ககான்

க கான் அல்லது ககான் (மொங்கோலியம்: хаан; மங்கோலிய எழுத்துமுறை: ᠬᠠᠭᠠᠨ, கயன்; ) என்பதற்கு மங்கோலிய மொழியில் பேரரசர் என்று பொருளாகும்.

க கான்
பழைய துருக்கியம்
இலத்தீன் எழுத்துக்கள்: kaɣan
துருக்கியம்
இலத்தீன் எழுத்துக்கள்: kağan
இலத்தீன் எழுத்துக்கள்: hakan
காசாக்கு
சிரில்லிக் எழுத்துமுறை: қаған
இலத்தீன் எழுத்துக்கள்: qağan
உருசியம்
சிரில்லிக் எழுத்துமுறை: каган
இலத்தீன் எழுத்துக்கள்: kagan
மொங்கோலியம்
சிரில்லிக் எழுத்துமுறை: хаан
ஒலிபெயர்ப்பு: khaan
மொங்கோலியம்: ᠬᠠᠭᠠᠨ
ஒலிபெயர்ப்பு: qagan, khagan
அங்கேரியம்
இலத்தீன் எழுத்துக்கள்: kagán
சீனம்
எளிய சீனம்: 可汗
ஹன்யு பின்யின் : kèhán
பாரசீகம்
பாரசீக எழுத்துக்கள்: خاقان
கொரியம்
ஹங்குல்/ஹன்ஜா: 가한/可汗
கொரியத்தின் திருத்தப்பட்ட ரோமானியப்பதம்: gahan
மெக்கேன் ரீசுவேர்: kahan

சமமான பெண்பால் பட்டம் கதுன் ஆகும். கான்களின் கான் எனவும் இதனை மொழிபெயர்க்கலாம். இதற்கு மன்னாதி மன்னன் என்று பொருளாகும். மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக, யுவான் வம்சத்தின் பேரரசர்கள் ககான் பட்டத்தைப் பயன்படுத்தினர். ககான் மற்றும் கான் துருக்கியில் பயன்படுத்தப்படும் பொதுவான துருக்கிய பெயர்கள் ஆகும்.

கிரேட் கான் (அல்லது கிரான்ட் கான்) என்பது மங்கோலிய மொழியின் எக்கே ககான் (பெரிய பேரரசர் அல்லது Их Хаан) என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

தோற்றம்

இப்பட்டமானது 283 மற்றும் 289க்கு இடைப்பட்ட ஒரு உரையில் முதன்முதலில் காணப்படுகிறது. சியான்பே தலைவன் டுயுஹுன் தனது இளைய தத்துச் சகோதரன் முரோங் ஹுயியிடம் இருந்து தப்ப முயற்சிக்கிறான். அவன் தனது பாதையை லியாவோடோங் தீபகற்பத்திலிருந்து ஓர்டோஸ் பாலைவனத்தின் பகுதிகளில் முடிக்கிறான். அப்போது பேசும்போது யினலோவ் என்கிற முரோங்கின் தளபதி ஒருவன் முரோங்கை கெஹான் (சீனம்: 可寒, பிறகு சீனம்: 可汗) என்கிறான். சில ஆதாரங்கள் 3ம் நூற்றாண்டில் சிங்கை ஏரியின் அருகில் வசித்த டுயுஹுனும் இப்பட்டத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்கின்றன.

ரோவுரன் ககானேடு (330–555) மக்களே தங்களது பேரரசர்களுக்கு ககான் மற்றும் கான் ஆகிய பட்டங்களைப் பயன்படுத்திய முதல் மக்களாவர். அதற்கு முன்னர் சியோங்னுவின் சன்யு பட்டத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். கிரவுசட் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அது துருக்கிய மக்கள் என்று கருதுகின்றனர். ரோவுரன்கள் மங்கோலியர்களுக்கு மூதாதையர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

கான் (பட்டம்)துருக்கிமங்கோலியப் பேரரசுமொங்கோலியம் மொழியுவான் அரசமரபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாழ்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆப்பிள்நிணநீர்க் குழியம்சிவகார்த்திகேயன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தேவேந்திரகுல வேளாளர்நவக்கிரகம்பனைநாயக்கர்ஆய்த எழுத்துநாயன்மார்சங்கர் குருசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)போயர்தேவநேயப் பாவாணர்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்ஆய்த எழுத்து (திரைப்படம்)கம்பராமாயணம்புறாதாயுமானவர்பிள்ளையார்பதுருப் போர்பிள்ளைத்தமிழ்மயங்கொலிச் சொற்கள்புலிசட்டவியல்கர்ணன் (மகாபாரதம்)வைரமுத்துகற்றது தமிழ்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிபௌத்தம்பொன்னியின் செல்வன்திருவள்ளுவர்யோகம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்இராசேந்திர சோழன்அனைத்துலக நாட்கள்நம்ம வீட்டு பிள்ளைகழுகுபச்சைக்கிளி முத்துச்சரம்தமிழ் நீதி நூல்கள்சத்ய ஞான சபைமுகம்மது இசுமாயில்முதுமொழிக்காஞ்சி (நூல்)திணைமனித எலும்புகளின் பட்டியல்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஇனியவை நாற்பதுதினகரன் (இந்தியா)கரிசலாங்கண்ணிமார்ச்சு 28மலக்குகள்திருச்சிராப்பள்ளிஇமாம் ஷாஃபிஈபழமொழி நானூறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பாரிசுற்றுலாஎயிட்சுவெற்றிமாறன்வளைகாப்புபகவத் கீதைவரகுதமிழ் விக்கிப்பீடியாபால்வினை நோய்கள்உவமையணிகோயம்புத்தூர் மாவட்டம்நிணநீர்க்கணுஉப்புச் சத்தியாகிரகம்வரிநற்றிணைகருப்பசாமிகாயத்ரி மந்திரம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்🡆 More