மாமல்லபுரம் வராக மண்டபம்

மாமல்லபுரம் வராக மண்டபம் என்பது, சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று.

பாறை ஒன்றின் மேற்குப் புறத்தில் குடையப்பட்டு உள்ள இக்குடைவரை சிறியது எனினும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
வராக குகைக் கோயில்
வராக மண்டபம்
அடிவார குகைக் கோயில்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
மாமல்லபுரம் வராக மண்டபம்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii, iv
உசாத்துணை249
UNESCO regionAsia-Pacific
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8th தொடர்)
மாமல்லபுரம் வராக மண்டபம்
குகையில் உள்ள வராகர் சிற்பம்

அமைப்பு

இக்குடைவரையின் முகப்புப் பகுதி, தாங்குதளம், கைபிடிச் சுவர்களுடன் கூடிய படிகள், கபோதம் போன்ற உறுப்புக்களுடன் காணப்படுகின்றது. இக்குடைவரையின் மண்டபத்தில் ஒரு தூண் வரிசை மட்டுமே உள்ளது. முகப்பை அண்டி அமைந்த இவ்வரிசையில் இரண்டு முழுத்தூண்கள் உள்ளன. பக்கச் சுவர்களோடு ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்கள் அமைந்துள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் யாளியின் வடிவில் உள்ளது. முழுத்தூண்களில் யாளிகள் முன்புறம் நோக்கியவாறும், அரைத்தூண்களில் சுவருக்கு எதிர்ப்புறம் நோக்கியவாறும் அமைந்துள்ளன. தூண்களின் மேற்பகுதி எட்டுப்பட்டை கொண்டதாகவும், பல்வேறு தூண் உறுப்புக்களுடன் கூடியதாகவும் உள்ளது. மேலே போதிகைகள் உள்ளன.

மண்டபத்தின் பின்புறச் சுவரில் ஒரேயொரு கருவறை உள்ளது. இது மண்டபத்துக்குள் துருத்திக்கொண்டு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குச் செல்வதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிற்பங்கள்

கருவறையின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பூமாதேவியைத் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி சிற்பம் வடக்குச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. தெற்குச் சுவரில் திருவிக்கிரமன், மூவுலகு அளந்த பெருமான் சிற்பத் தொகுதி உள்ளது. இவற்றைவிட, பின்புறச் சுவரில் திருமகளின் சிற்பமும், கொற்றவையின் சிற்பமும் உள்ளன.

இந்தக் குடைவரையில் வராகமூர்த்தியின் சிற்பம் இருப்பதால் இது வராக மண்டபம் என அழைக்கப்படுகிறது. எனினும், இக்கோயில் திருமாலின் இன்னொரு அவதாரமான நரசிம்மருக்காகவே அமைக்கப்பட்டது என்றக் கருத்தும் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

குடைவரைசென்னைமாமல்லபுரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிணநீர்க்கணுபச்சைக்கிளி முத்துச்சரம்மக்கள் தொகைவளைகாப்புமயக்கம் என்னஏ. வி. ரமணன்திருவோணம் (பஞ்சாங்கம்)கொன்றைஅகநானூறுவிந்தும. கோ. இராமச்சந்திரன்தமிழ்த்தாய் வாழ்த்துமூலம் (நோய்)சோழர்பிரசாந்த்கணையம்சைத்தான் (திரைப்படம்)வணிகம்டிராபிக் ராமசாமிமருதமலை முருகன் கோயில்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தஞ்சைப் பெருவுடையார் கோயில்நெடுநல்வாடைஉருவக அணிமாதம்பட்டி ரங்கராஜ்கருத்தரிப்புவாரணம் ஆயிரம் (திரைப்படம்)பனிக்குட நீர்மனித வள மேலாண்மைகலி யுகம்கு. அழகிரிசாமிவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ரா. பி. சேதுப்பிள்ளைஉலா (இலக்கியம்)மொழிகட்டுரைஅணி இலக்கணம்முலை வரிமராட்டியப் பேரரசுசின்ன வீடுமாடுதோழிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஐம்பெருங் காப்பியங்கள்கழுகுமலைவினையெச்சம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சங்க இலக்கியம்இடைச்சொல்விடை (இராசி)தமிழ் தேசம் (திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நந்திக் கலம்பகம்ஆங்கிலம்சூர்யா (நடிகர்)யானைகலைதமிழ் மன்னர்களின் பட்டியல்மரம்இதயம்தங்கராசு நடராசன்திருமலை நாயக்கர் அரண்மனைதிணை விளக்கம்உமாயூனின் சமாதிதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்புறப்பொருள் வெண்பாமாலைகேழ்வரகுவிளம்பரம்மக்களவை (இந்தியா)சாக்கிரட்டீசுகுற்றாலக் குறவஞ்சிமலையாளம்தமிழ் எழுத்து முறைஇரு நிலவுகள்பயில்வான் ரங்கநாதன்தினமலர்பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்🡆 More