மசுகெத்தியர்

மசுகெத்தை ஏந்தி போரிடும் வீரரை மசுகெத்தியர் (பிரெஞ்சு மொழி: mousquetaire) என்பர். முற்கால நவீன (ஐரோப்பிய மற்றும் மேற்குலக) படைகளின் முக்கிய அங்கமாக மசுகெத்தியர்கள் திகழ்ந்தனர்.

மசுகெத்தியர்களே புரிதுமுக்கியர்களுக்கு முன்னோடிகள் ஆவர். 1850-களில் மத்தியில், பெரும்பாலான மேலைநாட்டு படைகளில், மசுகெத்துகளின் இடத்தை புரிதுமுக்கிகள் பெற்றுவிட்டன.

மசுகெத்தியர்
1608-ல் ஜேகப் டி கெயினால் வரையப்பட்ட, மசுகெத்தை ஏந்தி நிற்கும், நெதர்லாந்து மசுகெத்தியர்

ஆசியா 

மசுகெத்தியர் 
சீன மிங் அரசமரபின் மசுகெத்தியர்கள் 
மசுகெத்தியர் 
ஓர் முகலாயப் பதாதியின் வரைபடம்.

சீனம்

மசுகெத்தியர் 
மிங் அரசமரபு "முதல்நிலை  இயந்திரத் துப்பாக்கி"

குறைந்தது 14-ஆம் நூற்றாண்டில் இருந்து, சீனாவில் மசுகெத்துகள் இருந்திருக்க வேண்டும். மிங் (1368–1644) மற்றும் சிங் அரசமரபுகளில் (1644–1911) மசுகெத்தியர்கள் இருந்துள்ளனர். தொடச்சியாக சுடும் துப்பாக்கியையும் சீனர்கள் உருவாக்கினர், அதில் சிறிய மரக் கவசதிற்குபின் பல குழல்கள் இருந்தன (படத்தில் காண்க): சுடுநர் குழல்களை திருப்பி ஒவ்வொன்றாக வெடிக்க வைப்பார். நீதம் இதை "முதல்நிலை இயந்திரத் துப்பாக்கி" என குறிப்பிட்டார்.

உதுமானியப் பேரரசு

உதுமானியப் படையின் புகழ்பெற்ற யேனிச்செரி  வீரர்கள், திரி-இயக்க மசுகெத்தை 1440-களின் ஆரம்பத்திலேயே உபயோகித்துள்ளனர். துருக்கியை மையமாகக் கொண்டு அரேபியா வரை நீண்டிருந்த, உதுமானிய பேரரசு (தற்கால இசுதான்புல்லான) கான்சுதாந்தினோபில்லை கைப்பற்ற மசுகெத்துகளை உபயோகித்தது. இராணுவ மோதல்களில் மசுகெத்தை ஆரம்பகாலத்திலேயே பயன்படுத்தியவர்களுள், உதுமானியப் பேரரசும் ஒன்றாகும். பெரும் துருக்கிய பீரங்கி மற்றும் இதர தீமூட்டும் கருவிகளும் இவர்களால் பயன்படுத்தப்பட்டது. மசுகெத்துகளை கப்பல்களில் முதலில் பயன்படுத்தியவர்களும் இவர்களே.

இந்தியா 

மசுகெத்தை முகலாயர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, இவை இந்தியப்போர்களில் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. இவை பலம்பொருந்திய யானைப்படைக்கு எதிரான ஓர் முக்கிய கருவியாகும். முகலாயர்களும் (மராட்டியர்கள்ராஜபுத்திரர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட) இந்தியர்களும், மசுகெத்தியர்களை பயன்படுத்தினர். 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் பல இந்திய துமுக்கிக் கொல்லர்கள் இருந்தனர், அவர்கள் வழக்கமான மசுகெத்துகளையும் ஒருங்கிணைந்த ஆயுதங்களையும் உருவாக்கினர்.

ஐரோப்பா 

எசுப்பானியம் 

மசுகெத்தியர் 
ஓர் தெர்சியோமசுகெத்தியர் (தோராயமாக 1650)

எசுப்பானிய படைகளில், தெர்சியோஎன்பது 3,000 ஈட்டிவீரர்கள், வாள்வீரர்கள், மற்றும் மசுகெத்தியர்களை கொண்ட ஒரு கலப்பு-பதாதிகளின் அணிவகுப்பாகும். 

ருசியம் 

மசுகெத்தியர் 
1674-ல் ஸ்திரேல்சி

ஸ்திரேல்சி (ருசியம்: Стрельцы, பொருள்: சுடுநர்) என்பவர், 16-ல் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகள் வரை இருந்த, சுடுகலன் மற்றும் கோடரியீட்டி ஏந்திய வீரர் ஆவார். 

1545-க்கும் 1550-க்கும் இடையில் கொடூரமான இவானால் கொக்கித்துமுக்கி ஏந்திய முதல் ஸ்திரேல்சி படை உருவானது.

மசுகெத்தியர்களே புரிதுமுக்கியர்களுக்கு முன்னோடிகள் ஆவர். 1850-களில் மத்தியில், பெரும்பாலான மேலைநாட்டு படைகளில், மசுகெத்துகளின் இடத்தை புரிதுமுக்கிகள் பெற்றுவிட்டன. 

பிரான்சு 

மசுகெத்தியர் 
1660–1814 காலத்திற்கு இடையே பிரெஞ்சு மசுகெத்தியர்களின் சீருடைகள்.

ஆரம்பத்தில் அரசரின் மசுகெத்தியர்கள், மெசான் தியூ ருஆ அல்லது இராஜரீக வீட்டுடைமையின் இராணுவப்பிரிவின் ஓர் அங்கமாக இருந்தது. 1622-ல், பதிமூன்றாம் லூயி ஓர் கம்பெனி இலரகுரக குதிரைப்படையை (கார்பைனியர், இவரின் தந்தை நான்காம் ஹென்றியால்  தோற்றுவிக்க பட்டனர்) அமைக்கும்போது இவர்கள் உருவானார்கள்.

இராஜ பாதுகாப்பின் ஒரு அங்கமாக இருந்தாலும், மசுகெத்தியர்கள் இராஜ குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததில்லை. பாரம்பரிய மெய்க்காவலர் பணிகளை, கார்து தியூ கோர் மற்றும் சுவிஸ் காப்பாளர்கள் தான் மேற்கொண்டனர்.  

அரசரின் மசுகெத்தியர்கள் இராஜ தயவை பெற்றிருந்ததால், அடிக்ககடி தர்பாரில் காணப்பட்டனர். இவர்களை உருவாக்கிய சிலகாலத்திலேயே, கர்தினால் ரீஷலியு அவருக்கென ஒரு மெய்காப்பாளர் அணியை உருவாக்கினார்.  

அரசரின் மெய்க்காப்பாளர்களுக்கு 'கார்து தியூ கோர்' என பெயரிட்டதுபோல், ரீஷலியு அவரது மெய்காப்பாளர்களுக்கு பெயரிடவில்லை, ஏனெனில் அவ்வாறு பெயரிட்டால் அரசரின் மாண்பிற்கு குந்தகம் விளைவிப்பதுபோல் ஆகிவிடும் என்பதால்தான். இதுவே இவ்விரு மசுகெத்திய அணியினருக்கு இடையே பகைமையை உண்டாக ஆரம்பப்புள்ளி ஆகும்.

1642-ல் கர்தினாலின் மறைவுக்குப்பின், அவர்பின் வந்த கர்தினால் மெசாரானிடம் அந்த அணி ஒப்படைக்கப்பட்டது. 1661-ல் மெசாரான் மறைந்தபின், பதினான்காம் லூயி இவ்விரு மசுகெத்திய அணிகளையும், இரு கம்பெனி குதிரைக்காவலர் படைபிரிவுகளாக மறுசீரமைத்தார்.

அரசரின் மசுகெத்தியர்கள் முதலாம் கம்பெனி ஆகி, சாம்பற் நிற குதிரையில் சவாரி செய்ததால் "சாம்பற் மசுகெத்தியர்கள்" (mousquetaires gris) என அழைக்கப்பட்டனர். அதேபோல், கர்தினாலின் மசுகெத்தியர்கள் இரண்டாம் கம்பெனி ஆகி, கருப்பு நிற குதிரையில் சவாரி செய்ததால் "கருப்பு மசுகெத்தியர்கள்" (mousquetaires noirs) என அழைக்கப்பட்டனர்.

சுவீடன் 

கஸ்டாவஸ் அடால்பசின் இராணுவ சீர்திருத்தங்களால் சுவீடன் படைகள் 17-ஆம் நூற்றாண்டில் பெரும் சக்தியாக உருவானது குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியம் 

மசுகெத்தியர் 
பிரித்தானிய மசுகேத்தியர். (19-ஆம் நூற்றாண்டு)

பிரித்தானிய பேரரசின், பிரத்தியேக "ரெட்கோட்" தான், வரலாற்றின் மாபெரும் பேரரசை உருவாக்கிய பிரித்தானியப் படைகளின் பிரதான பிரிவு. பிரித்தானிய பதாதிகள், ௦.75 குழல்விட்டமுள்ள, லேன்ட் பேட்டர்ன் மசுகெத்து, அல்லது பிரவுன் பெஸ்ஸை கொண்டிருந்தனர். நன்கு தேர்ந்த ரெட்கோட்டினால், நிமிடத்திற்கு நான்கு முறை சுடமுடியும்.

மேலும் பார்க்க 

  • புரிதுமுக்கியர்
  • துப்பாக்கி மத்தியில் ஈட்டி அணிவகுப்பு 

படிமம் 

மூலங்கள் 

மேற்கோள்கள் 

உசாத்துணை

இந்தக் கட்டுரை  பிரஞ்சு விக்கிப்பீடியாவில் இருக்கும் Mousquetaire கட்டுரையின் பகுதியை அடிப்படையாகக் கொண்டது, 9 செப்டம்பர் 2006 அன்று பெறப்பட்டது.

Tags:

மசுகெத்தியர் ஆசியா மசுகெத்தியர் ஐரோப்பா மசுகெத்தியர் மேலும் பார்க்க மசுகெத்தியர் படிமம் மசுகெத்தியர் மூலங்கள் மசுகெத்தியர் மேற்கோள்கள் மசுகெத்தியர் உசாத்துணைமசுகெத்தியர்பிரெஞ்சு மொழிமரைகுழல் துப்பாக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தைப்பொங்கல்நாம் தமிழர் கட்சிஒட்டுண்ணி வாழ்வுஇசுலாமிய நாட்காட்டிமரபுச்சொற்கள்உளவியல்வரலாறுகுதிரைஆளுமைஅன்புஅகநானூறுஇந்திஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைரமலான்திருவாசகம்கருப்பு நிலாஸ்டீவன் ஹாக்கிங்நெடுநல்வாடைமுன்னின்பம்பதுருப் போர்வயாகராகார்லசு புச்திமோன்சின்னம்மைசத்ய ஞான சபைகடல்யாழ்அழகர் கோவில்ஆண் தமிழ்ப் பெயர்கள்சூல்பை நீர்க்கட்டிமயில்அயோத்தி தாசர்இனியவை நாற்பதுபாக்யராஜ்காம சூத்திரம்இன்ஸ்ட்டாகிராம்வட்டாட்சியர்சிறுகோள்தீரன் சின்னமலைஇணையம்பதினெண்மேற்கணக்குசங்க காலப் புலவர்கள்கு. ப. ராஜகோபாலன்ஈரோடு மாவட்டம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்செம்மொழிதிருவள்ளுவர் ஆண்டுகொல்லி மலைவிவேகானந்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்கல்விநவதானியம்இயோசிநாடிஊட்டச்சத்துஇந்திய வரலாறுபஞ்சாபி மொழிகள்ளுஏ. ஆர். ரகுமான்தமிழில் சிற்றிலக்கியங்கள்குடமுழுக்குபுகாரி (நூல்)போக்குவரத்துமூவேந்தர்திருப்பூர் குமரன்யூத்சே குவேராஅப்துல் ரகுமான்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இந்து சமய அறநிலையத் துறைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கரகாட்டம்ஹரிஹரன் (பாடகர்)திரு. வி. கலியாணசுந்தரனார்மலையாளம்தெலுங்கு மொழிதற்கொலை🡆 More