துட்டகைமுனு

துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) (சிங்கள வழக்கில் துடுகெமுனு) என்பவன் இலங்கை வரலாற்றில் கி.மு.

161 முதல் கி.மு. 137 வரை ஆட்சி செய்ததாக மகாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசனாவான். இவனே அனுராதபுரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் அரசனான எல்லாளனுடன் போரிட்டவனாவான்.

துட்டகைமுனு
அனுராதபுரத்தின் அரசன்
துட்டகைமுனு
ஆட்சிகி.மு161 – கி.மு 137
முடிசூட்டு விழாகி.மு 161
முன்னிருந்தவர்எல்லாளன்
சத்தாதீசன்
அரசிஅரசி ரன்மனிக்க
முழுப்பெயர்
காமினி அபய (கைமுனு)
மரபுவிஜயன்
தந்தைகாவன் தீசன்
தாய்விகாரமஹதேவி
பிறப்புதிஸ்ஸமகாராம , அம்பாந்தோட்டை
இறப்புகி.மு 137

இவனை, சிங்கள அரசனாகவும், மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் பௌத்தம் பரவுவதற்கு காரணமானவனாகவும் மகாவம்சம் இவனை போற்றி புகழ்கிறது. மகாவம்சம் ஒரு இலக்கியமாகவும், அதன் பாட்டுடைத்தலைவனாக துட்டகைமுனுவும் குறிப்பிடப்படுகிறான்.

பெயர் வரக் காரணம்

இவன் எல்லாளனுடன் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடையே வளர்ந்தான். இவன் சிறிது பெரிதானதும் தனது தந்தையிடம் முதல்முறையாக "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான்.அ தற்கு அவனது தந்தை இப்பொழுது உன்னால் எல்லாளனுடன் போர் செய்ய முடியாது என்றார். சிறிது காலத்தின்பின் இரண்டாவது முறையாக தனது தந்தையிடம் "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான். அவனின் தந்தை திரும்பவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறையாகக் கேட்ட பொழுதும் அவனது தந்தை அதே பதிலளித்ததால் அவன் தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களை அனுப்பி "நீ ஒரு கோழை என்பதாலையே பெண்களைப்போல் பயப்படுகின்றாய். இதை அணிந்து கொண்டிரு" என்று கூறிவிட்டு மலை நாட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் இந்த இழிய செயலை செய்ததால் அவனுடைய பெயரில் துட்ட என்ற பெயரை சேர்த்து துட்டகைமுனு என்று அழைத்தனர்.

எல்லாளனுடனான போர்

எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகமுனுவின் படைகள் எல்லாளன் படையிடம் தோற்று பின்வாங்க ஆரம்பித்தன , போரில் தோல்வியை தவிர்ப்பதற்காக துட்டகைமுனு சாதுரியமாக, எல்லாளனை ஒற்றைச்சமருக்கு அழைக்க, யுத்த தர்மத்தின் படி எல்லாளனும் அதை ஏற்று போர் புரிந்தான், நீண்ட நேர சமருக்கு பிறகு, வயோதிகனான எல்லாளனை, துட்டகைமுனு வெற்றிபெற்றான், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி, அவனுக்கு சிலை எழுப்பி, மரியாதை செய்தான்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்


துட்டகைமுனு
பிறப்பு: ? ? இறப்பு: ? கி.மு 137
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
எல்லாளன்
அனுராதபுர மன்னன்
கி.மு 161 – கி.மு 137
பின்னர்
சத்தா திச்சன்


Tags:

துட்டகைமுனு பெயர் வரக் காரணம்துட்டகைமுனு எல்லாளனுடனான போர்துட்டகைமுனு இவற்றையும் பார்க்கதுட்டகைமுனு மேற்கோள்கள்துட்டகைமுனுஅனுராதபுரம்எல்லாளன்சிங்களம்தமிழ்மகாவம்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏலகிரி மலைமானிடவியல்சோழர்பாரத ரத்னாசினைப்பை நோய்க்குறிஆண்டு வட்டம் அட்டவணைசெஞ்சிக் கோட்டைகொல்லி மலைஜி. யு. போப்இன்னா நாற்பதுஇலட்சம்ஏப்ரல் 25கணையம்சாத்துகுடியானைமனித உரிமைரச்சித்தா மகாலட்சுமிஅக்கினி நட்சத்திரம்வினோஜ் பி. செல்வம்அறிவியல்பரதநாட்டியம்விசாகம் (பஞ்சாங்கம்)வேதம்ஆத்திசூடிதிரு. வி. கலியாணசுந்தரனார்நீதிக் கட்சிமூலம் (நோய்)தமிழ்நாடுகேரளம்மனித மூளைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுந்தரமூர்த்தி நாயனார்சுயமரியாதை இயக்கம்பெயர்பிள்ளையார்கபிலர்கழுகுஅயோத்தி இராமர் கோயில்புங்கைஅக்பர்நயினார் நாகேந்திரன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அம்பேத்கர்மாதம்பட்டி ரங்கராஜ்சிவபுராணம்நரேந்திர மோதிவிபுலாநந்தர்திருவரங்கக் கலம்பகம்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திக்கற்ற பார்வதிபயில்வான் ரங்கநாதன்முன்னின்பம்சுந்தர காண்டம்உரிச்சொல்இந்திய தேசிய சின்னங்கள்ஈ. வெ. இராமசாமிவெந்து தணிந்தது காடுஅளபெடைமணிமேகலை (காப்பியம்)எங்கேயும் காதல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சொல்மனித வள மேலாண்மைஅண்ணாமலையார் கோயில்அறுவகைப் பெயர்ச்சொற்கள்பித்தப்பைதட்டம்மைஅகமுடையார்கம்பராமாயணம்தேவேந்திரகுல வேளாளர்காடுவெட்டி குருகருத்தடை உறைகொடைக்கானல்மாற்கு (நற்செய்தியாளர்)அண்ணாமலை குப்புசாமி🡆 More