மீ. ப. சோமு

மீ.

ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர்.

மீ. ப. சோமு
மீ. ப. சோமு
பிறப்புசோமசுந்தரம்
(1921-06-17)17 சூன் 1921
மீனாட்சிபுரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசனவரி 15, 1999(1999-01-15) (அகவை 77)
கல்விவித்துவான் (சென்னைப் பல்கலைக்கழகம்)
பணிதலைமைத் தயாரிப்பாளர்
பணியகம்அகில இந்திய வானொலி
அறியப்படுவதுஎழுத்தாளர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1962)

வாழ்க்கைக் குறிப்பு

சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்தவர். கோவில் தேவார ஓதுவார்கள் மரபில் தோன்றியவர். இளமையில் வாய்ப்பாட்டுடன் வீணையும் சாரங்கியும் பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் படித்து வித்வான் பட்டம் பெற்றவர். டி. கே. சியுடனான தொடர்பு மூலம் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். இவர் புதுமைப்பித்தனின் நண்பர். 1938ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றார். அவர் 1946ல் இளவேனில் என்ற அவரது கவிதைத் தொகுப்பு வெளியானது. அக்கவிதைத் தொகுப்பு மாநில அரசின் விருது பெற்றது. 1954 – 56களில் கல்கி இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1958 -60 களில் நண்பன் என்ற மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981 இல் ஓய்வு பெற்றார். அங்கு தலைமைத் தயாரிப்பாளராகவும் பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இவரது சாகித்தியங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாயுள்ளன. அவரது பயணக் கட்டுரை அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள் 1962ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அவர் எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் இசை ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ்க்கலைக்களஞ்சியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சோமு 1999ல் மரணமடைந்தார்.

விருதுகளும் பட்டங்களும்

எழுதிய நூல்கள்

(முழுமையானதல்ல)

கவிதைகள்

  • இளவேனில்
  • குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை

சிறுகதைகள்

  • கேளாத கானம்
  • உதய குமாரி
  • ஐம்பொன்மெட்டி
  • மஞ்சள் ரோஜா
  • மனை மங்களம்
  • கல்லறை மோகினி
  • திருப்புகழ் சாமியார்

புதினங்கள்

  • ரவிச்சந்திரிகா
  • கடல் கண்ட கனவு
  • நந்தவனம்
  • வெண்ணிலவுப் பெண்ணரசி
  • எந்தையும் தாயும்

கட்டுரைகள்

  • கார்த்திகேயனி
  • ஐந்தருவி
  • பிள்ளையார் சாட்சி
  • நீங்காத நினைவுகள்
  • சித்தர் இலக்கியம் ( 3 பகுதிகள் )
  • நமது செல்வம்
  • அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மீ. ப. சோமு வாழ்க்கைக் குறிப்புமீ. ப. சோமு விருதுகளும் பட்டங்களும்மீ. ப. சோமு எழுதிய நூல்கள்மீ. ப. சோமு சிறுகதைத் தொகுப்புகள்மீ. ப. சோமு மேற்கோள்கள்மீ. ப. சோமு வெளி இணைப்புகள்மீ. ப. சோமுஅகில இந்திய வானொலிஇசைகட்டுரைகவிதைசாகித்திய அகாதமி விருதுசிறுகதைதமிழ்பத்திரிக்கைபுதினம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விளம்பரம்விஜய் (நடிகர்)நீர்பகாசுரன்தமிழிசை சௌந்தரராஜன்சோழர்சங்க இலக்கியம்ஜன கண மனவிஷ்ணுஇராசேந்திர சோழன்உடனுறை துணைகு. ப. ராஜகோபாலன்காரைக்கால் அம்மையார்நாம் தமிழர் கட்சிமீன் சந்தைபிள்ளையார்கங்கைகொண்ட சோழபுரம்தமிழரசன்குற்றாலக் குறவஞ்சிதபூக் போர்பொருநராற்றுப்படைசட் யிபிடிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கவுண்டமணிசுற்றுச்சூழல்இலக்கியம்வேதநாயகம் பிள்ளைஎயிட்சுஇந்திய ரிசர்வ் வங்கிசிங்கம்மதுரைக் காஞ்சிகாடுவெட்டி குருஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழர் விளையாட்டுகள்புங்கைஇயோசிநாடிஊராட்சி ஒன்றியம்குடலிறக்கம்இந்திய தேசிய காங்கிரசுகழுகுமலைமேகாலயாதமிழில் சிற்றிலக்கியங்கள்கல்பனா சாவ்லாதுணிவு (2023 திரைப்படம்)பிரம்மம்மணிவண்ணன்சமையலறைஇந்திய ரூபாய்கண்ணாடி விரியன்பஞ்சாபி மொழிகற்றது தமிழ்ஐந்து எஸ்புதினம் (இலக்கியம்)மனித உரிமைசூர்யா (நடிகர்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மருது பாண்டியர்விலங்குவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இளையராஜாகும்பம் (இராசி)திரு. வி. கலியாணசுந்தரனார்நாயன்மார் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்மாதுளைமனித எலும்புகளின் பட்டியல்நுரையீரல்நெல்லிஅம்லோடிபின்கள்ளுஇடலை எண்ணெய்மயக்கம் என்னகண்டேன் காதலைபஞ்சபூதத் தலங்கள்இசைவெள்ளி (கோள்)இன்ஃபுளுவென்சா🡆 More