ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு

இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன், பொதுநலவாய நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் படைகள் வேந்திய ஈரானிய அரசு மீது படையெடுத்தன.

இந்நிகழ்வே ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு (Anglo-Soviet invasion of Iran) என்று அறியப்படுகிறது. ஆகஸ்ட் 25-செப்டம்பர் 17, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இப்படையெடுப்பு நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு கவுண்டனன்சு நடவடிக்கை (Operation Countenance) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி
நாள் ஆகஸ்ட் 25, 1941 – செப்டம்பர் 17, 1941
இடம் ஈரான்
நேசநாடுகள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்

  • வடக்கு ஈரான் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது
  • தெற்கு ஈரான் பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டது
பிரிவினர்
ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு United Kingdom

ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு Soviet Union

ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு ஈரான்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் எட்வர்ட் குவினான்
சோவியத் ஒன்றியம் திமீத்ரி கோஸ்லோவ்
ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு ரெசா ஷா பஸ்லவி
ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு கோலாமாலி பாயாண்டோர்  
பலம்
சோவியத் ஒன்றியம் 3 ஆர்மிகள்
ஐக்கிய இராச்சியம் 2 டிவிசன்கள்,
3 பிரிகேட்கள்
9 டிவிசன்கள், 60 வானூர்திகள்
இழப்புகள்
ஐக்கிய இராச்சியம் இந்தியா
22 பேர் மாண்டனர்
50 பெர் காயம்
1 டாங்கு நாசம்
சோவியத் ஒன்றியம்
40 பேர் மாண்டனர்
3 வானூர்திகள் நாசம்
~800 பெர் மாண்டனர்
~200 பொதுமக்கள் மாண்டனர்
2 துப்பாக்கிப் படகுகள் மூழ்கடிப்பு
6 வானூர்திகள் நாசம்

இரண்டாம் உலகப் போரில் ஈரான் நடுநிலை நாடாக அதன் அரசர் ரெசா ஷா பஹலவியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் புவியியல் அமைவிடம் காரணமாக அது மேல்நிலை உத்தியளவில் மிக முக்கியமான ஒரு நாடாக இருந்தது. ஈரானைக் கட்டுப்படுதுத்துவோர் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்துக்கான கிழக்குத் தளவாட வழங்கல் பாதைகளைக் கட்டுப்படுத்தக் கூடுமென்பதால் ஈரானின் முக்கியத்துவம் அதிகமானது. நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்குள் வேகமாக முன்னேறியதால் கடன்-குத்தகை ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்படும் தளவாடங்களை ஈரான் வழியாக அனுப்ப நேச நாடுகள் முடிவு செய்தன. இவ்வழிக்கு பெர்சிய வழி (Persian corridor) எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதற்காக ஈரானைத் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தன. ஈரானில் வாழும் ஜெர்மானிய குடிமக்களை வெளியேற்ற ரெசா ஷா மறுத்ததைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 25, 1941 இல் பிரிட்டனும் சோவியத் ஒன்றியமும் ஈரான் மீது படையெடுத்தன. இது ஒரு சாற்றாத படையெடுப்பாக அமைந்தது. தெற்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் வடக்கிலிருந்து சோவியத் படைகளும் ஒரே சமயத்தில் ஈரானைத் தாக்கி அதன் படைகளை முறியடித்தன. பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய வேந்தியக் கடற்படை ஈரானியக் கடற்படை கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்தது. இரு முனைத் தாக்குதலை ஈரானால் சமாளிக்க இயலவில்லை. மூன்று வாரங்கள் சண்டைக்குப் பின்னால் ஈரான் சரணடைந்தது. செப்டம்பர் 17ம் தேதி ஈரானியத் தலைநகர் டெஹ்ரான் வீழ்ந்தது. ரெசா ஷா கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மகன் முகமது ரெசா ஷா பஹ்லவி ஈரானின் அரசராக்கபப்ட்டார். போர் முடியும் வரை ஈரான் பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கிழக்குப் போர்முனையின் தளவாட வழங்கலுக்கு பெர்சிய வழி மிகவும் பயன்பட்டது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இரண்டாம் உலகப் போர்சோவியத் ஒன்றியம்நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலைபெரியாழ்வார்இராமானுசர்திருக்குர்ஆன்முதல் மரியாதைபாம்பாட்டி சித்தர்திருத்தணி முருகன் கோயில்சிறுகோள்ஈரோடு மாவட்டம்செம்மொழிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கார்ல் மார்க்சுஒயிலாட்டம்மெய்யெழுத்துஊராட்சி ஒன்றியம்காதலர் தினம் (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிஈ. வெ. கி. ச. இளங்கோவன்உடனுறை துணைஇந்திய மொழிகள்உதயநிதி ஸ்டாலின்யோகம் (பஞ்சாங்கம்)கண்டம்புஷ்பலதாஇந்தியக் குடியரசுத் தலைவர்ஆந்திரப் பிரதேசம்புணர்ச்சி (இலக்கணம்)சீரடி சாயி பாபாமெட்ரோனிடசோல்வெந்து தணிந்தது காடுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வேதநாயகம் பிள்ளைமுல்லை (திணை)சேரர்லக்ன பொருத்தம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வாணிதாசன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பாலை (திணை)தினமலர்திரௌபதி முர்முமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இன்னா நாற்பதுபெருமாள் முருகன்பைரவர்கழுகுமலை வெட்டுவான் கோயில்மருத்துவம்மனித உரிமைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழில் சிற்றிலக்கியங்கள்சைவத் திருமுறைகள்ஐங்குறுநூறுகார்த்திக் ராஜாராம் சரண்தேவநேயப் பாவாணர்கருச்சிதைவுபாரிபங்குச்சந்தைதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கா. ந. அண்ணாதுரைமருதம் (திணை)இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்பிரம்மம்சத்ய ஞான சபைசங்க காலப் புலவர்கள்எடப்பாடி க. பழனிசாமிநஞ்சுக்கொடி தகர்வுஅக்பர்அகநானூறுபெண்நாலடியார்மீனா (நடிகை)விஜய் (நடிகர்)இலங்கையின் வரலாறுமார்பகப் புற்றுநோய்🡆 More