முகம்மது நசீது

முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: މުހައްމަދު ނަޝީދު; பிறப்பு: 17 May 1967) மாலைத்தீவு அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும், 2008 முதல் 2012 வரை மாலைத்தீவு அரசுத்தலைவராக இருந்தவரும் ஆவார்.

இவர் மாலைத்தீவுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத்தலைவரும், மாலைத்தீவு சனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முகம்மது நசீது 25% வாக்குகளைப் பெற்றார், அதன் பின்னர் 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த மாமூன் அப்துல் கயூமிற்கு எதிரான பொது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். நசீது 2008 நவம்பர் 11 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

முகம்மது நசீது
Mohamed Nasheed
މުހައްމަދު ނަޝީދު
முகம்மது நசீது
மாலைத்தீவுகள் நாடாளுமன்றத்தின் 19-வது அவைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 மே 2019
குடியரசுத் தலைவர்இப்ராகிம் முகமது சாலி
முன்னையவர்ஓசிம் இப்ராகிம்
மச்சங்கோலி மேது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 மே 2019
முன்னையவர்புதிய தொகுதி
மாலைதீவு சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 ஆகத்து 2014
Vice Presidentமுகம்மது சிபாசு
முன்னையவர்இப்ராகிம் திதி
மாலைத்தீவுகளின் 4-வது அரசுத்தலைவர்
பதவியில்
11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012
Vice Presidentமுகமது வாகித் அசன்
முன்னையவர்மாமூன் அப்துல் கயூம்
பின்னவர்முகமது வாகித் அசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 மே 1967 (1967-05-17) (அகவை 56)
மாலே, மாலைத்தீவுகள்
அரசியல் கட்சிமாலைதீவு சனநாயகக் கட்சி
துணைவர்(s)லைலா அலி அப்துல்லா
(முறிவு. 2020)
பிள்ளைகள்மீரா லைலா நசீது
சாயா லைலா நசீது
முன்னாள் கல்லூரிகொழும்பு பன்னாட்டுப் பாடசாலை,
லிவர்பூல் யோன் மூர்சு பல்கலைக்க்ழகம்

2011-12 இல் எதிர்க்கட்சிகள் ந்சீதுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. இராணுவத்தினரும், காவல்துறையினரும் இதில் இணைந்து கொண்டனர். இதனை அடுத்து 2012 பெப்ரவரி 7 இல் நசீது பதவியில் இருந்து விலகினார். இராணுவத்தினரால் அதான் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து விலகுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். கயூமின் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களின் உதவியுடன் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது. இவருக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த முகமது வாகித் அசன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை செய்த மாலைத்தீவு தேசிய விசாரணைகள் ஆணைக்குழு நசீதின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறியது. அவர் பதவியில் இருந்த போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகம்மது என்பவரைக் கைது செய்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நசீது 2015 மார்ச்சில் கைது செய்யப்பட்டு, 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பன்னாட்டு மன்னிப்பு அவை இதனை "அரசியல் பழிவாங்கல்" எனக் குற்றஞ் சாட்டியது. ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது. இந்தியாவும் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.

2016 இல், நசீது மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியம் சென்ற போது, அவருக்கு அந்நாடு அரசியல் புகலிடம் அளித்தது. சட்டரீதியான தடைகளைச் சுட்டிக்காட்டி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அவர் கைவிட்டார். கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் தனது வெற்றியை நிராகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்தார். 2018 அரசுத்தலைவர் தேர்தலில், நசீதின் இளமைக்கால நண்பரும், கட்சியின் வேட்பாளருமான இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றதை அடுத்து, நசீது நாடு திரும்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சங்கோலி மேது தொகுதியில் போட்டியிட்டு 1,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதை அடுத்து அவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 மே 6 இல், நசீது அவரது வீட்டுக்கருகில் தனது வாகனத்தில் ஏறும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் படுகாயமுற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
மாமூன் அப்துல் கயூம்
மாலைத்தீவுகளின் அரசுத்தலைவர்
2008–2012
பின்னர்
முகமது வாகித் அசன்
தூதரகப்பதவிகள்
முன்னர்
ஜிக்மே தின்லி
சார்க் தலைவர்
2011
பின்னர்
சுசில் கொய்ராலா

Tags:

திவெயி மொழிமாமூன் அப்துல் கயூம்மாலைத்தீவுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதிரு. வி. கலியாணசுந்தரனார்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ் மாதங்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வாதுமைக் கொட்டைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஊராட்சி ஒன்றியம்உயிர்மெய் எழுத்துகள்அறுசுவைகருக்கலைப்புஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்அரபு மொழிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைவேதநாயகம் பிள்ளைசிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்சவூதி அரேபியாமதயானைக் கூட்டம்ஆனைக்கொய்யாபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவானிலைடி. டி. வி. தினகரன்ஆறுமுக நாவலர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மாணிக்கம் தாகூர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிபரிவுநான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்மணிமேகலை (காப்பியம்)செயற்கை நுண்ணறிவுமேற்குத் தொடர்ச்சி மலைவிவேகானந்தர்பசுமைப் புரட்சிபுதுமைப்பித்தன்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசிறுகதைஎடப்பாடி க. பழனிசாமிநவரத்தினங்கள்இட்லர்டார்வினியவாதம்பனைசுந்தர காண்டம்உயிர்ப்பு ஞாயிறுபிரித்விராஜ் சுகுமாரன்நரேந்திர மோதிநீரிழிவு நோய்இந்தியப் பொதுத் தேர்தல்கள்நவக்கிரகம்உஹத் யுத்தம்அ. கணேசமூர்த்திமருத்துவம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகுண்டூர் காரம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்து சமயம்ஹஜ்மகாபாரதம்தங்கர் பச்சான்மெய்யெழுத்துஈ. வெ. இராமசாமிஅங்குலம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சோழர்ரோபோ சங்கர்மலையாளம்முருகன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பூலித்தேவன்முத்தரையர்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்🡆 More