2010 மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை (Mandhira Punnagai) திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தை கரு பழனியப்பன் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் கரு பழனியப்பன், மீனாட்சி, சந்தானம், ரிஷி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். 19 நவம்பர் 2010 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் வித்யாசாகர்.

மந்திரப் புன்னகை
இயக்கம்கரு பழனியப்பன்
தயாரிப்புகாத்திக் நாகராஜன்
இசைவித்யாசாகர்
நடிப்புகரு பழனியப்பன்
மீனாக்ஷி
சந்தானம்
ரிஷி
தம்பி ராமையா
ஒளிப்பதிவுராம்நாத் ஷெட்டி
படத்தொகுப்புராஜா முஹம்மது
வெளியீடு19 நவம்பர் 2010
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

கதிர் (கரு பழனியப்பன்) மிகவும் நேர்மையான, வெளிப்படையான, திறமையான கட்டிட கலை நிபுணர். அவனுக்கு பெண் தோழிகளோ அதிக ஆண் தோழர்களோ இல்லை. ஹோண்டா நிறுவனத்திற்கு ஒரு புதிய கட்டிடம் கட்டும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நிறுவனத்தில் பணிபுரியும் நந்தினி (மீனாட்சி) கதிரை சந்திக்க நேரிடுகிறது. கதிரின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுகிறாள் நந்தினி. ஆனால் கதிர் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. நந்தினியுடன் வேலை செய்யும் ஷங்கர் (ரிஷி) நந்தினியை காதல் செய்ய, எவ்வாறு அவளை தன் வசப்படுத்திடுவது என்று கதிரிடம் உதவி கேட்கிறான். கதிர் ஷங்கரை நந்தினி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனையே தன் காதலை வெளிப்படுத்த சொல்கிறான். இந்த செய்கையால் கதிர் மீது உள்ள நந்தினியின் அன்பு மேலும் அதிகமானது. நாளைடைவில், நந்தினி மேல் கதிருக்கு விருப்பம் ஏற்படுகிறது. ஆனால் அவள் தன்னை ஏமாற்றுகிறாளோ என்ற சந்தேகம் கதிருக்கு வருகிறது. காவல் நிலையத்திற்கு சென்று, தான் நந்தினி கொன்று விட்டதாக வாக்குமூலம் தருகிறான் கதிர். உடனே போலீஸ் கதிர் வீட்டிற்கு வந்து சோதனை செய்தால், நந்தினியின் பிணம் ஏதும் கிடைக்கவில்லை. கதிரின் நண்பன் மன்மத நாயுடு (தம்பி ராமையா), கதிர் முந்தைய இரவு தனக்கு தானே பேசிக்கொண்டு கோபத்தில் பொருட்களை உடைத்துக்கொண்டிருந்தான் என்று போலீஸில் சொல்கிறான்.

கதிரின் பாலக பருவத்தில், அவனின் தாய் தகாத உறவில் ஈடுபட்டதால் அவனின் தந்தை தற்கொலை செய்திகொண்டார். இந்த சம்பவத்தால், கதிருக்கு மனநல கோளாறு ஏற்பட்டதாக தெரியவருகிறது. நந்தினி எவ்வாறு கதிரின் கோளாறை சரி செய்ய முயற்சி செய்தாள் என்பதே மீதி கதையாகும்.

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் ஆவார். அறிவுமதி, விவேகா மற்றும் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதினர்.

வரிசை

எண்

பாடல் பாடல் வரிகள் பாடகர்கள்
1 சட்ட சட சட அறிவுமதி கார்த்திக், ஸ்வேதா மோகன்
2 என்ன குறையோ அறிவுமதி சுதா ரகுநாதன்
3 தண்ணி போட வாப்பா விவேகா கார்த்திக்
4` அன்பில்லாம கரைஞ்சது யுகபாரதி ஜெஸ்ஸி கிபிட், மாயா
5 மேகம் வந்து போகும் அறிவுமதி மது பாலகிருஷ்ணன், அன்வேஷா
6 சித்தன் முகம் ஒன்று அறிவுமதி கீர்த்தி சாகித்யா
7 தண்ணி போட வாப்பா (remix) விவேகா கார்த்திக்

விமர்சனங்கள்

பிகைண்ட்வுட்ஸ் என்னதான் கதை நன்றாக இருந்தாலும், படமாகப்பட்டவிதம் பார்வையாளர்களை ஏமாற்றுவதாகவே அமைந்தது" என விமர்சனம் செய்தது.

தி இந்து, "வேறு ஒரு பிரபல முகத்தை வைத்து எடுத்திருந்தால் படம் பெரிய அளவில் வந்திருக்கும் என்றும், நல்ல இயக்குனராக விளங்கிய கரு பழனியப்பன், நல்ல நடிகராக விளங்க மேலும் பயிற்சி தேவை என்றும்" விமர்சனம் செய்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் , "பழனியப்பன் நடிகராக முதல் படத்திலேயே ஒரு சவாலான வேடத்தில் நடுத்துள்ளார் என்றும், மாறுதலை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல படம் என்றும்," விமர்சனம் செய்தது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

2010 மந்திரப் புன்னகை நடிகர்கள்2010 மந்திரப் புன்னகை கதைச்சுருக்கம்2010 மந்திரப் புன்னகை இசை2010 மந்திரப் புன்னகை விமர்சனங்கள்2010 மந்திரப் புன்னகை மேற்கோள்கள்2010 மந்திரப் புன்னகை வெளியிணைப்புகள்2010 மந்திரப் புன்னகைகரு பழனியப்பன்சந்தானம்தம்பி ராமையாரிஷி (நடிகர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்திய அகாதமி விருதுதமிழர் அளவை முறைகள்திருவண்ணாமலைசிறுபாணாற்றுப்படைஇந்திய அரசியல் கட்சிகள்பதினெண் கீழ்க்கணக்குகல்லணைஅகமுடையார்பெரியாழ்வார்நெல்கணியன் பூங்குன்றனார்வெண்பாமரம்தங்கராசு நடராசன்கொல்லி மலைபணம்இசுலாம்கவின் (நடிகர்)காலநிலை மாற்றம்திரு. வி. கலியாணசுந்தரனார்ரோசுமேரிஇமயமலைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பாண்டியர்கலம்பகம் (இலக்கியம்)தாராபாரதிதோழிநஞ்சுக்கொடி தகர்வுஇரண்டாம் உலகம் (திரைப்படம்)பறையர்பீப்பாய்கடையெழு வள்ளல்கள்முதலாம் இராஜராஜ சோழன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தாஜ் மகால்சிட்டுக்குருவிமகாபாரதம்ஹோலிமெய்யெழுத்துதமிழ்ப் பருவப்பெயர்கள்இந்திய ரிசர்வ் வங்கிவிருமாண்டிஅரண்மனை (திரைப்படம்)அவிட்டம் (பஞ்சாங்கம்)பால்வினை நோய்கள்திராவிடர்நாடித் துடிப்புஅழகர் கோவில்சிவாஜி கணேசன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதிமே 4நான்மணிக்கடிகைடிராபிக் ராமசாமிவளைகாப்புஅரச மரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாண்டியனின் ராஜ்யத்தில்தண்டியலங்காரம்சிவாஜி (பேரரசர்)பக்தி இயக்கம்திருமலை நாயக்கர் அரண்மனைஆகு பெயர்இரட்டைக்கிளவிநாளந்தா பல்கலைக்கழகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஹர்திக் பாண்டியாதிராவிட முன்னேற்றக் கழகம்அவுரிநெல்லிஉலகமயமாதல்தமிழ்ப் புத்தாண்டுசிங்கம்இரண்டாம் உலகப் போர்நிலம்காம சூத்திரம்இந்தியப் பிரதமர்உப்புச் சத்தியாகிரகம்ஆங்கிலம்இந்திய மக்களவைத் தொகுதிகள்🡆 More