திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர் (Thirumalai Nayak), மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.

இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கர்
திருமலை நாயக்கர்
ஆட்சி1623–1659
முடிசூட்டு விழா1623
முன்னிருந்தவர்முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்
அரச குலம்மதுரை நாயக்கர்
பிறப்பு1584
மதுரை
இறப்பு1659
மதுரை

ஆரம்பகாலம்

இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயினு அய்யலுகாரு என்பதாகும். இவர் பலிஜா சமூகத்தை சேர்ந்தவர். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

ஆட்சிப் பகுதிகள்

திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்.

  1. திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள
  2. மதுரை,
  3. திண்டுக்கல்,
  4. ராமநாதபுரம்,
  5. சிவகங்கை,
  6. புதுக்கோட்டை,
  7. மணப்பாறை,
  8. கோயம்புத்தூர்,
  9. சேலம் மற்றும்
  10. திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
    இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.

கட்டிடக்கலை

திருமலை நாயக்கர் 
திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் 
நிறைவடையாத இராய கோபுரம்

தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார். திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராயகோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.

மணிமண்டபம்

திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.

பட்டங்கள்

திருமலை நாயக்கரின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் அவருக்கு பல பட்டப் பெயர்கள் இருந்துள்ளமை அறியமுடிகிறது. செப்பேடுகளில் இவரின் பெயரின் முன்பாக கச்சி என இட்டு, "கச்சி திருமலை" என்றே அழைப்பது வழக்கமாக உள்ளது.

  1. மும்முரசறையும் முத்தமிழ் வினோதன்
  2. தவனெறியுள்ளவன்
  3. சத்தியவாசகன்
  4. சிவநெறி தளைக்க திருநீறுமிட்டவன்
  5. சொக்கநாதருக்கு முக்கிய குணவான்
  6. கச்சியிலதிபதிபன்
  7. உச்சிதபோஜன்
  8. அச்சுத அரியின் மெச்சிய பாலன்
  9. வங்கி நாராயணன்
  10. மருவலர்கள் கண்டன்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திருமலை நாயக்கர் ஆரம்பகாலம்திருமலை நாயக்கர் ஆட்சிப் பகுதிகள்திருமலை நாயக்கர் கட்டிடக்கலைதிருமலை நாயக்கர் இதனையும் காண்கதிருமலை நாயக்கர் மேற்கோள்கள்திருமலை நாயக்கர் வெளி இணைப்புகள்திருமலை நாயக்கர்மதுரைமதுரை நாயக்கர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை வீரன்ஆவாரைகுடலிறக்கம்கணினிஉடன்கட்டை ஏறல்ஐங்குறுநூறுதிருத்தணி முருகன் கோயில்ஈரோடு தமிழன்பன்கன்னி (சோதிடம்)திருவோணம் (பஞ்சாங்கம்)முல்லை (திணை)புவிதிருக்குர்ஆன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்வேதாத்திரி மகரிசிகடையெழு வள்ளல்கள்மு. க. ஸ்டாலின்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழர் பருவ காலங்கள்அன்புமணி ராமதாஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பால்வினை நோய்கள்கீழடி அகழாய்வு மையம்அகத்தியர்மதீச பத்திரனதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இராவண காவியம்முத்தொள்ளாயிரம்டுவிட்டர்தனுஷ்கோடிதொல். திருமாவளவன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பாலை (திணை)பகவத் கீதைஆண்டு வட்டம் அட்டவணைகிராம சபைக் கூட்டம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உலக ஆய்வக விலங்குகள் நாள்ரயத்துவாரி நிலவரி முறைகருக்காலம்மகரம்மலைபடுகடாம்பிக் பாஸ் தமிழ்சீனாமரங்களின் பட்டியல்கி. ராஜநாராயணன்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்இந்தியாகுகேஷ்கன்னத்தில் முத்தமிட்டால்வெ. இறையன்புமோகன்தாசு கரம்சந்த் காந்திசுற்றுச்சூழல் பாதுகாப்புபுனித ஜார்ஜ் கோட்டைசிவாஜி (பேரரசர்)மாசாணியம்மன் கோயில்சீவக சிந்தாமணிநான் வாழவைப்பேன்தமிழச்சி தங்கப்பாண்டியன்தஞ்சாவூர்விந்துநைட்ரசன்இரத்தக்கழிசல்தேவாங்குவடிவேலு (நடிகர்)கடலோரக் கவிதைகள்இனியவை நாற்பதுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுயமரியாதை இயக்கம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வாலி (கவிஞர்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சுவாதி (பஞ்சாங்கம்)கம்பர்சீமான் (அரசியல்வாதி)மலேரியாஎச்.ஐ.விதிருமூலர்🡆 More