சியேர்ஸ் கோபுரம்

சியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும்.

கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமை பெற்றது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேசியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள்ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது. சிகாகோவின் பரவலாக அறியப்படும் சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.

சியேர்ஸ் கோபுரம்
சிகாகோ நதியிலிருந்து காணக்கூடிய சியேர்ஸ் கோபுரத்தின் தோற்றம்

இக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது.

காற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும்.

இவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை.

இவற்றையும் பார்க்கவும்

  • ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள்
  • உலகின் அதியுயர் அமைப்புகள்

Tags:

197019731997ஆகஸ்ட்இலினொய்ஸ்உலக வர்த்தக மையம் (1973–2001)கோலாலம்பூர்சிகாகோசீன குடியரசுதாய்ப்பே 101நியூயார்க்பெட்ரோனாஸ் கோபுரங்கள்மலேசியாமே 4வானளாவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிதாசன்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇசுலாம்குற்றியலுகரம்தமிழர் பருவ காலங்கள்ஜெயகாந்தன்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் எண் கணித சோதிடம்கயிறு இழுத்தல்மூசாகுறிஞ்சிப் பாட்டுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்இறைமைடார்வினியவாதம்தெலுங்கு மொழிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஓ. பன்னீர்செல்வம்முக்குலத்தோர்கர்மாபாண்டியர்அண்ணாமலையார் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்புணர்ச்சி (இலக்கணம்)பங்குனி உத்தரம்சி. விஜயதரணிவேதாத்திரி மகரிசிபகவத் கீதைமருதமலைமதீனாஇந்திதுரைமுருகன்திருக்குறள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிரஜினி முருகன்குடும்பம்பழமொழி நானூறுசைவத் திருமுறைகள்கயிறுஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பெரியபுராணம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்புறநானூறுநோட்டா (இந்தியா)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகெத்சமனிசெக் மொழிவேற்றுமையுருபுதிருமணம்கமல்ஹாசன்ஜெ. ஜெயலலிதாதமிழ்ஒளிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வரலாறுதிராவிட மொழிக் குடும்பம்அஸ்ஸலாமு அலைக்கும்இரண்டாம் உலகப் போர்பெங்களூர்இந்து சமயம்காம சூத்திரம்கருப்பை நார்த்திசுக் கட்டிகாளமேகம்கொடைக்கானல்சடுகுடுமீன்தமிழக வெற்றிக் கழகம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வயாகராகல்லீரல்இந்தியக் குடியரசுத் தலைவர்ஆத்திரேலியாதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்ஆளுமைநிலக்கடலைஉருசியாஅக்கி அம்மைஇந்திரா காந்தி🡆 More