1967 திரைப்படம் நான்

நான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. என். பாலு எழுதி டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரு ராஜா தன் தொலைந்து போன மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று இறக்கிறார். பின்னர் ராஜாவின் மகன் தான் தான் என்று அதன் வழியாக சொத்துக்களுக்கு உரிமை கோரி மூன்று நபர்கள் வருவதை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் 1 நவம்பர் 1967 அன்று வெளியாகி, 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இது தெலுங்கில் நேனண்டே நேனே (1968) என்றும் இந்தியில் வாரிஸ் (1969) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நான்
1967 திரைப்படம் நான்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. கே. ராமராஜன்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
கதைடி. என். பாலு
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 1, 1967
ஓட்டம்.
நீளம்4523 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

ஒரு ராஜாவின் மகன் தன் தந்தையின் எதிரியிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது இளம் வயதிலேயே தொலைந்து போகிறார். அவரது தந்தை பல ஆண்டுகள் தன் மகனைத் தேடி கிடைக்காத சோகத்தில் இறந்துவிடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று பேர் இளவரசன் என்று கூறி அரண்மனைக்கு வந்து அனைத்து சொத்துக்களுக்கும் தானே வாரீசு என்று உரிமை கோருகின்றனர். மூவரும் தொலைந்த இளவரசனின் அடையாளங்களைக் கொண்டுள்ளனர் மேலும் குடும்ப வரலாறு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றனர். அரண்மனை நிர்வாகம் உண்மையான வாரிசைக் கண்டுபிக்கும் வரை மூன்று பேரையும் தங்க வைக்கிறது.

அந்த மூவரில் யாரும் உண்மையான வாரிசு இல்லை என்பதும், உண்மையான இளவரசனாக வேரொருவர் இருப்பது தெரியவரும்போது கதை திருப்பத்தை சந்திக்கிறது. ஆனால் அவருடைய இருப்பிடம் தெரியவில்லை. உண்மையான இளவரசனை அடைவதற்கான ஒரே வழி, அவர் இருக்கும் இடத்தை அறிந்த இந்த மூன்று பேர்தான்.

நடிகர்கள்

தயாரிப்பு

நான் ஈஸ்ட்மேன்கலரில் வண்ணப்படமாக எடுக்கபட்டது. நாகேஷ் தனது கதாபாத்திரத்தில் நடித்த போது, புதிய மூக்குக் கண்ணாடியை அதன் விலை வில்லையை அகற்றாமல் அணிந்திருந்தார்; ராமண்ணா அதை அகற்ற விரும்பினாலும், நகைச்சுவைக்காக விலை வில்லையுடனே நடிக்க நாகேஷ் முடிவு செய்தார்.

இசை

படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர். படத்தில் இடம்பெற்ற "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" பாடல் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கம் செப்டம்பர் (1961) படத்தின் இசை மெட்டில் உருவானது.

பாடல்கள் பாடகர் வரிகள் நீளம்
"இராஜா கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" டி. எம். சௌந்தரராஜன் வாலி 4:28
"அதே முகம் அதே குணம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:32
"நான் ஆணையிட்டால்" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி (கலவைப் பாடல்) 3:05
"போதுமோ இந்த இடம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 3:12
"அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ" சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி 5:35
"வந்தாள் என்னோடு எங்கேயோ" எல். ஆர். ஈசுவரி 4:26
"பிறந்தநாள் விருந்தில் நடந்த கொலை" கருவி இசைக்குழு நடனம் 6:08

வெளியீடும் வரவேற்பும்

நான் 1 நவம்பர் 1967 தீபாவளி நாளன்று வெளியாகி திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. ராமண்ணாவின் இயக்கம் மற்றும் புதுமையான கதைக்காக கல்கி படத்தைப் பாராட்டியது.

மேற்கோள்கள்

Tags:

1967 திரைப்படம் நான் கதை1967 திரைப்படம் நான் நடிகர்கள்1967 திரைப்படம் நான் தயாரிப்பு1967 திரைப்படம் நான் இசை1967 திரைப்படம் நான் வெளியீடும் வரவேற்பும்1967 திரைப்படம் நான் மேற்கோள்கள்1967 திரைப்படம் நான்1967ஜெயலலிதாடி. ஆர். ராமண்ணாடி. என். பாலுரவிச்சந்திரன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வராகிஉன்னை நினைத்துமெய்யெழுத்துஆந்தைதிருமலை நாயக்கர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்முருகன்இன்ஸ்ட்டாகிராம்நாயக்கர்நம்பி அகப்பொருள்அகத்திணைதேவயானி (நடிகை)புதினம் (இலக்கியம்)ர. பிரக்ஞானந்தாசுற்றுச்சூழல் மாசுபாடுசீறாப் புராணம்திவ்யா துரைசாமிகினோவாதீரன் சின்னமலைவன்னியர்அவுரி (தாவரம்)நிணநீர்க்கணுவாலி (கவிஞர்)ஆத்திசூடிதாவரம்காளமேகம்மகேந்திரசிங் தோனிசோழர்குதிரைமலை (இலங்கை)இந்திரா காந்திசினைப்பை நோய்க்குறிமாலைத்தீவுகள்தமிழக வெற்றிக் கழகம்சத்திமுத்தப் புலவர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)குறவஞ்சிஇடமகல் கருப்பை அகப்படலம்வேதாத்திரி மகரிசிநயினார் நாகேந்திரன்வேலுப்பிள்ளை பிரபாகரன்கார்த்திக் (தமிழ் நடிகர்)பறவைநவக்கிரகம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சிவாஜி (பேரரசர்)பாரதிய ஜனதா கட்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்கவலை வேண்டாம்காவிரி ஆறுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வாணிதாசன்அழகிய தமிழ்மகன்தொல். திருமாவளவன்ஏப்ரல் 26பெரியபுராணம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அணி இலக்கணம்கண்ணகிகோத்திரம்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய தேசிய காங்கிரசுபிரகாஷ் ராஜ்அகநானூறுபிலிருபின்முத்தரையர்சுரதாஹரி (இயக்குநர்)மாரியம்மன்குடும்பம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்புறாகேழ்வரகுதிருப்பதிஸ்ரீஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கொங்கு வேளாளர்பெண்🡆 More