கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் (Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கங்கைகொண்ட சோழபுரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Temple Gopuram at Gangaikonda Cholapuram
இடம்அரியலூர் மாவட்டம்
வகைபண்பாடு
ஒப்பளவுii, iii
உசாத்துணை250
UNESCO regionஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)
விரிவாக்கம்2004
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோவில்
கங்கைகொண்ட சோழபுரம்
வடபுற சிற்பம்
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் கொடி மரம்

வேறு பெயர்கள்

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.

சோழர்களின் புதிய தலைநகர்

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் பொ.ஊ. 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.

தொல்லியல் அகழாய்வு

கங்கைகொண்ட சோழபுரம் 
கங்கை கொண்ட சோழபுரம் அருகிலுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி


தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடித் தொகுதி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், சில அடி ஆழத்திலேயே செங்கற்களால் ஆன பதிமூன்று சுவர்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இது தவிர, சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் இங்கிருந்து கிடைத்திருக்கின்றன. இது தவிர, சீன மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது. தற்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில், 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டு போது பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும் என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

ஆதார நூல்

தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச் சின்னங்களும், நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, பழனி

வெளி இணைப்புகள்

கங்கைகொண்ட சோழபுரம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gangaikonda Cholapuram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

கங்கைகொண்ட சோழபுரம் வேறு பெயர்கள்கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் புதிய தலைநகர்கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் அகழாய்வுகங்கைகொண்ட சோழபுரம் இவற்றையும் பார்க்கவும்கங்கைகொண்ட சோழபுரம் மேற்கோள்கள்கங்கைகொண்ட சோழபுரம் ஆதார நூல்கங்கைகொண்ட சோழபுரம் வெளி இணைப்புகள்கங்கைகொண்ட சோழபுரம்அரியலூர்இந்தியாஇராசேந்திர சோழன்இராஜேந்திர சோழன்தமிழ்நாடுபிற்கால சோழர்கள்முதலாம் இராஜராஜ சோழன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பிரசாந்த்முல்லை (திணை)இன்ஸ்ட்டாகிராம்தமிழக வரலாறுவிருமாண்டிஅரண்மனை (திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்காடுவெட்டி குருசித்திரை2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருவிளையாடல் புராணம்தமிழ்நாடு காவல்துறைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்மாநிலங்களவைநாயக்கர்உ. வே. சாமிநாதையர்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழர் பருவ காலங்கள்பால்வினை நோய்கள்சிவபுராணம்போக்குவரத்துதிருவிழாசெக் மொழிகௌதம புத்தர்காசோலைநுரையீரல்சீமான் (அரசியல்வாதி)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சின்னம்மைகள்ளர் (இனக் குழுமம்)நிலாகாமராசர்சிவபெருமானின் பெயர் பட்டியல்நெல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ் எண் கணித சோதிடம்ஜெ. ஜெயலலிதாகி. ராஜநாராயணன்அகரவரிசைசிவாஜி கணேசன்பிரியங்கா காந்திபெயர்முத்தொள்ளாயிரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பிரெஞ்சுப் புரட்சிகுருதி வகைஅன்புமணி ராமதாஸ்மருதம் (திணை)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிட்டுக்குருவிஎங்கேயும் காதல்இந்திய நிதி ஆணையம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்நம்ம வீட்டு பிள்ளைமுக்கூடற் பள்ளுசென்னை உயர் நீதிமன்றம்மு. மேத்தாகரகாட்டம்புதுக்கவிதைவீட்டுக்கு வீடு வாசப்படிவிசயகாந்துகுறவஞ்சிஆங்கிலம்அண்ணாமலை குப்புசாமிதங்கம்மெய்யெழுத்துகம்பராமாயணம்விண்ணைத்தாண்டி வருவாயாஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய வரலாறுபார்க்கவகுலம்ர. பிரக்ஞானந்தாதமிழர் கப்பற்கலைஇந்திய தேசிய காங்கிரசு🡆 More