இசுரேல் கெல்ஃபாண்ட்

இசுரேல் கெல்ஃபாண்ட் (Israel Gelfand, உருசியம்: Израиль Моисеевич Гельфанд, செப்டம்பர் 2 1913 – அக்டோபர் 5, 2009) என்பவர் சோவியத் மற்றும் அமெரிக்கக் கணிதவியலர்.

கணிதத்தில் குலக் கோட்பாடு, ஒப்புநிறுத்துக் கோட்பாடு (Representation Theory), நேரியல் இயற்கணிதம் ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்த அறிஞர். இவர் சோவியத் ஒன்றியத்தின் உயர் பெருமையாகிய லெனின் புகழ்வரிசைப் பதக்கமும் (Order of Lenin), கணிதத்துறையின் வுல்ஃவ் பரிசையும் (Wolf Prize) பெற்றார். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஃவெல்லோவாகவும் (அரச குமுக சிறப்பாளராகவும்) தேர்வு செய்யப்பெற்றார்.

இசுரேல் மொய்சேவிச் கெல்ஃபாண்ட்
Israïl Moiseevich Gelfand
இசுரேல் கெல்ஃபாண்ட்
பிறப்புசெப்டம்பர் 2, 1913
ஒடேசா, உக்ரைன்,
உருசியா
இறப்புஅக்டோபர் 5, 2009 (அகவை 96)
நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்இசுரேல் கெல்ஃபாண்ட் சோவியத் ஒன்றியம்/இசுரேல் கெல்ஃபாண்ட் ஐக்கிய அமெரிக்கா
துறைகணிதவியலர்
பணியிடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்,
ரட்கர்சு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆந்திரே கோல்மோகொரோவ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எந்திரே செமெரேடி
அறியப்படுவதுகுலக் கோட்பாடு, ஒப்புநிறுத்தக் கோட்பாடு, பகுவியல்
விருதுகள்லெனின் புகழ்வரிசைப் பதக்கம் (மூன்று முறை)
வூல்ஃப் பரிசு (1978)
ஸ்டீல் பரிசு (2005)

மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் நெடிய ஒரு தலைமுறை முழுவதும் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த இவர் தன்னுடைய 76 ஆம் அகவைக்கு சற்று முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். எம்.ஐ.டி-யிலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் நியூ செர்சியில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்கப் பேராசிரியராகப் (Distinguished Professor) பணி ஏற்றார்.

ஆரம்ப வாழ்க்கை

அன்றைய உருசியப் பேரரசின் கீழிருந்த உக்ரைனில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் கெல்ஃபாண்ட். பள்ளிப் படிப்பின் போதே கணிதத்தில் மிகத் திறமையுடையவராக இருந்த இசுரைல் உயர் பள்ளிக்குச் செல்லாமலேயே மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்பின் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவரது ஆய்வுநிலைப் படிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரும்புகழுடைய ஆந்திரே கோல்மோகொரோவ் ஆவார்.

வேறு துறைகளில் பங்களிப்பு

தொகை வடிவவியல் (integral geometry) என்னும் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் இன்று மருத்துவத்தில் உடல் உள்ளுறுப்புகளை நுண்படம் எடுக்கும் அணுக்காந்த ஒத்ததிர்வு படக் கலையிலும் (Magnetic Resonance Imaging, MRI), கணிவழி குறுக்குவெட்டு புதிர்க்கதிர்ப் படம் (CAT) எடுத்தல் முதலியவற்றிலும் பெரிதும் பயன்படுகின்றன.

வெளி இணைப்புகள்

Tags:

2009அக்டோபர் 5உருசியம்ஐக்கிய அமெரிக்காகணிதம்குலக் கோட்பாடுசோவியத்சோவியத் ஒன்றியம்நேரியல் இயற்கணிதம்யூலியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உணவுஅட்சய திருதியைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஆடை (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)யாதவர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்இமயமலைஐந்திணைகளும் உரிப்பொருளும்கன்னியாகுமரி மாவட்டம்சீனாதமிழில் சிற்றிலக்கியங்கள்கணியன் பூங்குன்றனார்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தேனீமழைநீர் சேகரிப்புஇந்து சமய அறநிலையத் துறைசித்தர்அனுமன்சடுகுடுசிவாஜி கணேசன்இந்திசேமிப்புக் கணக்குஇராமர்கருட புராணம்தமிழ்த் தேசியம்திருமலை நாயக்கர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபாரதிதாசன்கொன்றைகலிங்கத்துப்பரணிகல்விவாணிதாசன்குறுந்தொகைகுற்றாலக் குறவஞ்சிஜே பேபிசிதம்பரம் நடராசர் கோயில்சுய இன்பம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பிள்ளையார்தமிழ் விக்கிப்பீடியாசிறுகதைஜோக்கர்பெருஞ்சீரகம்ராதிகா சரத்குமார்நெல்அவுரி (தாவரம்)சூல்பை நீர்க்கட்டிஅனுஷம் (பஞ்சாங்கம்)மாலைத்தீவுகள்வல்லினம் மிகும் இடங்கள்சா. ஜே. வே. செல்வநாயகம்உரைநடைமாரியம்மன்உலா (இலக்கியம்)மகேந்திரசிங் தோனிதிருமுருகாற்றுப்படைஇயற்கைபொன்னுக்கு வீங்கிகஞ்சாவேதநாயகம் பிள்ளைதமிழச்சி தங்கப்பாண்டியன்நுரையீரல் அழற்சிபாளையத்து அம்மன்ஜெ. ஜெயலலிதாசேலம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திராவிசு கெட்அண்ணாமலை குப்புசாமிநவரத்தினங்கள்மரம்மறவர் (இனக் குழுமம்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்அமலாக்க இயக்குனரகம்தமிழ் தேசம் (திரைப்படம்)பல்லவர்🡆 More