மரனவு மக்கள்

மரனவு மக்கள் (Maranao People), பிலிப்பீன்சில் வாழும் இசுலாமிய மக்கள் ஆவர்.

இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்களை உருவாக்குவதில் வல்லுனர்கள். மரனவு என்ற சொல்லுக்கு ஏரியில் வாழும் மக்கள் என்று பொருள். பிலிப்பைன்சின் ஆறாவது பெரிய இனக்குழுவான இவர்கள் லனவு என்ற ஏரிக்கருகில் வாழ்கிறார்கள்.

பண்பாடும் பழக்கவழக்கங்களும்

மொழி

மரனவு மொழி ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழியை பிலிப்பைன்சின் மாகாணங்களில் வாழும் மரனவு மக்கள் பேசுகின்றனர். பெரும்பான்மையினர் ஆங்கிலம், தகலாகு மொழிகளையும் பேசுகின்றனர்.

கலை

மரனவு மக்கள் 
சரிமனோக் பறவையுடன் காணப்படும் நாட்டுப்புறக் கலை வேலைப்பாடு

நன்னம்பிக்கைப் பறவையான சரிமனோக் இவர்களின் கலை வேலைப்பாடுகளில் காணப்படும். வண்ணமயமான சிறகுகளுடனும் நீண்ட வால் கொண்டும், மீனைத் தன் அலகால் கொத்தியபடி நிற்குமாறு வரைந்திருப்பர்.

இசை

பியுலா என்னும் இசைக் கருவியினை வாசிப்பர். இவர்களின் இசையை யுனெசுக்கோ மனிதகுலத்தின் சிறந்த இசைகளில் ஒன்று எனப் போற்றியுள்ளது.

உணவு

இவர்களின் உணவுகளில் காரம் அதிகமாக இருக்கும். எண்ணெயும் மிளகாயும் கலந்த உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்பர். உணவைப் பற்றிய இசுலாமியக் கதை மிகவும் பிரசித்தி பெற்றது. இவர்கள் வாழ்வில் உணவு முக்கியப் பங்காற்றுகிறது.

மக்கள்

மரனவு மக்களின் எண்ணிக்கை 1,142,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அரேபிய, இந்திய, மலாய், ஜாவனிய மக்களின் கலப்பினத்தவர் ஆவர். ஏறத்தாழ அனைவரும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர். எசுப்பானியர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன் இவர்கள் தாங்களே இப்பகுதிகளை ஆண்டனர்.

மேற்கோள்கள்

Tags:

மரனவு மக்கள் பண்பாடும் பழக்கவழக்கங்களும்மரனவு மக்கள் மக்கள்மரனவு மக்கள் மேற்கோள்கள்மரனவு மக்கள்இசுலாம்பிலிப்பீன்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வாட்சப்கலாநிதி மாறன்ஏலாதிவெ. இராமலிங்கம் பிள்ளைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மாமல்லபுரம்புணர்ச்சி (இலக்கணம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்தார்த்கிறிஸ்தவச் சிலுவைகாதல் கொண்டேன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கரணம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஹோலிபெரும்பாணாற்றுப்படைபிள்ளையார்இந்திய தேசியக் கொடிபாரிவிளையாட்டுபிலிருபின்குண்டூர் காரம்பாண்டியர்பெண் தமிழ்ப் பெயர்கள்பழனி பாபாமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்விலங்குபசுமைப் புரட்சிகெத்சமனிஅருணகிரிநாதர்காற்று வெளியிடைகுணங்குடி மஸ்தான் சாகிபுசிலப்பதிகாரம்நாடார்சிலம்பம்கோயம்புத்தூர்இலிங்கம்திருமணம்உன்னாலே உன்னாலேமுல்லைப்பாட்டுமுக்கூடற் பள்ளுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குர்ஆன்இந்தியப் பொதுத் தேர்தல்கள்இந்தியப் பிரதமர்கொங்கு வேளாளர்வினோஜ் பி. செல்வம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுபிரபுதேவாஇந்திமு. வரதராசன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சடுகுடுஜோதிமணிஹாலே பெர்ரிபழமொழி நானூறுகுருதி வகைபண்பாடுஈரோடு மக்களவைத் தொகுதிஏ. ஆர். ரகுமான்ஐஞ்சிறு காப்பியங்கள்குத்தூசி மருத்துவம்தங்கம்ஆசிரியர்ஐங்குறுநூறுமண் பானைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சிவவாக்கியர்பிரெஞ்சுப் புரட்சிமஞ்சும்மல் பாய்ஸ்ஐக்கிய நாடுகள் அவைபெரிய வியாழன்பொது ஊழிஇந்திய நாடாளுமன்றம்சுந்தர காண்டம்கிறித்தோபர் கொலம்பசுஇந்திய ரிசர்வ் வங்கி🡆 More