காஷ்மீர நாடு

காஷ்மீர நாடு (Kasmira kingdom) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும்.

இந்நாடு தற்போதைய ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்த காஷ்மீர் சமவெளிப் பகுதியாகும். இதிகாச காலத்தின் போது நாகர் இன மக்கள் (Naga people) இந்நாட்டில் அதிகம் வாழ்ந்தனர். புராணங்களில் குறிப்பிட்ட காசியப முனிவருக்குப் பிறந்த தட்சகன், வாசுகி முதலான நாக இன மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பாகும். காஷ்மீரர்கள், குரு நாட்டின் கௌரவர்களின் கூட்டாளிகள் ஆவார்.

காஷ்மீர நாடு
மகாபாரத இதிகாச கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள்

காஷ்மீர நாட்டை குறித்த அனைத்துக் குறிப்புகளும், மகாபாரத்தின் 6-வது பருவமான பீஷ்ம பருவத்தின், அத்தியாயம் 9-இல் உள்ளது. (மகாபாரதம் 6: 9).

அமைவிடம்

பண்டைய பரத கண்டத்தில் காஷ்மீர நாடு, காந்தாரத்திற்கு தென்கிழக்கிலும்; கேகய நாட்டிற்கு கிழக்கிலும், சிந்து நாடு, சௌவீர நாடு, சிவி நாடு மற்றும் ஆபீர நாடு ஆகியவற்றிக்கு வடக்கிலும் அமைந்திருந்தது (6, 9).

இராசசூய வேள்வியில்

பரத கண்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் உள்ள காஷ்மீரர்கள், பகலவர்கள், தராதர்கள், கிராதர்கள், யவனர்கள், மகாபாரத கால சிதியர்கள், சிந்தியர்கள், சிவிக்கள், சௌவீரர்கள், கேகயர்கள், பாக்லீகர்கள் மற்றும் திரிகர்த்தகர்கள், பாண்டவர்களின் மூத்தவன் தருமராசன், இந்திரப்பிரஸ்தத்தில் நடத்திய இராசசூய வேள்வியில் பரிசுப் பொருட்களுடன் கலந்து கொண்டனர்.

காஷ்மீரர்களையும், தராதர இனத்தவர்களை பரசுராமன் அழித்ததாக மகாபாரதம் 7, 68 -இல் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர நாட்டு ஆறுகள்

ஜீலம் ஆறு, விடத்தல ஆறு, சந்திரபாகா ஆறுகள், காஷ்மீர நாட்டிலும், தட்சகனின் நாக நாட்டிலும் பாய்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது.(3, 82). காஷ்மீரச் சமவெளியில் பாயும் பல ஆறுகள் இறுதியில் சிந்து ஆற்றுடன் கலந்து விடுகிறது. (மகாபாரதம் 13, 25)

பிற குறிப்புகள்

  • புகழ் பெற்ற மன்னர்களான தட்சகன், அலர்கன், ஐலன், கரந்தாமன் ஆகியவர்களுடன் காஷ்மீர நாட்டின் மன்னர் ஒப்பிடப்படுகிறார்.
  • காஷ்மீரத்தின் பெண் குதிரைகளைச் சிறப்பாக குறித்துள்ளது. (மகாபாரதம் 4: 9)

இதனையும் காண்க

மேற்கோள்கள்




Tags:

காஷ்மீர நாடு மகாபாரதக் குறிப்புகள்காஷ்மீர நாடு இராசசூய வேள்வியில்காஷ்மீர நாடு இதனையும் காண்ககாஷ்மீர நாடு மேற்கோள்கள்காஷ்மீர நாடுஇதிகாசம்காசிபர்காஷ்மீர்குரு நாடுகௌரவர்ஜீலம் ஆறுதட்சகன்பரத கண்டம்புராணம்வாசுகி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைதிருப்போரூர் கந்தசாமி கோயில்தினைதிருத்தணி முருகன் கோயில்செப்புசுய இன்பம்மழைமுல்லைப்பாட்டுஆந்திரப் பிரதேசம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பிரேமலுகருப்பை நார்த்திசுக் கட்டிதிருவிளையாடல் புராணம்இந்திய நிதி ஆணையம்கணியன் பூங்குன்றனார்ஆண் தமிழ்ப் பெயர்கள்பசுமைப் புரட்சிஆழ்வார்கள்கலாநிதி மாறன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நயினார் நாகேந்திரன்டிரைகிளிசரைடுபனையாதவர்இரட்சணிய யாத்திரிகம்பிரபஞ்சன்கூத்தாண்டவர் திருவிழாபதினெண் கீழ்க்கணக்குசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாம் தமிழர் கட்சிமதுரைபொருநராற்றுப்படைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி108 வைணவத் திருத்தலங்கள்மீன் வகைகள் பட்டியல்இந்து சமயம்திருச்சிராப்பள்ளிசூல்பை நீர்க்கட்டிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஆய்த எழுத்து (திரைப்படம்)கலிங்கத்துப்பரணிவிஜய் (நடிகர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேர்தல்கள்ளழகர் கோயில், மதுரைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நீதிக் கட்சிஆசிரியர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஜிமெயில்மு. வரதராசன்நீர்ப்பறவை (திரைப்படம்)பள்ளிக்கரணைஅகத்திணைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பழமொழி நானூறுபாலை (திணை)மண்ணீரல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பட்டினத்தார் (புலவர்)கொடைக்கானல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கினோவாபெருங்கதைதமிழ் இலக்கியப் பட்டியல்காதல் தேசம்அருணகிரிநாதர்பழனி முருகன் கோவில்ஊராட்சி ஒன்றியம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஜெயகாந்தன்முத்தொள்ளாயிரம்வேலைக்காரி (திரைப்படம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்🡆 More