பிங்கால் மாகாணம்

பிங்கால் மாகாணம் (Bingöl Province, துருக்கியம்: Bingöl ili  ; Zazaki , Kurdish , ஆர்மீனியம்: Ճապաղջուր ) என்பது கிழக்கு அனத்தோலியாவில் உள்ள ஒரு துருக்கி மாகாணமாகும்.

இந்த மாகாணம் 1936 ஆம் ஆண்டில் எலாஸ் மற்றும் எர்சின்கானின் சில பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. புதிய மாகாணம் 1945 ஆம் ஆண்டு பிங்கால் மாகாணம் என பெயர் மாற்றப்படும் வரை சபகூர் மாகாணம் (ஆர்மீனிய பெயரான "சபாக்ஜூர்" என்பதிலிருந்து "முரட்டுத்தனமான நீர்" என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. இதன் அண்டை மாகாணங்களாக துன்செலி, ஏர்சுரம், மியூ, தியர்பாகர், எர்சின்கான், எலாசோ போன்றவை உள்ளன. இந்த மாகாணம் 8,125 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகையானது 255,170 ஆகும். இங்கு பேசப்படும் முக்கிய மொழிகளாக துருக்கியம், சசாகி மற்றும் குர்தி போன்றவை உள்ளன. மாகாணத்தின் தலைநகராக பிங்கல் உள்ளது. மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் ஜாசாக்கள் ஆவர். மாகாணத்தின் தற்போதைய ஆளுநரான, கதிர் எக்கின்சி 5 நவம்பர் 2018 அன்று சனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

பிங்கால் மாகாணம்
Bingöl ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் பிங்கால் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பிங்கால் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிமாலத்யா
அரசு
 • தேர்தல் மாவட்டம்பிங்கால்
 • ஆளுநர்கதிர் எக்கின்சி
பரப்பளவு
 • மொத்தம்8,125 km2 (3,137 sq mi)
மக்கள்தொகை (2018)
 • மொத்தம்2,81,205
 • அடர்த்தி35/km2 (90/sq mi)
தொலைபேசி குறியீடு0426
வாகனப் பதிவு12

வரலாறு

1935 திசம்பரில் துன்செலி சட்டம் நிறைவேற்றப்பட்டது, இது பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிறுவக் கோரியது. ஆகையால், தற்போதைய பிங்கால் மாகாணப் பகுதியானது துன்செலி, எர்சின்கான், எலாஜிக் மாகாணங்களுடன் 1936 ஜனவரியில் சேர்த்து நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் (உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) பிராந்திய நிர்வாகப் பிரிவில் சேக்ககபட்டது. இது நான்காவது யுஎம் ஆளுநர் தளபதியால் நிர்வகிக்கப்பட்டது. இத்னபடி நகராட்சிகளில் உள்ள அனைத்து ஊழியர்களும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஆளுநர் தளபதிக்கு அனைத்து கிராமங்களில் உள்ள மக்களை வெளியேற்றி இப்பகுதிக்கு மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து மக்களை மீள்குடியேற்றம் செய்ய அதிகாரம் இருந்தது. 1946 இல் துன்செலி சட்டம் ரத்து செய்யப்பட்டு அவசரகால நிலை நீக்கப்பட்டது, ஆனால் நான்காவது யுஎம் அதிகாரம் இராணுவத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் 1952 இல் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது.

மாவட்டங்கள்

பிங்கால் மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து சுட்டபட்டுள்ளது):

  • அடக்லே
  • பிங்கால்
  • ஜெனீ
  • கார்லோவா
  • கியோ
  • சோல்ஹான்
  • யேலடரே
  • யெடிசு

குறிப்புகள்

Tags:

அனத்தோலியாஆர்மீனியம்எர்சுரம் மாகாணம்குர்தி மொழிதிமிலி மொழிதுன்செலி மாகாணம்துருக்கிதுருக்கிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்திருநங்கைநம்ம வீட்டு பிள்ளைமுடியரசன்அறுபடைவீடுகள்நனிசைவம்முதுமொழிக்காஞ்சி (நூல்)இரவு விடுதிதீரன் சின்னமலைமுதற் பக்கம்செக் மொழிமீன்வால்ட் டிஸ்னிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நயினார் நாகேந்திரன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கடலூர் மக்களவைத் தொகுதிகுலுக்கல் பரிசுச் சீட்டுசெயற்கை நுண்ணறிவுஇந்தியன் (1996 திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபறையர்எஸ். சத்தியமூர்த்திஎம். ஆர். ராதாயானைஆண் தமிழ்ப் பெயர்கள்போதி தருமன்கிராம ஊராட்சிமயில்விவிலிய சிலுவைப் பாதைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்காம சூத்திரம்தேர்தல் நடத்தை நெறிகள்மு. வரதராசன்ஸ்ரீஹஜ்புற்றுநோய்மணிமேகலை (காப்பியம்)விவேக் (நடிகர்)பாஸ்காடார்வினியவாதம்நரேந்திர மோதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மூலிகைகள் பட்டியல்மலைபடுகடாம்மதயானைக் கூட்டம்தமிழக மக்களவைத் தொகுதிகள்சூரரைப் போற்று (திரைப்படம்)அ. கணேசமூர்த்திகட்டுரைஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பெண்பகத் சிங்யூடியூப்உப்புச் சத்தியாகிரகம்திருப்போரூர் கந்தசாமி கோயில்பால்வினை நோய்கள்முல்லைப்பாட்டுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இரட்டைக்கிளவிதென்னாப்பிரிக்காசுந்தர காண்டம்கர்மாசூரைஆளுமைஇந்திய அரசுபெயர்ச்சொல்துரை வையாபுரிஇராமச்சந்திரன் கோவிந்தராசுவெள்ளியங்கிரி மலைநாமக்கல் மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தெலுங்கு மொழிசுந்தரமூர்த்தி நாயனார்தி டோர்ஸ்🡆 More