நுரையீரல் இண்டியம்

நுரையீரல் இண்டியம் (Indium lung) என்பது ஓர் அரிய தொழில்சார் நுரையீரல் நோயாகும்.

இண்டியம் வெள்ளீய ஆக்சைடு வடிவத்தில் உள்ள சுவாசிக்கக்கூடிய இண்டியம் வெளிப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஓர் இடைநிலை நுரையீரல் நோய் எனவும் பரந்த சோற்றுத்திசு நுரையீரல் நோய் எனவும் இந்நோய் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

நுரையீரல் மூச்சுச்சிற்றறை புரதம் மிகுதல், நுரையீரல் இணைப்புத்தசையழற்சி போன்றவை நுரையீரல் இண்டியம் நோயின் பிரதானமான முக்கிய அறிகுறிகளாகும். மூச்சுத் திணறல், இருமல் மற்றும் அதிகரித்த சளி உற்பத்தி ஆகியவைகளும் மேலும் சில அறிகுறிகளாகும். நுரையீரல் இண்டியம் நோய் உள்ளவர்களிடம் இருமலின்போது சுவாசக் குழாயிலிருந்து இரத்தம் வருவதையும் காணமுடியும். இருமலின்போது இரத்தம் வெளியேறுவது பொதுவாக மூச்சுக்குழாய் அல்லது நுரையீரலின் கடுமையான தொற்றுநோய்க்கு அடையாளமாகும். விரல்நுனிப் பெருக்கம், சிற்றறையிலிருந்து ஆக்சிசனை இரத்தத்திற்கு நகர்த்தும் திறனைக் குறைக்கும் கார்பன் மோனாக்சைடு பரவும் திறன் பெருக்கம், நுரையீரல் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் மூச்சுக்காற்றின் அளவை குறைக்க கட்டாயமாக்குவது போன்ற சில அறிகுறிகள் எல்லா நுரையீரல் இண்டியம் நோயாளிகளுக்கும் இருப்பதில்லை என்றாலும் சில நோயாளிகளிடத்தில் காணப்படுகிறது. நுரையீரல் இண்டியம் நோயுடன் திசுக்களின் அதீத வீக்கமும் தொடர்புடையதாகும். ஆனால் நோயறிகுறியின் ஒரு பகுதியாக இது இருக்காது.

நோய்ப் பின்னல்

இண்டியம் உலோகம் ஒரு புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக அறியப்படவில்லை என்றாலும் நுரையீரல் இண்டியம் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

காரணங்கள்

இண்டியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் மற்றும் மீட்டெடுக்கும் பல்வேறு தொழில் சூழல்களில் இண்டியம் வெள்ளீயம் ஆக்சைடு என்ற வேதிப்பொருளுக்கு உடல் வெளிப்படுவதால் நுரையீரல் இண்டியம் நோய் ஏற்படுகிறது. இந்நிகழ்வுக்கு உட்படும்போது ஒருவருடைய உடல் மற்றும் உறுப்புகள் இண்டியம் உலோகம், இண்டியம் ஐதராக்சைடு, இண்டியம் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களுக்கும் வெளிப்படுகிறது.

நோய்க்கிருமி

இண்டியம் நோய்க்கிருமியை எவ்வாறு உருவாகிறது என்பதற்கான சரியான வழிமுறை தெரியவில்லை. ஆனால் இண்டியம் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை குறைவாக்கி நோய் தாக்கக் கோளாறுகளை அதிகப்படுத்தலாம். அல்லது நுரையீரல் சிற்றறையின் நோய் தடுக்கும் வெள்ளையணுக்களை விழுங்கி நுரையீரல் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என்ற முடிவு அனுமானிக்கப்படுகிறது.

நோயறிதல்

சி.டி.இசுகேன் எனப்படும் கணிப்பொறி பருவரைவியல், கதிர்வீச்சு வரைவியல் போன்ற மருத்துவ நுட்பங்கள் நுரையீரல் இண்டியம் நோயைக் கண்டறிய உதவலாம். நுரையீரலில் மங்கலான ஒளி புகாபகுதி, மடல்களுக்கிடையிலான இடைச்சுவர் வீக்கம், இணைப்புத்தசையின் தேன்கூட்டுத் தோற்றம், மூச்சுக்குழல் விரிவு உள்ளிட்டவை கணிப்பொறி பருவரைவியல் அசாதரணங்கள் எனக்கருதப்படுகின்றன. .

ஆய்வகக் கண்டுபிடிப்புகள்

நுரையீரல் இண்டியம் நோயில் பல அசாதாரண ஆய்வக கண்டுபிடிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அனைவரின் குருதி நீரிலும் அதிக அளவு இண்டியம் கண்டறியப்பட்டுள்ளது. அலானின் டிரான்சமினேசு, ஆசுபர்டேட்டு டிரான்சமினேசு போன்ற நொதிகளின் உயர் அளவு, பெண்டாமெரிக் புரதத்தின் உயர் அளவு, உயர்த்தப்பட்ட நுரையீரல் இடைத்திசு நோய் குறிப்பான்கள், இரத்த குறுமணி வெள்ளணு-பெருவிழுங்கி அணுத்தூண்டல் போன்றவையும் நுரையீரல் இண்டியம் நோயாளிகளின் ஆய்வுக்கூட அறிக்கைகளில் இடம்பெறுகின்றன.

பாதுகாப்பு

நுரையீரல் இண்டியம் நோய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சப்பான் நாட்டின் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இண்டியம் வெளிப்பாட்டிற்கான வரம்புகளை 0.0003 மி.கி/மீ3 என நிர்ணயித்துள்ளது. இண்டியம் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கான முறைகளே சிறந்த பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகிறது. இண்டிய தொழிற்சாலைத் தொழிலாளர்களின் மருத்துவக் கண்காணிப்பும் ஒரு தடுப்பு முறையாகும்.

சிகிச்சை

நுரையீரல் இண்டியம் நோய்க்கு தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நுரையீரல் கழுவுதல் மற்றும் இயக்க ஊக்கி மருந்து சிகிச்சை ஆகியவை மட்டுமே இப்போதைக்கு உள்ள சிகிச்சை வாய்ப்புகள் ஆகும்.

முன்கணிப்பு

2012 ஆம் ஆண்டு வரை முன்கணிப்பு காரணிகள் ஆராய்ச்சிக்கு உட்பட்டவையாக இருந்தன. வேலையின் காலம் மற்றும் சுவாசப் பாதுகாப்பைப் பயன்படுத்துதல் ஆகியவை முன்கணிப்பு காரணிகளுக்கான பூர்வாங்க சான்றுகள் அல்ல. ஆனால் குருதி நீரில் இண்டியத்தின் அளவை கூறுதல் ஒரு முன்கணிப்பு காரணியாக இருக்கலாம் - அதிக அளவு குருதிநீர் இண்டியம் அளவு மோசமான முன்கணிப்புகளுடன் தொடர்புடையது. நுரையீரல் இண்டியம் நோய் பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தானதாகியுள்ளது.

வரலாறு

நுரையீரல் இண்டியம் நோய் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு சப்பானிய ஆராய்ச்சியாளர்களின் குழுவால் விவரிக்கப்பட்டது

தொற்றுநோயியல்

சப்பான், அமெரிக்கா மற்றும் சீனாவில் நுரையீரல் இண்டியம் நோய்கள் பதிவாகியுள்ளன. இண்டியம் தொழில்துறை முக்கியமாக சப்பானை அடிப்படையாகக் கொண்டது, அங்கு பெரும்பாலான நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர், இண்டியம் தொழில் அமெரிக்கா, சீனா, தைவான் மற்றும் தென் கொரியா நாடுகளிலும் நடைபெறுகிறது. 2010 ஆம் ஆண்டு வரை, 10 நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிய தொழிற்சாலை தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Tags:

நுரையீரல் இண்டியம் அறிகுறிகள்நுரையீரல் இண்டியம் நோய்ப் பின்னல்நுரையீரல் இண்டியம் காரணங்கள்நுரையீரல் இண்டியம் நோய்க்கிருமிநுரையீரல் இண்டியம் நோயறிதல்நுரையீரல் இண்டியம் பாதுகாப்புநுரையீரல் இண்டியம் சிகிச்சைநுரையீரல் இண்டியம் முன்கணிப்புநுரையீரல் இண்டியம் வரலாறுநுரையீரல் இண்டியம் தொற்றுநோயியல்நுரையீரல் இண்டியம் மேற்கோள்கள்நுரையீரல் இண்டியம் மேலும் படிக்கநுரையீரல் இண்டியம்இண்டியம்நுரையீரல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவதாரம்தேவநேயப் பாவாணர்இதயம்இலங்கையின் மாவட்டங்கள்கடன்ஐங்குறுநூறுகட்டபொம்மன்வைணவ சமயம்உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்இசுலாம்முக்கூடற் பள்ளுவ. வே. சுப்பிரமணியம்ஆங்கிலம்மீனா (நடிகை)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பாண்டி கோயில்இணையம்கள்ளர் (இனக் குழுமம்)தஞ்சை நாயக்கர்கள்புவி சூடாதல்இலங்கையின் பொருளாதாரம்மரவள்ளிஇரா. இளங்குமரன்சுயமரியாதை இயக்கம்அகரம் அறக்கட்டளைபட்டினப் பாலைதளபதி (திரைப்படம்)சவுக்கு (இணையதளம்)காட்டெருதுபிரதமைவேற்றுமைத்தொகைதாராபாரதிதமிழ் இலக்கியப் பட்டியல்சின்ன வீடுதொல்காப்பியம்மதுரைக் காஞ்சிஅம்மனின் பெயர்களின் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்அக்பர்மனித வள மேலாண்மைதிரிகடுகம்சிறுபாணாற்றுப்படைபஞ்சதந்திரம் (திரைப்படம்)செக் மொழிஉன்னை நினைத்துதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முருகன்தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்ரெட்டை வால் குருவிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்மகாபாரதம்நாய்மொழிபெயர்ப்புமுக்குலத்தோர்அரச மரம்ஆக்‌ஷன்கபிலர் (சங்ககாலம்)பூலித்தேவன்திருவள்ளுவர் ஆண்டுதிருத்தணி முருகன் கோயில்ரயத்துவாரி நிலவரி முறைகாப்பியம்சார்பெழுத்துகஞ்சாஇலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–தற்போது)குண்டலகேசிகேரளம்இந்திய வெளியுறவுக் கொள்கைமேலாண்மைசிங்கப்பூர்அறிவியல்நாளந்தா பல்கலைக்கழகம்பொன்னுக்கு வீங்கிதிருவிசைப்பாகிராம சபைக் கூட்டம்நீரிழிவு நோய்மு. மேத்தாசேக்கிழார்தினை🡆 More