பத்மினி பிரியதர்சினி

பத்மினி பிரியதர்சினி (Padmini Priyadarshini) என அழைக்கப்பட்ட பத்மினி இராமச்சந்திரன் (Padmmini Ramachandran, செப்டம்பர் 8, 1944 - சனவரி 17, 2016) ஒரு தென்னிந்திய பரத நாட்டியக் கலைஞரும், திரைப்படத் துணை நடிகையும் ஆவார்.

1950களின் பிற்பகுதியில் சில தமிழ், கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பத்மினி பிரியதர்சினி
பத்மினி பிரியதர்சினி சகோதரி படத்தில்

வாழ்க்கைக் குறிப்பு

பத்மினி பிரியதர்சினி கேரள மாநிலத்தில் மாவேலிக்கரா என்ற ஊரில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். பின்னர் பெங்களூரில் நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, சிறந்த பல நடனக் கலைஞர்களை உருவாக்கினார். தனது நடனப் பள்ளி மாணவரக்ளுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அகாதமி விருது பெற்ற லைஃப் ஒஃப் பை (2012) திரைப்படத்தில் நட்டுவனாராக நடித்தார்.

குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள்

நடனக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்த பத்மினி, பல தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். சகோதரி படத்தில் ஆனந்தக்கோனாரின் (ஜே. பி. சந்திரபாபு) முறைப்பெண்ணாகவும், பாலாஜியை மயக்குபவராகவும் பால்காரி வேடத்தில் நடித்தார்.

பாத காணிக்கை படத்தில் சந்திரபாபுவின் ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

நடித்த (சில) திரைப்படங்கள்

தமிழ்

  1. நெஞ்சம் மறப்பதில்லை
  2. பாத காணிக்கை
  3. சகோதரி
  4. தேனிலவு
  5. பாக்தாத் திருடன்
  6. பெற்ற மனம்
  7. தெய்வபலம்
  8. இரத்தினபுரி இளவரசி
  9. இருவர் உள்ளம்
  10. மகாலட்சுமி
  11. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
  12. விடிவெள்ளி
  13. அன்னையின் ஆணை (நடனம்)
  14. இரு சகோதரிகள் (நடனம்)
  15. பக்த மார்க்கண்டேயா (நடனம்)

கன்னடம்

  1. பெத்தட கல்லா
  2. பக்த மார்க்கண்டேய
  3. ராயர சோஸ்
  4. ஜெகஜோதி பஸ்வேஸ்வரா

இந்தி

  1. தில் ஹி தோ ஹை
  2. தோ பெஹெனென் (1959)

மேற்கோள்கள்

Tags:

பத்மினி பிரியதர்சினி வாழ்க்கைக் குறிப்புபத்மினி பிரியதர்சினி குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்கள்பத்மினி பிரியதர்சினி நடித்த (சில) திரைப்படங்கள்பத்மினி பிரியதர்சினி மேற்கோள்கள்பத்மினி பிரியதர்சினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஒத்துழையாமை இயக்கம்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்அண்ணாமலையார் கோயில்கலம்பகம் (இலக்கியம்)பக்தி இலக்கியம்கட்டபொம்மன்பொருள் இலக்கணம்வாய்மொழி இலக்கியம்தில்லி சுல்தானகம்புவி சூடாதல்வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972ஐஞ்சிறு காப்பியங்கள்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்சூரியக் குடும்பம்பூக்கள் பட்டியல்நம்ம வீட்டு பிள்ளைகல்வெட்டுமகள் மறுத்தல்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அக்கி அம்மைநாட்டார் வழக்காற்றியல்இந்தியாவின் பொருளாதாரம்அம்பேத்கர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மெய்யெழுத்துதமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ் மாதங்கள்ஏற்காடுஇந்திய உச்ச நீதிமன்றம்மறைமலை அடிகள்திருமலை (திரைப்படம்)இராகவேந்திர சுவாமிகள்சின்னம்மைநுரையீரல் அழற்சிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தூது (பாட்டியல்)நன்னன்வல்லினம் மிகும் இடங்கள்கரந்தைத் திணைமேற்கு வங்காளம்புறப்பொருள் வெண்பாமாலைவே. செந்தில்பாலாஜிநீதி நெறி விளக்கம்அக்கினி நட்சத்திரம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமூலம் (நோய்)திருமூலர்இந்தியத் தேர்தல் ஆணையம்இடைச்சொல் விளக்கம்கலிங்கத்துப்பரணிநயன்தாராதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்காலநிலை மாற்றம்தூங்காதே தம்பி தூங்காதேவானிலையூடியூப்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வரிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நரேந்திர மோதிஅகமுடையார்வாகை சூட வாதினத்தந்திமுதுமொழிக்காஞ்சி (நூல்)சுதேசி இயக்கம்நீரிழிவு நோய்பூரான்உவமையணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வெப்பநிலைகாமராசர்மாமல்லபுரம்கேட்டை (பஞ்சாங்கம்)காட்டெருது🡆 More