வலயப்படுத்தல்

வலயப்படுத்தல் என்பது, ஒரு நகரம், பிரதேசம் அல்லது வேறு புவியியற் பரப்பிலுள்ள நிலங்களை பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு பயன்பாடுகளுக்காக ஒதுக்குவதைக் குறிக்கும்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள் வலயங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு வலயத்திலும் உள்ள நிலங்களை எவ்வகையான பயன்பாட்டுக்கு உட்படுத்தலாம் என்பது வலயப் படுத்தலின் மூலம் தீர்மானிக்கப் படுகின்றது.

ஒன்றுக்கொன்று ஒத்துவராதவை என்று கருதப்படும் பயன்பாடுகளை வேறுபடுத்துவதே வலயப்படுத்தலின் முதன்மையான நோக்கமாகும். ஏற்கனவே உள்ள, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்று காணப்படும் பயன்பாடுகள் அத்தகைய இடங்களில் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சிகள் வலயப்படுத்தல் விதிகளைப் பயன்படுத்துகின்றன. வலயப்படுத்தல் பொதுவாக மாநகரசபைகளைப் போன்ற உள்ளூராட்சிகளினால் கண்காணித்துக் கட்டுப்படுத்தபடுகின்றன.

குறிப்பிட்ட நிலத் துண்டுகளில், திறந்த வெளி, குடியிருப்பு, வேளாண்மை, வணிகம், தொழிற்சாலை முதலியவற்றில் எத்தகைய நடவடிக்கைகள் அல்லது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் வலயப்படுத்தலில் அடங்குகின்றன. அத்துடன் இவ்வலயங்களில் உள்ள நிலங்களின் பயன்பாடு தொடர்பில் பின்வரும் அம்சங்களும் வலயப்படுத்தலில் அடங்கும்.

  • பயன்பாடுகளின் அடர்த்தி;
  • கட்டிடங்களின் உயரம்;
  • நிலத்துண்டுகளில் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்கள் எடுக்கக்கூடிய பகுதியின் அளவு;
  • நிலத்துண்டுகளின் எல்லைகளில் இருந்து கட்டிடங்கள் அமைக்கப்படக்கூடிய தூரம்;
  • நிலத்துண்டுகளில் அமையக்கூடிய வெவ்வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடுகளுக்கு இடையேயான விகிதங்கள்;
  • வண்டிகளுக்கான வண்டிகள் தரிப்பிட வசதிகளின் அளவு.

Tags:

நகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இராசேந்திர சோழன்ஆண் தமிழ்ப் பெயர்கள்தஞ்சாவூர்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ஆழ்வார்கள்உப்புமாகண்டேன் காதலைவைரமுத்துசுந்தரமூர்த்தி நாயனார்எட்டுத்தொகை தொகுப்புபுறாமுதற் பக்கம்காய்ச்சல்தொலைக்காட்சிநெடுஞ்சாலை (திரைப்படம்)விஜய் வர்மாஇராமானுசர்பொருளாதாரம்நெல்பனிக்குட நீர்தற்கொலை முறைகள்பிளிப்கார்ட்கட்டற்ற மென்பொருள்நாம் தமிழர் கட்சிபதிற்றுப்பத்துதனுஷ்கோடிநாளிதழ்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)திரௌபதி முர்முலக்ன பொருத்தம்கண்ணதாசன்இமயமலைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கருப்பசாமிகலைசிவாஜி கணேசன்செஞ்சிக் கோட்டைகருப்பைதேசிக விநாயகம் பிள்ளைஇந்திய விடுதலை இயக்கம்தமிழ் படம் 2 (திரைப்படம்)ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)திருச்சிராப்பள்ளிகும்பம் (இராசி)நாலடியார்தைப்பொங்கல்மாணிக்கவாசகர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அகநானூறுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பிள்ளைத்தமிழ்பெண்தூதுவளைதொண்டைக் கட்டுயூத்கொங்கு வேளாளர்முத்தரையர்வீரமாமுனிவர்நந்தி திருமண விழாசிறுகோள்புனர்பூசம் (நட்சத்திரம்)வராகிஅக்கி அம்மைமதுரைமுதுமொழிக்காஞ்சி (நூல்)ம. கோ. இராமச்சந்திரன்இன்று நேற்று நாளைதிருவாசகம்போக்குவரத்துசேவல் சண்டைநெகிழிபங்குச்சந்தைஅன்னி பெசண்ட்நம்ம வீட்டு பிள்ளைமனித உரிமைநரேந்திர மோதிதமிழ் நாடக வரலாறு🡆 More