீனியா
தலைநகரம்
பெரிய நகரம்
வனாட்சோர்
அரசு
 • ஆளுநர்ஆர்தர் நல்பண்டியான்
பரப்பளவு
 • மொத்தம்3,799 km2 (1,467 sq mi)
பரப்பளவு தரவரிசைமூன்றாவது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்235,537
 • தரவரிசைஆறாவது
நேர வலயம்UTC+04
அஞ்சல் குறியீட்டு எண்1701–2117
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுAM.LO
FIPS 10-4AM06
இணையதளம்official website

வரலாறு

இந்த மாகாணத்தின் பெரும்பகுதி பண்டைக்கால ஆர்மீனியாவின் தாஷிர் என்ற ஆட்சிப் பகுதிக்குள் இருந்தது.

புவியியல்

லோரி மாகாணம் 
பாம்பக் மலைகள்

இந்த மாகாணம் 3,789 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆர்மீனியாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒரு பங்கு ஆகும். இதைச் சுற்றிலும் டவுஷ் மாகாணம், கோட்டாய்க் மாகாணம், அரகத்சாட்ன் மாகாணம், ஷிராக் மாகாணம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த மாகாணம் ஜியார்ஜியாவின் குவெமோ கார்த்லி என்னும் பகுதியுடன் எல்லையை கொண்டுள்ளது.

இந்த மாகாணத்தின் பெரும்பரப்பு மலைப்பாங்கானது. இங்கு ஜவாகேட்டி, பாசும், பம்பாக், குகர்க், ஹலாப், சோம்கேட்டி ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன.

இந்த மாகாணத்தில் டெபெட் ஆறும், அதன் துணையாறுகளும் பாய்கின்றன. இங்கு கடுங்குளிரும், மிதமான வெப்பநிலையும் நிலவுகிறது.

பொருளாதாரம்

லோரி மாகாணம் 
தெகுட் சுரங்கம்

லோரியில் செம்பை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் அலாவெர்டி, அக்தலா, ஷாம்லுக், தெகுட் ஆகிய இடங்களில் பெரிய சுரங்கங்கள் உள்ளன. தாஷிர் நகரத்தில் வெண்ணெயும், பிற பால்பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கட்டிடத்துக்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் வனாட்சோரில் கிடைக்கின்றன. சுற்றுலாவின் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

கல்வி

லோரி மாகாணம் 
வனாட்சோர் அரசுப் பல்கலைக்கழகம்

வனாட்சோரில் வனாட்சோர் அரசுப் பல்கலைக்கழகம், மிகிதட் கோஷ் ஆர்மீனிய-ரஷிய பன்னாடுப் பல்கலைக்கழகம் ஆகியன உள்ளன. யெரெவான் அரசுப் பல்கலைக்கழகம், ஆர்மீனிய தொழில்கல்விப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கிளைகள் இங்குள்ளன.

மக்கள்

இங்கு 235,537 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 111,675 ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இந்த மாகாண மக்கள் தொகை, ஆர்மீனிய மக்கள்தொகையில் 7.8% ஆகும். இவர்களில் 137,784 மக்கள் (58.5%) நகர்ப்புறங்களிலும், ஏனையோர் ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் எட்டு நகரங்களும், 105 கிராமங்களும் உள்ளன. வனாட்சோர், அலாவெர்டி, ஸ்டெபனாவான், தாஷிர், அக்தலா, துமன்யன் ஆகியவை நகரங்களாகும்.

இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையை சேர்ந்தவர்கள். ரஷ்யர்களும் சில பகுதிகளில் வசிக்கின்றனர். இங்கு கிரீக் மொழி பேசும் மக்களும் வசிக்கின்றனர்.

விளையாட்டு

கால்பந்து, எறிபந்தாட்டம் ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. வனாட்சோர், அலாவெர்டி, அக்தலா, துமன்யன் ஆகிய இடங்களில் கால்பந்து விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. மாகாணத்துக்கு உட்பட்ட போட்டிகளில் நகரங்களை முன்னிறுத்தி விளையாடும் அணிகள் உள்ளன.

சுற்றுலாத் தலங்கள்

லோரி மாகாணம் 
சனாகின் மடாலயம்
லோரி மாகாணம் 
கோராகேர்ட் மடாலயம்
லோரி மாகாணம் 
புனிதர் ஜார்ஜ் பேராலயம்

கேய்ட்சன் கோட்டை, கயான் கோட்டை, அக்தலா கோட்டை, லோரி கோட்டை, சனாகின் பாலம், யக்தன பாலன், சேத்வி கோட்டை ஆகியவை இங்குள்ளன.

இங்கு ஓட்சூன் தேவாலயம, புனித ஜார்ஜ் தேவாலயம், ஹொரோமேய்ர் மடாலயம், ஹினெவங்க் மடாலயம், சனாகின் மடாலயம், ஹக்பாட் மடாலயம், கோராகேர்ட் மடாலயம், கன்னி மரியாள் ஆலயம, குயுலகரக் தேவாலயம் ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன.

இந்த மாகாணத்தில் குயுலகரக் சரணாலயம், மர்கஹோவிட் சரணாலயம, ஸ்டெபனாவான் சரணாலயம், வனாட்சோர் தாவரவியல் பூங்கா ஆகியவையும் உள்ளன.

படக் காட்சியகம்

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

லோரி மாகாணம் வரலாறுலோரி மாகாணம் புவியியல்லோரி மாகாணம் பொருளாதாரம்லோரி மாகாணம் கல்விலோரி மாகாணம் மக்கள்லோரி மாகாணம் விளையாட்டுலோரி மாகாணம் சுற்றுலாத் தலங்கள்லோரி மாகாணம் படக் காட்சியகம்லோரி மாகாணம் சான்றுகள்லோரி மாகாணம் இணைப்புகள்லோரி மாகாணம்ஆர்மீனியாஉலகப் பாரம்பரியக் களம்சனாகின் மடாலயம்சியார்சியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மனித உரிமைநன்னன்அவதாரம்ஐக்கிய நாடுகள் அவைவட்டாட்சியர்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மாணிக்கவாசகர்சேலம்முருகன்ஆனைக்கொய்யாசின்னம்மைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ் இலக்கியப் பட்டியல்மே நாள்சாத்துகுடிதிணை விளக்கம்முதல் மரியாதைபி. காளியம்மாள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்ஓரங்க நாடகம்காதல் தேசம்போக்கிரி (திரைப்படம்)முள்ளம்பன்றிகில்லி (திரைப்படம்)தமிழர் கப்பற்கலைகுணங்குடி மஸ்தான் சாகிபுஅனுஷம் (பஞ்சாங்கம்)பகத் பாசில்காயத்ரி மந்திரம்கருத்துநற்றிணைபொன்னுக்கு வீங்கிபுதினம் (இலக்கியம்)மங்கலதேவி கண்ணகி கோவில்அயோத்தி தாசர்கருத்தடை உறைசிறுநீரகம்ரச்சித்தா மகாலட்சுமிஇந்து சமயம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அம்மனின் பெயர்களின் பட்டியல்சிலம்பம்சப்தகன்னியர்கணையம்கலித்தொகைஇனியவை நாற்பதுநிதிச் சேவைகள்ஏலகிரி மலைதிராவிட முன்னேற்றக் கழகம்கிறிஸ்தவம்தொல்லியல்கேள்விசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மண் பானைகடல்அதிமதுரம்மனோன்மணீயம்இயற்கைநீ வருவாய் எனபெ. சுந்தரம் பிள்ளைமரகத நாணயம் (திரைப்படம்)ஸ்ரீலீலாசிந்துவெளி நாகரிகம்ஊராட்சி ஒன்றியம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஉ. வே. சாமிநாதையர்ஆகு பெயர்பலாமனித வள மேலாண்மைமுடிநாயக்கர்நெசவுத் தொழில்நுட்பம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தாவரம்உயிர்மெய் எழுத்துகள்அங்குலம்🡆 More