எலிசவேத்தா பெட்ரோவ்னா

யெலிசவேத், எலிசபெத் என்றும் அறியப்படுகின்ற எலிசவேத்தா பெட்ரோவ்னா (உருசியம்: Елизаве́та (Елисаве́т) Петро́вна) (29 December 1709 – 5 January 1762 ), 1741 தொடக்கம் 1762ஆம் ஆண்டுவரை உருசியாவின் பேரரசியாக இருந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் (1740–1748), ஏழாண்டுப் போர் (1756 – 1763) என்னும் இரண்டு போர்களை நடத்தினார். 1762 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது உருசியப் பேரரசு 4 பில்லியன் ஏக்கர்கள் பரப்பளவுக்கு மேல் பரந்து இருந்தது. இது 16 மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கும் மேற்பட்டது ஆகும்.

எலிசவேத்தா பெட்ரோவ்னா
எலிசவேத்தா பெட்ரோவ்னா
சார்லசு வான் லூவினால் வரையப்பட்ட உருவப்படம்.
உருசியப் பேரரசின் பேரரசி
ஆட்சிக்காலம்டிசம்பர் 6, 1741சனவரி 5, 1762
முடிசூட்டுதல்மார்ச் 6, 1742
முன்னையவர்ஆறாம் இவான்
பின்னையவர்மூன்றாம் பீட்டர்
பிறப்பு(1709-12-29)திசம்பர் 29, 1709
கொலொமென்சுக்கோயே
இறப்புசனவரி 5, 1762(1762-01-05) (அகவை 52)
துணைவர்அலெக்சி ராசுமோவ்சுக்கி
மரபுரொமானோவ் வம்சம்
தந்தைஉருசியாவின் முதலாம் பீட்டர்
தாய்உருசியாவின் முதலாம் கத்தரீன்

இவரது உள்நாட்டுக் கொள்கைகளால், பிரபுக்களுக்கு உள்ளூராட்சியில் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டதுடன், அவர்கள் பேரரசுக்குச் செய்யவேண்டிய சேவைகளும் குறைக்கப்பட்டிருந்தன. இவர், லொமொனோசோவ் என்பவர் மாசுக்கோப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கும், சுவாலோவ் என்பவர் செயின்ட் பீட்டர்சுபர்க்கில் நுண்கலை அக்கடமியை உருவாக்குவதற்கும் ஊக்கம் அளித்தார். இவர் தனக்குப் பிடித்த கட்டிடக்கலைஞரான பார்த்தோலோமியோ ராசுட்ரெல்லியின் பரோக் பாணியிலான பாரிய திட்டங்களுக்கும் பெருமளவு பணத்தைச் செலவு செய்தார். இத்திட்டங்கள் குறிப்பாக பீட்டரோஃப், சார்சுக்கோயே செலோ ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. மாரிகால அரண்மனையும், சிமோல்னி தேவாலயமும் இவரது காலத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான கட்டிடங்களாகும். பொதுவாக, பலராலும் விரும்பப்பட்ட உருசிய ஆட்சியாளர்களுள் இவரும் ஒருவர். செருமனியர்களை அரசில் அனுமதிக்காததும், இவர் காலத்தில் ஒருவருக்குக்கூட உருசியாவில் கொலைத் தண்டனை அளிக்கப்படாததும் இதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

Tags:

ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்உருசியம்உருசியாஏக்கர்ஏழாண்டுப் போர்சதுர கிலோமீட்டர்பில்லியன்யூலியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜயநகரப் பேரரசுதிரிகடுகம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்தியாஉத்தரப் பிரதேசம்இல்லுமினாட்டிமாசாணியம்மன் கோயில்தங்கராசு நடராசன்அக்கி அம்மைபயில்வான் ரங்கநாதன்குலசேகர ஆழ்வார்அறுசுவைஅமலாக்க இயக்குனரகம்யாழ்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அக்கிகாவிரி ஆறுகாமராசர்காடுபள்ளிக்கரணைசென்னைஇராசேந்திர சோழன்அழகிய தமிழ்மகன்தமிழ் இலக்கியம்விளம்பரம்இயேசுகார்த்திக் (தமிழ் நடிகர்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சரண்யா பொன்வண்ணன்வேலைக்காரி (திரைப்படம்)வட்டாட்சியர்ரோசுமேரிதமிழ் படம் 2 (திரைப்படம்)மார்கழி நோன்புமதுரைக் காஞ்சிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்உளவியல்இந்திய நிதி ஆணையம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மலேசியாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்டிரைகிளிசரைடுமறைமலை அடிகள்பால கங்காதர திலகர்முலாம் பழம்ஆய்த எழுத்து (திரைப்படம்)முடியரசன்சதுரங்க விதிமுறைகள்பீப்பாய்ஜவகர்லால் நேருஇரட்சணிய யாத்திரிகம்தஞ்சாவூர்உயர் இரத்த அழுத்தம்சவ்வரிசிநற்றிணைதிரைப்படம்விருமாண்டிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ம. பொ. சிவஞானம்சொல்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்விந்துபழனி முருகன் கோவில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)உரைநடைவே. செந்தில்பாலாஜிமண் பானைவாணிதாசன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பித்தப்பைபத்து தலசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பூனைதொல்காப்பியர்🡆 More