மரியம் உசு-சமானி

மரியம் உசு-சமானி பேகம் சாகிபா அல்லது இராச்குமாரி ஈரா குன்வாரி அல்லது உருக்மாவத்தி சாகிபா அல்லது அர்கா பாய் (मारियम उज़-ज़मानी बेगम साहिबा அல்லது राजकुमारी हिरा कुंवरी அல்லது रुक्मावती साहिबा அல்லது हर्खाबाई, பாரசீகம்: مریم الزمانی بیگم صاحبہ) என்பவர் முகலாயப் பேரரசரான அக்பரைத் திருமணஞ்செய்த பின்பு, முகலாயப் பேரரசியாகிய இராசபுத்திர இளவரசி ஆவார்.

மரியம் உசு-சமானி ஆமேரின் அரசரான பார்மலின் மூத்த மகள் ஆவார். இவர் பேரரசர் சகாங்கீரின் தாயும் ஆவார்.

மரியம் உசு-சமானி பேகம் சாகிபா
مریم الزمانی بیگم صاحبہ
முகலாயப் பேரரசி
மரியம் உசு-சமானி
மரியம் உசு-சமானியின் ஓவியம்
துணைவர்சலாலுதீன் முகமது அக்பர்
முழுப்பெயர்
இராச்குமாரி ஈரா குன்வாரி
அரச குலம்முகலாயர்
தந்தைபார்மல்
பிறப்புஅக்டோபர் 1, 1542
அமேர்
இறப்பு1622
அடக்கம்மரியத்தின் கல்லறை
சமயம்இந்து

முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே இலாகூரின் அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது பாக்கித்தானில் அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான சகாங்கீரால் கட்டப்பட்டது.

வாழ்க்கை

இராச்குமாரி ஈரா குன்வாரி பேரரசர் அக்பரை பெப்ரவரி 6, 1562 இல் இந்தியாவில் இராச்சசுத்தானிலுள்ள சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் பேரரசர் அக்பரின் மூன்றாவது மனைவி ஆவார். பேரரசர் அக்பரின் முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்பு, இராச்குமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.

இவர் 1622 ஆம் ஆண்டு இறந்தார்.

சோதா பாய்

பேரரசர் அக்பரின் மனைவி, சகாங்கீரின் தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. சகாங்கீரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. அக்பர்நாமாவிலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.

சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் பேரரசர் அக்பரின் மனைவியைக் குறிக்கச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்தியாசு அகமதின் கருத்துப்படி, பேரரசர் அக்பரின் மனைவிக்குச் சோதா அக்பர் எனும் பெயர் முதன்முறையாக அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆவு இராச்சசுத்தான் என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படத்தில்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

மரியம் உசு-சமானி வாழ்க்கைமரியம் உசு-சமானி சோதா பாய்மரியம் உசு-சமானி திரைப்படத்தில்மரியம் உசு-சமானி இவற்றையும் பார்க்கமரியம் உசு-சமானி மேற்கோள்கள்மரியம் உசு-சமானிஅக்பர்ஜஹாங்கீர்முகலாயப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துலட்சுமி ரெட்டிஏக்கர்ஜீரோ (2016 திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ருதுராஜ் கெயிக்வாட்வெ. இராமலிங்கம் பிள்ளைசிற்பி பாலசுப்ரமணியம்பால கங்காதர திலகர்மலையகம் (இலங்கை)கருப்பசாமிகுறிஞ்சிப் பாட்டுமூவேந்தர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குலுக்கல் பரிசுச் சீட்டுஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)அக்கினி நட்சத்திரம்திருவள்ளுவர்எங்கேயும் காதல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஆந்திரப் பிரதேசம்குருதி வகைவிடை (இராசி)குருதிச்சோகைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சிலப்பதிகாரம்குற்றியலுகரம்வைசாகம்தொலமியின் உலகப்படம்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழர் பருவ காலங்கள்கல்வெட்டியல்நற்றிணைசென்னை சூப்பர் கிங்ஸ்உரிச்சொல்மூலம் (நோய்)குறுநில மன்னர்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்மாதம்பட்டி ரங்கராஜ்கொடிவேரி அணைக்கட்டுதிண்டுக்கல் மாவட்டம்அயோத்தி தாசர்இலங்கைபொய்கையாழ்வார்கருட புராணம்முடக்கு வாதம்குறுந்தொகைவிளக்கெண்ணெய்கூத்தாண்டவர் திருவிழாஅழகர் கோவில்திருமந்திரம்தொழினுட்பம்ஈரோடு தமிழன்பன்நீதி நெறி விளக்கம்சிவபுராணம்கபிலர் (சங்ககாலம்)வைணவ சமயம்விஜய் (நடிகர்)கணியன் பூங்குன்றனார்இந்திய தேசிய சின்னங்கள்இந்திய தேசியக் கொடிமுத்தொள்ளாயிரம்செயற்கை நுண்ணறிவுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்து சமயம்திருமூலர்சேரர்நிணநீர்க்கணுபஞ்சாயத்து ராஜ் சட்டம்தினமலர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கலைகுணங்குடி மஸ்தான் சாகிபுசமந்தா ருத் பிரபுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்🡆 More