ஜோர்ன் உட்சன்

ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார்.

உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர்.

ஜர்ன் ஊட்சன்
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்டேனியர்
பிறப்பு(1918-04-09)9 ஏப்ரல் 1918
கோப்பன்ஹேகன், டென்மார்க்
இறப்பு29 நவம்பர் 2008(2008-11-29) (அகவை 90)
ஹெல்ஸிங்கர், டென்மார்க்
பணி
கட்டிடங்கள்ஓபெரா மண்டபம்
பாக்ஸ்வெர்ட் தேவாலயம்
குவைத் நாடாளுமன்றக் கட்டடம்
விருதுகள்பிரிட்ஸ்கர் பரிசு
ஜோர்ன் உட்சன்
சிட்னி ஓபெரா மண்டபம்

வாழ்க்கை

இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் ஒரு கப்பல் வடிவமைப்பாளருக்கு மகனாகப் பிறந்தார். டென்மார்க்கின் தொழில் நகரமான அல்போர்கில் வளர்ந்து டேனிய முடியரசின் நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். பின் ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளில் பணியாற்றி இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் கோப்பன்ஹேகனுக்கு வந்தார்.

1957ல் சீனா, யப்பான், இந்திய நாடுகளில் பயணமேற்கொண்டு வடிவமைப்பில் இணக்கம், அகம் புறங்களுக்கிடையேயான தொடர்பு முதலியனவற்றைக் கற்றார்.

ஓபெரா மண்டப வடிவமைப்பு

1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.

இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், ஊட்சனுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது. 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும் ஓபெரா மண்டபம், 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளச் சின்னமான இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.

பிற படைப்புகள்

இவருடைய மற்ற கட்டிடப்படைப்புகளில் சில

  • பிளானட்ஷ்டாட்டண் வீடமைப்புத் திட்டம் - லுண்ட், சுவீடன் (1958)
  • கிங்கோ வீடமைப்புத் திட்டம் - எல்சிங்கர் (1960)
  • குவைத் நாடாளுமன்றக் கட்டடம் (1972)

பட்டம்

ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள்

Tags:

ஜோர்ன் உட்சன் வாழ்க்கைஜோர்ன் உட்சன் ஓபெரா மண்டப வடிவமைப்புஜோர்ன் உட்சன் பிற படைப்புகள்ஜோர்ன் உட்சன் பட்டம்ஜோர்ன் உட்சன் மேற்கோள்கள்ஜோர்ன் உட்சன்ஆஸ்திரேலியாஉலகப் பாரம்பரியக் களம்குவைத்கோப்பன்ஹேகன்சிட்னிசிட்னி ஒப்பேரா மாளிகைநவீன கட்டிடக்கலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மத கஜ ராஜாதிட்டம் இரண்டுதிருவிழாஅன்புமணி ராமதாஸ்108 வைணவத் திருத்தலங்கள்வெப்பநிலைசூரியக் குடும்பம்சங்கம் மருவிய காலம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இல்லுமினாட்டிபீப்பாய்வாலி (கவிஞர்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்அரசியல் கட்சிபசுமைப் புரட்சிசிவனின் 108 திருநாமங்கள்திருப்பதிதிரைப்படம்தமிழ் இலக்கியம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ராதிகா சரத்குமார்காதல் தேசம்இந்திய வரலாறுவெந்தயம்ஐங்குறுநூறுவிவேகானந்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தொழிலாளர் தினம்இந்து சமய அறநிலையத் துறைமலையாளம்கங்கைகொண்ட சோழபுரம்கன்னியாகுமரி மாவட்டம்சென்னைமாணிக்கவாசகர்எட்டுத்தொகை தொகுப்புபாரத ரத்னாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நுரையீரல் அழற்சிநீர்ப்பறவை (திரைப்படம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஉளவியல்இடமகல் கருப்பை அகப்படலம்கொடைக்கானல்சுரதாதமிழ்நாட்டின் நகராட்சிகள்புறநானூறுரோசுமேரிசிவாஜி கணேசன்கட்டுரைஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபிரப்சிம்ரன் சிங்நாளந்தா பல்கலைக்கழகம்இந்தியத் தலைமை நீதிபதிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேனீசூல்பை நீர்க்கட்டிதேவாங்குசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நிர்மலா சீதாராமன்மருது பாண்டியர்புலிமுருகன்பகத் பாசில்பெண்களின் உரிமைகள்ஐக்கிய நாடுகள் அவைவிராட் கோலிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஜெயகாந்தன்முன்மார்பு குத்தல்பி. காளியம்மாள்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்இயோசிநாடிதெலுங்கு மொழிமூகாம்பிகை கோயில்காற்று வெளியிடைசீமான் (அரசியல்வாதி)சதுரங்க விதிமுறைகள்🡆 More