மர்மோட்

15, see text

மர்மோட்
புதைப்படிவ காலம்:Late Miocene–Recent
மர்மோட்
மஞ்சள் வயிற்று மர்மோட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Xerinae
சிற்றினம்:
மர்மோட்டினிi
பேரினம்:
மர்மோட்டா

Blumenbach, 1779
இனங்கள்

மர்மோட் (Marmot) என்பவை மர்மோட் பேரினத்தில் கொறிணி இனத்தைச் சேர்ந்த பெரிய அணில் ஆகும். இவ்வினத்தில் 15 வகைகள் உள்ளன. இவற்றுள் சில மலைப்பகுதிகளில் குறிப்பாக ஆல்ப்ஸ் மலை, வட அபென்னைன் மலை, கார்பத்தீய மலைகள், தத்ரா மலைகள் மற்றும் ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசியாவில் பைரெனீசு மலைகளிலும் காணப்படுகின்றன. மேலும் சில வகைகள் வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடர், கருமலைகள், காஸ்கேடு மலைகள், பசிபிக் மலைகள் மற்றும் சியெரா நெவடா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவின் லடாக் பகுதியிலும் பாக்கிஸ்தானின் தியோசாய் தேசியப்பூங்காவிலும் சில வகைகள் காணப்படுகின்றன. சில வட அமெரிக்கப் புல்வெளிப் பிரதேசங்களிலும் யுரேசியப் புல்வெளிகளிலும் பரவி வாழ்கின்றன. இதே போன்ற அளவு மற்றும் உருவ ஒற்றுமையுள்ள ஓர் உயிரினம் தரை நாய் ஆகும். ஆனால் அது மர்மோட் இனத்தைச் சேர்ந்ததல்ல.

வாழ்க்கை

பொதுவாக மர்மோட்டுகள் புதர்களிலும் தரைகளில் வளை அமைத்து வாழும் விலங்காகும். மஞ்சள் வயிற்று மர்மோட்டுகள் பாறைக்குவியல்களுக்கிடையேயும் வாழும். இவை குளிர்காலங்களில் மூன்று மாதங்கள் நீண்ட துயிலுக்கு ஆட்படும். மர்மோட்டுகள் சமூகமாகக் கூடி வாழும் விலங்குகள் ஆகும். ஆபத்துகள் ஏதேனும் தென்படின் இவை தங்களுக்கிடையே ஒலி எழுப்பி மற்ற மர்மோட்டுகளை எச்சரிக்கும். இவை புற்கள், பழங்கள், மரப்பாசிகள், பாசிகள், வேர்கள் மற்றும் பூக்களை உண்ணும் தாவர உண்ணிகளாகும்.

உடல் அமைப்பு

இவ்வகைக் கொறிணிகள் வகைக்கேற்ப நீண்டும் பளுவானதாயும் இருக்கும். சாதாரணமாக இவற்றின் எடை 3 முதல் 7 கி.கி வரை(6.6 முதல் 15.4 பவுண்டுகள்) இருக்கும். இவை குளிர் பிரதேசங்களுக்கேற்ற வாழ் தகவமைப்பு கொண்டவை. உடல் மற்றும் காது முழுவதும் மயிர் மூடிக் காணப்படும். இவற்றின் சிறிய கால்கள் மற்றும் வலுவான நகங்கள் வளை தோண்டுவதற்கு உதவும். முழு உடலும் 30 முதல் 60 செ. மீ (11.8 டொ 23. 6 அங்குலம்) நீளம் கொண்டவை. இதன் வால் மட்டும் 10 செ.மீ முதல் 25 செ.மீ வரை இருக்கும். இதன் உடல் முழுதும் உள்ள நீண்ட அடர்ந்த மயிரானது நீண்ட நார் போன்று மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். பழுப்பு, செம்பழுப்பு, கருப்பு மற்றும் சாம்பலும் வெண்மையும் கலந்த நிறங்களிலும் இருக்கும்.

மேற்கோள்கள்

மர்மோட் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மர்மோட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுபாணாற்றுப்படைசுதேசி இயக்கம்அரிப்புத் தோலழற்சிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிரபுதேவாகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சிவம் துபேதமிழ் எண்கள்ராம் சரண்பி. காளியம்மாள்மாணிக்கம் தாகூர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஅமேசான்.காம்அகழ்ப்போர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தேனீமண் பானைசென்னைஇசுலாமிய நாட்காட்டிமியா காலிஃபாமறைமலை அடிகள்அகநானூறுமகாபாரதம்திருத்தணி முருகன் கோயில்சிங்கப்பூர்சீறாப் புராணம்மண்ணீரல்திருவோணம் (பஞ்சாங்கம்)விவேகானந்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அயோத்தி இராமர் கோயில்தப்லீக் ஜமாஅத்யாவரும் நலம்பாசிப் பயறுசத்குருதமிழ்ப் புத்தாண்டுசீமான் (அரசியல்வாதி)விரை வீக்கம்நான்மணிக்கடிகைரோபோ சங்கர்வாணிதாசன்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிசுக்ராச்சாரியார்சு. வெங்கடேசன்நம்மாழ்வார் (ஆழ்வார்)பெண்களின் உரிமைகள்ந. பிச்சமூர்த்திதாஜ் மகால்கம்பராமாயணம்மூன்றாம் பானிபட் போர்ஞானபீட விருதுதபூக் போர்வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியாநாடாளுமன்ற உறுப்பினர்தமிழ் நாடக வரலாறுவினையெச்சம்அகத்தியர்ருதுராஜ் கெயிக்வாட்நோட்டா (இந்தியா)நீக்ரோவே. செந்தில்பாலாஜிதமிழர் அளவை முறைகள்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்வினைச்சொல்கர்ணன் (மகாபாரதம்)வட சென்னை மக்களவைத் தொகுதிவேற்றுமைத்தொகைசரண்யா துராடி சுந்தர்ராஜ்இரட்சணிய யாத்திரிகம்தேவதாசி முறைசிதம்பரம் நடராசர் கோயில்சப்ஜா விதைவெ. இராமலிங்கம் பிள்ளைகுருதிப்புனல் (திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)ஈரோடு தமிழன்பன்🡆 More