மார்சல் யேக்கப்சு: இத்தாலிய தடகள வீரர்

இலாமோண்ட்டு மார்செல் யேக்கப்சு சூனியர் (Lamont Marcell Jacobs Jr.) என்பவர் ஓர் இத்தாலிய தடகள வீரர் மற்றும் நீளம் தாண்டும் விளையாட்டு வீரராவார்.

1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

மார்சல் யேக்கப்சு
Marcell Jacobs
மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்
2020 ஆம் ஆண்டில் மார்சல் யேக்கப்சு
தனிநபர் தகவல்
முழு பெயர்இலாமோண்ட்டு மார்சல் யேக்கப்சு சூனியர்.
பிறப்பு26 செப்டம்பர் 1994 (1994-09-26) (அகவை 29)
எல் பாசோ, டெக்சாசு, அமெரிக்கா
உயரம்1.88 மீ
எடை79 கி.கி
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
விரைவோட்டம்
கழகம்கி.எசு பியாமி ஒரோ
பயிற்றுவித்ததுபாவோலோ காமோசி
கியானி லொம்பார்டி
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)
  • 60 மீ: 6.47 நொடிகள் (2021)
  • 100 மீ: 9.80 நொடிகள் (2021)
  • 200 மீ: 20.61 நொடிகள் (2018)
  • 4×100 மீ தொடரோட்டம்: 37.50 நொடிகள் (2021)
  • நீளம் தாண்டல்: 8.07 மீ (2017)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் தடகளம்
நாடு மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல் இத்தாலி
ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 டோக்யோ ஆண்கள் 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 டோக்யோ 4×100 மீ தொடரோட்டம்
உலகத் தடகள
தொடரோட்டப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2021 சோர்சோவ் ஆண்கள் 4 × 100 மீட்டர்
ஐரோப்பிய உள்ளரங்க
வெற்றியாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2021 டோருன் ஆண்கள் 60மீ
ஐரோப்பிய தடகள
அணி வெற்றியாளர் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 பைத்கோசசு 100 மீ

யேக்கப்சு துணைவி நிக்கோல் டாசாவுடன் தனது இரண்டு குழந்தைகளான அந்தோனி மற்றும் மேகன் ஆகியோருடன் ரோம் நகரில் வசித்து வருகிறார். தாயார் இத்தாலியராகவும், தந்தை அமெரிக்கராக இருந்ததாலும் யேக்கப்சு பிறந்ததிலிருந்தே இத்தாலி மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட மகனாக இருந்தார்.

100 மீட்டர் விரைவோட்ட ஒலிம்பிக் வெற்றியாளர் மற்றும் 60 மீட்டர் விரைவோட்ட ஐரோப்பிய வெற்றியாளராக மார்சல் அறியப்படுகிறார். 100 மீட்டர் விரைவோட்ட ஐரோப்பிய சாதனை, 60 மீட்டர் விரைவோட்ட இத்தாலிய சாதனைகளைப் படைத்துள்ளார் . டோக்கியோவில் 2020 கோடைகால ஒலிம்பிக்கில் இவர் சாதித்த ஆண்களின் 100 மீட்டர் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று வெற்றி பெற்ற முதல் இத்தாலிய வீரர் என்ற சிறப்பும் மார்சலுக்கு உண்டு. இதே போட்டியில் 4 × 100 மீ தொடரோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய அணியின் ஒரு பகுதியாகவும் மார்சல் இருந்தார்.

மார்சல் 2020-21 உள்ளரங்கப் போட்டியில் 60 மீட்டரில் உலக வெற்றியாளராக திகழ்ந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

மார்சல் இத்தாலியப் பெண்ணான விவியானா மசினி மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கரான லாமண்ட்டு மார்செல் யேக்கப்சு சீனியர் ஆகியோரின் மகன் ஆவார். இத்தாலியின் விசென்சாவில் உள்ள காசெர்மா எடெர்லேயில் பணியாற்றும் இவரது தந்தை அமெரிக்க இராணுவ வீரராக இருந்தபோது இவரது பெற்றோர் சந்தித்துக் கொண்டனர். அந்த நேரத்தில் மார்சலின் தந்தைக்கு 18 வயதும் தாய்க்கு 16 வயதுமாகும்.

பெற்றோர் திருமணம் செய்து டெக்சாசின் எல் பாசோவில் உள்ள போர்ட்டு பிளிசுக்கு இடம் பெயர்ந்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மார்சல் யேக்கப்சு பிறந்தார். மார்சல் மூன்று வார குழந்தையாக இருந்தபோது தந்தை தென் கொரியாவுக்கு மாற்றப்பட்டார் மார்சல் யேக்கப்சு தனது தாயுடன் இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள டெசென்சானோ டெல் கார்டாவுக்குச் சென்றார். மார்சல் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது பெற்றோர் பிரிந்தனர்.

சிறுவயதில் மார்சல் கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அங்கு இவரது கால்பந்து பயிற்சியாளர் அட்ரியானோ பெர்டாசி மார்சலின் ஓட்ட வேகத்தைக் கவனித்து மார்சலை விரைந்து ஓட முயற்சிக்குமாறு பரிந்துரைத்தார்.

யேக்கப்சு தனது பத்து வயதில் தடகளத்தில் போட்டியிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஓட்டப்பந்தயங்களில் ஓட விரும்பினார். பின்னர் 2011 ஆம் ஆண்டு இவர் ஆர்வம் நீளம் தாண்டுதலுக்குச் சென்றது.

தடகள வாழ்க்கை

2016 ஆம் ஆண்டில், யேக்கப்சு இத்தாலிய தடகள வெற்றியாளர் பொட்டியில் நீளம் தாண்டுதலில் வென்றார். தனிப்பட்ட முறையில் 8.07 மீ. இவருடைய சாதனையாகும். 2017 உள்ளரங்க பருவத்தின் இறுதியில் உலகத் தடகள வீரர்களின் முன்னணி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தாலிய 23 வயதுக்குட்பட்டோர் வெற்றியாளர் போட்டியில் இவர் 8.48 மீ தொலைவை தாண்டினார். ஒரு இத்தாலியரின் சிறந்த செயல்திறன் சாதனை என்றாலும் இந்த முடிவு ஒரு தேசிய சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை.

நீளம் தாண்டலில் அடிக்கடி காயங்கள் ஏற்பட்டதால் 2019 ஆம் ஆண்டில் இவர் தனது முயற்சிகளை மீண்டும் விரைவோட்டப் பந்தயங்களுக்கு பிரத்தியேகமாக மாற்ற முடிவு செய்தார்.

இதே 2019 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் மார்சல் தனது 100 மீட்டர் விரைவோட்டத்தை 10.03 வினாடிகளாகக் குறைத்து வரலாற்றில் மூன்றாவது வேகமான இத்தாலியராக ஆனார்.

2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதி போலந்தின் டோரன் நகரில் நடைபெற்ற 2021 ஐரோப்பிய தடகள உள்ளரங்க வெற்றியாளர் போட்டியில் 60 மீட்டர் ஐரோப்பிய பட்டத்தை வென்றார். பந்தய தொலைவை 6.47 வினாடிகளில் ஓடி புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் 16 அன்று இத்தாலியின் சவோனாவில் நடைபெற்ற போட்டியில் இவர் 100 மீட்டரை 9.95 வினாடிகளில் ஓடி இத்தாலிய சாதனையைப் படைத்தார் இதன்மூலம் 100 மீ விரைவோட்ட வரலாற்றில் 150 ஆவது நபராகவும் 10 வினாடிகள் தடையை உடைத்த இரண்டாவது இத்தாலியராகவும் ஆனார். ஜூன் 2021 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் நடைபெற்ற ஒரு போட்டியில் 100 மீ விரைவோட்டப் போட்டியை வெற்றி பெற்று நான்காவது முறையாக தேசிய சாதனை நிகழ்த்தினார்.

2020 ஒலிம்பிக் போட்டிகள்

யேக்கப்சு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 60 மீட்டர் விரைவோட்ட உலக வெற்றியாளர் என்ற தகுதியுடன் வந்தார். தனது முதல் சுற்று 100 மீட்டர் ஓட்டத்தை 9.94 நொடிகளில் கடந்து அச்சுற்றை வென்றார். தனது சொந்த இத்தாலிய சாதனையை இச்சுற்றில் மேம்படுத்தினார். அரையிறுதியில் இவர் 9.84 நொடிகளில் ஓடி மூன்றாவது இடத்தில் இருந்தார். இதுவும் ஒரு புதிய ஐரோப்பிய சாதனையாகும். மூன்றாவது ஒட்டுமொத்த வேகம் என்ற தகுதியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இத்தகைய இறுதிப் போட்டி சாதனையை நிகழ்த்திய முதல் இத்தாலியரும் இவர்தான்.

இறுதிப்போட்டியில் மார்சல் பிரெட் கெர்லி மற்றும் ஆண்ட்ரே டி கிராசே ஆகியோருக்கு முன்னால் 9.80 நொடிகளில் முடிவுக் கோட்டைத் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார் . இவரது ஓட்டம் ஒரு புதிய ஐரோப்பிய சாதனையை படைத்தது. அமெரிக்கா அல்லது சமைக்கா இல்லாமல் வேறொரு நாட்டிலிருந்து வந்த ஒரு தடகள வீரரின் மிக விரைவான நேரம் என்ற சிறப்பையும் பெற்றது. , யேக்கப்சு எல்லா காலங்களுக்குமான தரவரிசையில் 10 ஆவது அதிவேகமான மனிதர் ஆனார். யேக்கப்சு பந்தயத்தில் வெற்றி பெறுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. வல்லுநர்கள் இவருக்கு மூன்று சதவிகிதம் வெற்றி வாய்ப்பையே வழங்கியிருந்தனர்.

4 × 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் லோரென்சோ பாட்டா, பாசுட்டோ தேசாலு, பிலிப்போ டோர்டு உட்பட்ட இத்தாலிய அணியின் ஒரு பகுதியாக யேக்கப்சும் இடம்பெற்று இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார் - இத்தாலி இந்த போட்டியில் முதன்முறையாக வென்றது. மார்சல் அணியின் இரண்டாவது 100 மீட்டரை ஓடி புதிய இத்தாலிய சாதனை படைத்தார்.

புள்ளியியல்

தேசிய சாதனைகள்

  • 60 மீட்டர்: 6.47, மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோருன், 6 மார்ச்சு 2021..
  • 100 மீட்டர்: 9.80, மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோக்கியோ, 1 ஆகத்து 2021..
  • 4×100 மீ தொடரோட்டம்: 37.50, மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோக்கியோ, 6 ஆகத்து 2021. இரண்டாவது 100 மீட்டரை இவர் ஓடினார்.

தனிநபர் சாதனைகள்

போட்டி நேரம் இடம் நாள் குறிப்பு
60 மீ 6.47 நொடிகள் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோருன் 6 மார்ச்சு 2021 உள்ளரங்கம்
100 மீ 9.80 நொடிகள் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோக்கியோ 1 ஆகத்து 2021
200 மீ 20.61 நொடிகள் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  கேம்பி பிசென்சியோ 6 மே 2018
நீளம் தாண்டல் 8.07 மீட்டர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  தூனிசு 4 பிப்ரவரி 2017 உள்ளரங்கம்
8.48 m மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  பிரெசனோன் 10 சூன் 2016

சாதனைகள்

ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு புள்ளி குறிப்பு
2016 2016 மத்தியதரைக்கடல் 23 வயதுக்குட்பட்டோர் தடகளம் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  தூனிசு 1 நீளம் தாண்டல் 7.95 மீ
2016 ஐரோப்பிய தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  ஆம்சுடர்டாம் 11 நீளம் தாண்டல் 7.59 மீ
2017 ஐரோப்பிய உள்ளரங்கத் தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  பெல்கிறேடு காலிறுதி நீளம் தாண்டல் 7.70 மீ
2018 2018 ஐரோப்பிய தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  பெர்லின் அரையிறுதி 100 மீ 10.28
2019 2019 பன்னாட்டு உலகத் தொடரோட்டம் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  யோக்கோகாமா டி என் எப் 4×100 மீ தொடரோட்டம்
2019 ஐரோப்பிய அணி வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  பைத்கோசசு 2 100 மீ 10.39
ஐரோப்பிய உள்ளரங்கத் தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  கிளாசுக்கோ காலிறுதி நீளம் தாண்டல்
2019 உலகத் தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  தோகா அரையிறுதி 100 மீ 10.20
அரையிறுதி 4×100 மீ தொடரோட்டம் 38.11
2021 2021 ஐரோப்பிய உள்ளரங்க தடகள வெற்றியாளர் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோருன் 1 60 மீ 6.47
2021 உலகத் தொடரோட்டப் போட்டி மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  சோர்சோவ் 2 4×100 மீ தொடரோட்டம் 39.21
2020 ஒலிம்பிக் போட்டிகள் மார்சல் யேக்கப்சு: ஆரம்ப கால வாழ்க்கை, தடகள வாழ்க்கை, புள்ளியியல்  டோக்கியோ 1 100 மீ 9.80
1 4×100 மீ தொடரோட்டம் 37.50

மேற்கோள்கள்

 

Tags:

மார்சல் யேக்கப்சு ஆரம்ப கால வாழ்க்கைமார்சல் யேக்கப்சு தடகள வாழ்க்கைமார்சல் யேக்கப்சு புள்ளியியல்மார்சல் யேக்கப்சு மேற்கோள்கள்மார்சல் யேக்கப்சுஇத்தாலிதடகளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் வர்மாஇயற்கைவயாகராபெரியபுராணம்செக் மொழிகரணம்பெரியாழ்வார்பழனி முருகன் கோவில்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்ஆய்வுஜெயம் ரவிதமிழக வரலாறுகலித்தொகைகடல்சேக்கிழார்தமிழ்நாடு அமைச்சரவைகருப்பசாமிதேர்தல்ந. பிச்சமூர்த்திபோதைப்பொருள்சுற்றுச்சூழல்பால்வினை நோய்கள்அடல் ஓய்வூதியத் திட்டம்சுபாஷ் சந்திர போஸ்வினோஜ் பி. செல்வம்நவரத்தினங்கள்இன்ஸ்ட்டாகிராம்பதினெண்மேற்கணக்குஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்புனித யோசேப்புமே நாள்இந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைசங்க காலப் புலவர்கள்திராவிட முன்னேற்றக் கழகம்நிணநீர்க் குழியம்பறவைக் காய்ச்சல்ஜவகர்லால் நேருசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முதுமலை தேசியப் பூங்காஇராமர்வெ. இறையன்புஅரிப்புத் தோலழற்சிஇடைச்சொல்கொடைக்கானல்ரோகிணி (நட்சத்திரம்)பூரான்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திய அரசியலமைப்புவிவேகானந்தர்மு. மேத்தாபட்டா (நில உரிமை)சுற்றுலாபுதுமைப்பித்தன்இந்தியன் பிரீமியர் லீக்காற்றுசிறுகதைஇரசினிகாந்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திருமுருகாற்றுப்படைகேழ்வரகுகமல்ஹாசன்நாளந்தா பல்கலைக்கழகம்மேகக் கணிமைசிற்பி பாலசுப்ரமணியம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுகன்னி (சோதிடம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பொருளாதாரம்வீரமாமுனிவர்சுந்தரமூர்த்தி நாயனார்அழகர் கோவில்கேள்விகுடும்பம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)லிங்டின்கண் (உடல் உறுப்பு)🡆 More