தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும்.

இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
தற்போது
கிரிஷ் சந்திர முர்மு

ஆகஸ்ட் 2020 முதல்
பரிந்துரையாளர்இந்தியப் பிரதமர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்6 ஆண்டுகள் அல்லது 65 அகவை வரை
(இரண்டில் முன்னதாக வருமவயம்)
முதலாவதாக பதவியேற்றவர்வி. நரகரி ராவ்
ஊதியம்90,000 (US$1,100)
இணையதளம்The Comptroller and Auditor General of India

அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது G.C.முர்மு பதவியில் உள்ளார். இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மகரிஷி செப்டம்பர், 2017ல் பதவியேற்றார். வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு,பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது.

அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்களின் பட்டியல்

எண். இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்காலத் தொடக்கம் பதவிக்கால முடிவு
1 வி. நரஹரி ராவ் 1948 1954
2 ஏ. கே. சந்தா 1954 1960
3 ஏ. கே. ராய் 1960 1966
4 எஸ். ரங்கநாதன் 1966 1972
5 ஏ. பாக்சி 1972 1978
6 ஜியான் பிரகாஷ் 1978 1984
7 டி. என். சதுர்வேதி 1984 1990
8 சி. ஜி. சோமையா 1990 1996
9 வி. கே. சங்லு 1996 2002
10 வி. என். கௌல் 2002 2008
11 வினோத் ராய் 2008 2013
12 ஷசி காந்த் ஷர்மா 2013 2017
13 இராசீவ் மகரிசி 2017 2020
14 கிரீஷ் சந்திர முர்மு 2020 தற்போது பதவியில்

ஆதாரம்:

மேற்கோள்கள்

8. இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆக கிரிஷ் சந்திர முர்மு சனிக்கிழமை பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

வெளி இணைப்புகள்

Tags:

இந்திய அரசியலமைப்புஇந்திய அரசுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)நாயன்மார்எல். இராஜாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மயில்பால் (இலக்கணம்)அபூபக்கர்முன்மார்பு குத்தல்பார்த்திபன் கனவு (புதினம்)சங்கர் குருகாதல் கொண்டேன்மனித எலும்புகளின் பட்டியல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மீனா (நடிகை)என்டர் த டிராகன்தேவநேயப் பாவாணர்சைவத் திருமுறைகள்சிங்கம் (திரைப்படம்)பனைநடுக்குவாதம்இசைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கர்மாகட்டுவிரியன்பாளையக்காரர்எச்.ஐ.விகணினிமலக்குகள்பொன்னியின் செல்வன் 1இராம நவமிகருப்பசாமிகிறிஸ்தவம்முடக்கு வாதம்சிறுநீரகம்மயக்கம் என்னமக்களாட்சிமூலம் (நோய்)அறம்காமராசர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உமறுப் புலவர்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுவில்லங்க சான்றிதழ்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்உடனுறை துணைசுற்றுச்சூழல் பாதுகாப்புதொடர்பாடல்மைக்கல் ஜாக்சன்பொது ஊழிதமிழ்நாடுமுத்தரையர்இந்திய தேசிய காங்கிரசுஇசுலாத்தின் ஐந்து தூண்கள்வாழைப்பழம்காதலன் (திரைப்படம்)டொயோட்டாயாதவர்கட்டற்ற மென்பொருள்ரக்அத்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருவண்ணாமலைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்திருப்பாவைஇணைச்சொற்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)தஞ்சாவூர்ராம் சரண்மதுரகவி ஆழ்வார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திராவிட மொழிக் குடும்பம்இசுரயேலர்யாப்பகூவாபாண்டியர்முருகன்ரமலான் நோன்புபுதிய ஏழு உலக அதிசயங்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)சமூகம்🡆 More