கருத்தோவியம்

கருத்தோவியம் அல்லது கேலிச் சித்திரம் (cartoon) என்பது நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் ஓவியம் ஆகும்.

பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களை கருத்துப் படங்கள் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன. தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளிவந்த கேலிச் சித்திரங்கள் புகழ் பெற்றவை.

கருத்தோவியம்
சிரித்திரன்

சொற்பிறப்பியல்

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ஆம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப்பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த நிராகரிக்கப்பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்றில் பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசித்தி பெற்றது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயரில் நிலைத்து விட்டது.

நோக்கம்

கருத்தோவியங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் கருத்துப்படம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

கருத்தோவியம் சொற்பிறப்பியல்கருத்தோவியம் நோக்கம்கருத்தோவியம் தமிழ்நாட்டின் முதல் கருத்துப்படம்கருத்தோவியம் இவற்றையும் பார்க்கவும்கருத்தோவியம் மேற்கோள்கள்கருத்தோவியம்ஓவியம்சிரித்திரன்நகைச்சுவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதினம் (இலக்கியம்)உளவியல்யோகக் கலைசுற்றுச்சூழல்சுந்தர காண்டம்ஓமியோபதிதிணைநுரையீரல் அழற்சிவேதம்நாட்டு நலப்பணித் திட்டம்உமறுப் புலவர்தபூக் போர்விண்ணைத்தாண்டி வருவாயாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஐந்து எஸ்ஆசாரக்கோவைஏக்கர்அன்னை தெரேசாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பிள்ளையார்தலைவி (திரைப்படம்)அலீதனுஷ்கோடிமனித நேயம்நெகிழிசமையலறைகுமரகுருபரர்ஆறுமுக நாவலர்வேளாளர்வெள்ளியங்கிரி மலைதேம்பாவணியாழ்ஜலியான்வாலா பாக் படுகொலைதிருப்போரூர் கந்தசாமி கோயில்காயத்ரி மந்திரம்மனித மூளைஆற்றுப்படைகே. அண்ணாமலைஎட்டுத்தொகைவிளம்பரம்வேல ராமமூர்த்திசின்னம்மைஅமீதா ஒசைன்சிலப்பதிகாரம்உ. வே. சாமிநாதையர்தெலுங்கு மொழிகட்டுரைஅர்ஜுன்குறிஞ்சிப் பாட்டுபொருளாதாரம்விளையாட்டுடி. எம். சௌந்தரராஜன்பவுனு பவுனுதான்எங்கேயும் காதல்திதி, பஞ்சாங்கம்கரிசலாங்கண்ணிஇயேசு காவியம்அபூபக்கர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்செம்மொழிகன்னத்தில் முத்தமிட்டால்நடுக்குவாதம்பள்ளர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழ் நாடக வரலாறுடொயோட்டாஇந்திய ரிசர்வ் வங்கிதிருமூலர்திருவள்ளுவர் சிலைபுதிய ஏழு உலக அதிசயங்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மருது பாண்டியர்இந்திய வரலாறுசுயமரியாதை இயக்கம்மனித எலும்புகளின் பட்டியல்முப்பரிமாணத் திரைப்படம்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்தமிழரசன்கார்த்திக் (தமிழ் நடிகர்)🡆 More