ரிப்பன் பிரபு

ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9).1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர்.

பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரித்தானிய அரசியல்வாதி. இந்தியாவில், சென்னையில் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றழைக்கப்படுபவர். பிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர்.

ரிப்பன் பிரபு
ரிப்பன் பிரபு
இந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு
1880-1884
குழுத்தலைவர்
பதவியில்
9 திசம்பர் 1868 – 9 ஆகத்து 1873
ஆட்சியாளர்விக்டோரியா
பிரதமர்வில்லியம் கிளாட்ஸ்டோன்
முன்னையவர்ஜான் ஸ்பென்சர் சர்ச்சில்
பின்னவர்ஹென்றி புரூஸ்
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1880–1884
ஆட்சியாளர்விக்டோரியா
முன்னையவர்லிட்டன் பிரபு
பின்னவர்பிரடெரிக் ஹமில்டன்
பிரபுக்கள் அவையின் தலைவர்
பதவியில்
1905–1908
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு
பிரதமர்சர் ஹென்றி கேம்பல்
பின்னவர்[
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1827-10-24)24 அக்டோபர் 1827
10 டவுனிங் தெரு, இலண்டன்
இறப்பு9 சூலை 1909(1909-07-09) (அகவை 81)
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிலிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
துணைவர்(s)ஹென்றியெட்டா வைனர்
(1833–1907)

வரலாறு

ரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார். அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ செல்லவில்ல, தனியாகவே கல்வி பயின்றார். அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை, 1884

இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார். இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன், தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.

ரிப்பன் குறித்த மதிப்பீடு

இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராக்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அன்பன்) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர்.

  • 👑 இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு.
  • 👑 தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார்.
  • 👑 இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார்.
  • 👑 கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார்.
  • 👑 உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.
  • 👑 கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. 1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ராய் ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார்.
  • 👑 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறையை தொடங்கியவர் இவர்தான்.
  • 👑 இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது.

தல சுய ஆட்சி

மரபுரிமை பேறுகள்

ரிப்பன் பிரபு 
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் பிரபுவை கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டது.

1913ல் கட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் கட்டிடத்திற்கு, ரிப்பன் பிரபுவை கௌரவப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ரிப்பன் பிரபு வரலாறுரிப்பன் பிரபு மரபுரிமை பேறுகள்ரிப்பன் பிரபு இதனையும் காண்கரிப்பன் பிரபு மேற்கோள்கள்ரிப்பன் பிரபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூலித்தேவன்பாரத ஸ்டேட் வங்கிதமிழச்சி தங்கப்பாண்டியன்ஆழ்வார்கள்உரிச்சொல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நீர் மாசுபாடுநயன்தாராநீதிக் கட்சிரா. பி. சேதுப்பிள்ளைபட்டினப்பாலைஇலங்கைஏற்காடுஅப்துல் ரகுமான்மென்பொருள்அண்ணாமலையார் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்சட்டம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கரிகால் சோழன்கருப்பைதைப்பொங்கல்வெ. இறையன்புகோத்திரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்கட்டுரைகம்பராமாயணம்செஞ்சிக் கோட்டைமுலாம் பழம்பால் (இலக்கணம்)உத்தரகோசமங்கைகண்ணாடி விரியன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தஞ்சாவூர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருச்சிராப்பள்ளிவிஜய் வர்மாதமிழர் அளவை முறைகள்பரணி (இலக்கியம்)ஆண்டு வட்டம் அட்டவணைபிரதமைநஞ்சுக்கொடி தகர்வுசித்த மருத்துவம்மண்ணீரல்தமிழ்த்தாய் வாழ்த்துவாட்சப்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்பத்து தலமூலம் (நோய்)பால கங்காதர திலகர்பிரியங்கா காந்திலீலாவதிஇடைச்சொல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மலேரியாபர்வத மலைநுரையீரல்இந்திய அரசியலமைப்புகாமராசர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)முன்னின்பம்சமணம்இரண்டாம் உலகப் போர்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்பறவைசன்ரைசர்ஸ் ஐதராபாத்பெருமாள் திருமொழிஎச்.ஐ.விமதுரைசேமிப்புமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்காளமேகம்தொடை (யாப்பிலக்கணம்)பகிர்வுசெயங்கொண்டார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்உணவுசூளாமணி🡆 More