பாலியல் வன்முறை: முன்னுர

பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி,மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும்.

ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே.

இந்தியாவில் பாலியல் வன்முறைகளின் போக்கு

தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின்படி, 1971 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையானது கிட்டத்தட்ட 873.3 சதமானம் அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பரிசீலனை செய்து பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தான் பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வந்துள்ளன என்பது ஊர்ஜிதமாகிறது. 1971 மற்றும் 1991ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையே வருடத்திற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் இந்த கால கட்டத்தில் பதிவாகியுள்ளன என்று கூறலாம். ஆனால் 1992 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கிடையில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,54,664 ஆகும். அதாவது ஆண்டிற்கு 15,466.4 பலாத்காரங்கள் பதிவாகியுள்ளன எனலாம். அதாவது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமலாகத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. சீர்திருத்தக் காலகட்டத்தின் சமீபத்திய பத்தாண்டுகளில் அதாவது 2002 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கிடையில் இந்த எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அள வில் அதிகரித்துள்ளது.இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ள பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 1,98,139 ஆகும். அதாவது ஆண்டிற்கு 19,813.9 குற்றங்கள் சராசரியாகப் பதிவாகியுள்ளன. இதற்கு என்ன பொருள் என்றால், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மொத்தம் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 97.5 சதமான குற்றங்கள் 1991 மற்றும் 2011ம் ஆண்டுகளுக் கிடையில் நடைபெற்றுள்ளது என்பது தான். மேலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த குற்றங்களின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது. 2009-2010ம் ஆண்டிற்கிடையில் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை என்பது 9.6 சதமானம் அதிகரித்துள்ளது. 2010-2011ம் ஆண்டிற்கிடையில் இந்த விகிதம் 9.2 சதமாக அதிகரித்துள்ளது. 2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டன. 2013ல் அது 33707 ஆக உயர்ந்தது. மாநகரம் என்று பார்த்தால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாக உள்ளனர் . அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப்பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர்.

தமிழகம்

தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேற்கோள்கள்

இவற்றையும் பாக்க

Tags:

பாலியல் வன்முறை இந்தியாவில் களின் போக்குபாலியல் வன்முறை மேற்கோள்கள்பாலியல் வன்முறை இவற்றையும் பாக்கபாலியல் வன்முறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகலம்பகம் (இலக்கியம்)முரசொலி மாறன்காவிரி ஆறுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுருகன்மனத்துயர் செபம்சிங்கம் (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சுற்றுச்சூழல்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதேம்பாவணிஉரிச்சொல்ஜன கண மனஅமுக்கப்பட்ட இயற்கை எரிவளிகோயம்புத்தூர்பழனி பாபாஎங்கேயும் காதல்எட்டுத்தொகைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆய கலைகள் அறுபத்து நான்குஉமறுப் புலவர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பெயர்ச்சொல்சூல்பை நீர்க்கட்டிகுருதிப்புனல் (திரைப்படம்)இரட்டைக்கிளவிஇலிங்கம்உவமையணிபெ. சுந்தரம் பிள்ளைபதிற்றுப்பத்துமக்களாட்சிவிராட் கோலிசிறுபாணாற்றுப்படைதபூக் போர்இரட்சணிய யாத்திரிகம்ஹர்திக் பாண்டியாபுனித வெள்ளிமெட்ரோனிடசோல்கல்லீரல்கருக்கலைப்புதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிநாலடியார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மனித உரிமைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதமிழ் மாதங்கள்சித்தர்புரோஜெஸ்டிரோன்தமிழ் எண்கள்அறுசுவைதமிழக மக்களவைத் தொகுதிகள்சீறாப் புராணம்மரபுச்சொற்கள்விடுதலை பகுதி 1கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி108 வைணவத் திருத்தலங்கள்பிரேமலதா விஜயகாந்த்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)சங்க காலப் புலவர்கள்கேரளம்தனுசு (சோதிடம்)ஆ. ராசாநயன்தாராஐக்கிய நாடுகள் அவைபால்வினை நோய்கள்தமிழ் நாடக வரலாறுஈகையூதர்களின் வரலாறுபாவலரேறு பெருஞ்சித்திரனார்நெடுநல்வாடை (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்கார்லசு புச்திமோன்நற்கருணைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்முல்லை (திணை)வீரப்பன்உயிர்ச்சத்து டி🡆 More