மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம்

மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் அல்லது கண்ணிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் (International Campaign to Ban Landmines ICBL) தனிநபரெதிர்ப்பு மிதிவெடிகளையும் கொத்துக் குண்டுகளையும் இல்லாத உலகிற்காகவும் இவ்வெடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் காக்கப்படவும் அவர்களுக்கு முழுமையான வாழ்வு அமையவும் பாடுபடும் அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணியாகும்.

1992ஆம் ஆண்டில் ஒருபோன்ற மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மெடிகோ, பன்னாட்டு மாற்றுத் திறனாளர் அமைப்பு, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள், அமெரிக்க முன்னாள் வியத்நாம் வீரர்கள் சங்கம், மிதிவெடி பரிந்துரைக் குழு உள்ளிட்ட ஆறு அமைப்புகள் தங்கள் பொதுவான இலக்குகளை எட்ட ஒருங்கிணைந்து செயல்பட உடன்பட்டன. அப்போது உருவான இக்கூட்டணி வளர்ந்து 100 நாடுகளில் செயல் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; பெண்கள், குழந்தைகள், முன்னாள் வீரர்கள், சமயக் குழுக்கள், சுற்றுச்சூழலாளர்கள், மனித உரிமையாளர்கள், ஆயுதக் கட்டுப்பாட்டாளர்கள், அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்து குவியப்படுத்திய குழுக்களாக இவர்கள் இயங்குகின்றனர். குறிப்பிடதக்கதோர் ஆதரவாளராக டயானா, வேல்ஸ் இளவரசி இருந்தார்.

மிதிவெடி தடுப்பு உடன்பாட்டை (ஒட்டாவா உடன்படிக்கை) உருவாக்குவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 1997ஆம் ஆண்டில் இந்த அமைப்பிற்கும் இதன் நிறுவன ஒருங்கிணைப்பாளரான, ஜோடி வில்லியம்சிற்கும் இணையாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒட்டாவா உடன்படிக்கையின்படி கண்ணிவெடிகளின் பயன்பாடு, தயாரிப்பு, சேமிப்பு, மாற்றுகை தடை செய்யப்படுகின்றது. இந்த உடன்பாடு கண்டமை இந்த இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.

மேற்சான்றுகள்

  1. UN Mine ban treaty text : http://www.un.org/Depts/mine/UNDocs/ban_trty.htm

வெளி இணைப்புகள்

Tags:

அரசு சார்பற்ற அமைப்புகொத்துக் குண்டுமிதிவெடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித உரிமைதிருவோணம் (பஞ்சாங்கம்)பெண்ணியம்நாயன்மார் பட்டியல்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியலமைப்புஅமேசான்.காம்குருதி வகைபருவ காலம்கிருட்டிணன்மீனாட்சிசுந்தரம் பிள்ளைமருதமலை (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்வசுதைவ குடும்பகம்கட்டுரைநாயக்கர்சங்க காலம்தினமலர்தமிழர் நிலத்திணைகள்மெய்யெழுத்துஅறம்தேவதாசி முறைமக்களவை (இந்தியா)தேவேந்திரகுல வேளாளர்தமிழக வரலாறுபெருஞ்சீரகம்உலா (இலக்கியம்)கட்டுவிரியன்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சீனாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)காம சூத்திரம்விலங்குநிலக்கடலைஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்பொருநராற்றுப்படைகன்னியாகுமரி மாவட்டம்தமிழர் பருவ காலங்கள்குண்டூர் காரம்அருந்ததியர்உயிர்மெய் எழுத்துகள்ஒத்துழையாமை இயக்கம்தமிழ் இலக்கியம்நீக்ரோசித்திரைத் திருவிழாமு. கருணாநிதிகருட புராணம்தனிப்பாடல் திரட்டுபித்தப்பைமுடிதேசிக விநாயகம் பிள்ளைசங்கம் (முச்சங்கம்)முதுமலை தேசியப் பூங்காகா. ந. அண்ணாதுரைஅக்பர்திருமலை நாயக்கர் அரண்மனைபுணர்ச்சி (இலக்கணம்)இன்ஸ்ட்டாகிராம்ஐம்பூதங்கள்கல்லணைஉ. வே. சாமிநாதையர்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பிள்ளைத்தமிழ்பூக்கள் பட்டியல்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்மகாபாரதம்பனிக்குட நீர்வடிவேலு (நடிகர்)மாதவிடாய்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்சமணம்விருமாண்டிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகணியன் பூங்குன்றனார்போக்குவரத்து🡆 More