மிசிசிப்பிப் பண்பாடு என்பது, மண்மேடு கட்டும் (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும்.
இது இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் செப்புக் கால மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது.
மிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்னோரிலும் வேறுபட்டிருந்தார்கள்.
இவர்களிடம் எழுத்து முறையோ அல்லது கற்களால் கட்டிடங்களைக் கட்டும் முறையோ இருக்கவில்லை. இயற்கையாகக் கிடைத்த உலோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு எடுக்கத் தெரிந்திருக்கவில்லை.
மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு:
This article uses material from the Wikipedia தமிழ் article மிசிசிப்பிப் பண்பாடு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.