இடையுயிர்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • இடையுயிர் ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
இடையுயிர்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இடையுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் பயன்படுகின்ற ஒரு வகை உயிரொலி. இதை ஒலிக்கும்போது நாக்கு வாயின் மேல் பகுதிக்கு மிக அண்மையிலோ அல்லது கீழே அதிகம் தொலைவிலோ இல்லாது இடை நிலையில் இருக்கும். அதாவது, மேலுயிர்களை ஒலிக்கும் போதும், கீழுயிர்களை ஒலிக்கும் போதும் இருக்கும் நிலைகளுக்கு இடையில் அமையும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீட்டைக் கொண்டுள்ள ஒரே இடையுயிர், இடை நடுவுயிர் [ə] ஆகும். இக்குறியீடு schwa என்னும் உயிரொலியைக் குறிக்கவும் பயன்படுகிறது.

அ.ஒ.அ. உயிரொலிக்கு உரிய வெளியை மூன்றாகப் பிரிக்கிறது. இவை, [e] அல்லது [o] போன்ற மேல் நடுவுயிர், [ɛ] அல்லது [ɔ] போன்ற கீழ் நடுவுயிர் என்பன, கீழுயிர் [a] இற்கும், மேலுயிர்கள் [i] அல்லது [u] இற்கும் இடையேயுள்ள ஒலியலைச் செறிவு வெளியில் சம அளவு தூரங்களில் உள்ளன.

உண்மையான முன் அல்லது பின் உயிர்களில் நான்கு வேறுபட்ட உயர நிலைகளுக்கு மேல் பிரித்தறிவது கடினம் என்பதால், மிகவும் குறைவான மொழிகளிலேயே இடையுயிரின் மூன்று நிலைகளிடையேயும் வேறுபாடு காட்டுவனவாக உள்ளன. ஆனால், ஆசுத்திரிய-பவேரிய செருமன் கிளை மொழியான ஆம்சுட்டெட்டனில் கீழ் நடு உயிரொலியுடன், முன் இதழ்விரி உயிர், முன் இதழ்குவி உயிர், முன் இதழ்குவி உயிர், என்பன உட்பட்ட நான்கு உயர்நிலை வேறுபாடுகள் உள்ளன. இவற்றை ஏற்கெனவேயுள்ள அ.ஒ.அ. குறியீடுகளான /a/, /i e ɛ æ/, /y ø œ ɶ/, /u o ɔ ɑ/ என்பவற்றைப் பயன்படுத்திக் குறிக்கின்றனர்.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலிபெயர்ப்பு)
மேல் i y u
மேல்-இடை e ø o
கீழ்-இடை ɛ œ ɔ
மேல்-கீழ் æ ɶ̝ ɑ̝
கீழ் a

எனினும், உயிரொலிகள் /æ ɶ ɑ/ என்பன, கீழ் /a/, மேல் /i y u/ என்பவற்றுக்கு இடையே, மூன்றிலொரு பங்கு தூரத்தில் உள்ளன. இது சரியாக உயிரொலிகள் [ɛ œ ɔ] என்பவற்றுக்கு அ.ஒ.அ. தரும் வரைவிலக்கணத்துக்கு ஒப்ப அமைகின்றது. இதனால், ஆம்சுட்டெட்டன் பவேரியம், இடையுயிர் ஒலிகளை, கீழ்-இடை, மே-இடை ஆகிய இரண்டு வகை உயிரொலிகளில் இருந்தும் வேறுபடுத்தும் மொழிகளுக்கான எடுத்துக்காட்டாக அமைகின்றது.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலியலைச் செறிவு வெளி)
மேல் i y u
மேல்-இடை e ø o
இடை ø̞
கீழ்-இடை ɛ œ ɔ
கீழ் a

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.

Tags:

இதழமைவுநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழனி பாபாகாப்பியம்தேவதாசி முறைநா. முத்துக்குமார்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி69 (பாலியல் நிலை)உப்புச் சத்தியாகிரகம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்அஜித் குமார்இந்திசோழர் காலக் கட்டிடக்கலைமரணதண்டனைசுதேசி இயக்கம்பொன்னுக்கு வீங்கிம. பொ. சிவஞானம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)நீலகிரி மக்களவைத் தொகுதிதவக் காலம்மகேந்திரசிங் தோனிநான் அவனில்லை (2007 திரைப்படம்)அன்னை தெரேசாஜி. யு. போப்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்செங்குந்தர்தமிழர் நெசவுக்கலைகேழ்வரகுதேசிக விநாயகம் பிள்ளைநற்றிணைவளையாபதிகுறிஞ்சிப் பாட்டுபுற்றுநோய்ரோசுமேரிதிருவண்ணாமலைநீலகிரி மாவட்டம்இந்தியத் தேர்தல்கள்தமிழர் பண்பாடுகருப்பைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குமரகுருபரர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மதுரைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிகணினிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபகவத் கீதைசேலம் மக்களவைத் தொகுதிஅண்ணாமலையார் கோயில்குற்றியலுகரம்கம்பராமாயணம்இந்திய தேசிய காங்கிரசுமஞ்சள் காமாலைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இன்னா நாற்பதுசூரிவிண்டோசு எக்சு. பி.இனியவை நாற்பதுபங்குனி உத்தரம்கே. என். நேருஆ. ராசாசித்திரைஅம்பேத்கர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செஞ்சிக் கோட்டைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சுந்தர காண்டம்சுற்றுச்சூழல்பித்தப்பைஎங்கேயும் காதல்சத்ய பிரதா சாகுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்உயிர்மெய் எழுத்துகள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பிரேமலதா விஜயகாந்த்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சோழர்உயிர்ப்பு ஞாயிறு🡆 More