மணிரத்னம்: தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மணி ரத்னம் (Mani Ratnam, பிறப்பு:2 சூன் 1956) இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும்.

இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

மணி ரத்னம்
மணிரத்னம்: மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர், இளமை, மணவாழ்க்கை
பிறப்புசூன் 2, 1956 (1956-06-02) (அகவை 67)
மதுரை, தமிழ்நாடு, மணிரத்னம்: மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர், இளமை, மணவாழ்க்கை இந்தியா
இருப்பிடம்ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, மணிரத்னம்: மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர், இளமை, மணவாழ்க்கை இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாளர்
வலைத்தளம்
http://www.madrastalkies.com

மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர்

  • தமிழ் திரையுலகில் (1980)80களின் பிற்பகுதியில் பெரும் இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், நடுத்தர வர்க்க மக்களின் நிலைப்பாடு, இராமாயண போன்ற பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ் மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணியாகும்.
  • இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
  • மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
  • ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
  • மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இளமை

மணிரத்னம், 2 சூன் 1956 இல் பிறந்தார். இவர் தந்தை கோபால ரத்தினம், வீனஸ் பிக்சர்ஸில் விநியோகஸ்தராக பணியாற்றியவர். இவர் மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி, ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன், ஒரு படத்தயாரிப்பாளர். இவருடைய சில படங்களையும்  தயாரித்திருக்கிறார். இவருடைய தம்பி ஜி.சீனிவாசன்; இவருடைய சில படங்களுக்கு இணைத்தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். மணி ரத்னம் சென்னையிலே வளர்ந்தார். திரைக்குடும்பமாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க அனுமதி இல்லாமலேயே இருந்தது.  திரைப்படம் பார்ப்பது,  அவர் வீட்டுப் பெரியவர்களால் தீயப்பழக்கமாக கருதப்பட்டது. 'அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனாலும், வளர்ந்த  சிறுவனாக, திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்கள். இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து, அவரது ரசிகரானார்.

பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு, மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார். முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார்.

மணவாழ்க்கை

திரைப்பட நடிகை சுஹாசினியை 1988 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன். மனைவி மற்றும் மகன் நந்தனுடன் சென்னையில் வசிக்கிறார்.

இயக்கிய திரைப்படங்கள்

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மணிரத்னம் மாறுபட்ட தத்ரூபமான இயக்குனர்மணிரத்னம் இளமைமணிரத்னம் மணவாழ்க்கைமணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள்மணிரத்னம் மேற்கோள்கள்மணிரத்னம் வெளி இணைப்புகள்மணிரத்னம்தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்பத்மசிறீ

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாதவர்சேரர்எங்கேயும் காதல்பால்வினை நோய்கள்குறிஞ்சி (திணை)மண்ணீரல்தாராபாரதிம. பொ. சிவஞானம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உவமையணிபாண்டியர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருநாவுக்கரசு நாயனார்பலாகர்ணன் (மகாபாரதம்)காலநிலை மாற்றம்தீரன் சின்னமலைகம்பராமாயணத்தின் அமைப்புமகரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கால்நடை வளர்ப்புகுறிஞ்சிப் பாட்டுசைவத் திருமுறைகள்போதைப்பொருள்அக்கினி நட்சத்திரம்இராசேந்திர சோழன்சுய இன்பம்தெலுங்கு மொழிவேற்றுமையுருபுகஞ்சாஉன்னை நினைத்துவிஜயநகரப் பேரரசுஅஜித் குமார்உ. வே. சாமிநாதையர்சீர் (யாப்பிலக்கணம்)மஞ்சள் (மூலிகை)ஸ்டார் (திரைப்படம்)பதினெண்மேற்கணக்குவளையாபதிதினத்தந்திசித்த மருத்துவம்திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்சீறாப் புராணம்பரிதிமாற் கலைஞர்இரவீந்திரநாத் தாகூர்உப்புச் சத்தியாகிரகம்வினையாலணையும் பெயர்நெடுநல்வாடைதமிழ்நாடு அரசுக் கல்லூரிகள்பனிக்குட நீர்ஐம்பெருங் காப்பியங்கள்4ஜிஜெயம் ரவிகருப்பசாமிமுருகன்பாரிவைரமுத்துமொழிபெயர்ப்புதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிராமராஜன்அட்சய திருதியைமோகன்தாசு கரம்சந்த் காந்திஅவுரி (தாவரம்)நவதானியம்கவின் (நடிகர்)நம்ம வீட்டு பிள்ளைஆசாரக்கோவைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பகவத் கீதைஆய்த எழுத்துவெள்ளையனே வெளியேறு இயக்கம்சிதம்பரம் நடராசர் கோயில்சூரைஇரா. இளங்குமரன்இலங்கையின் மாவட்டங்கள்பசுமைப் புரட்சிதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)🡆 More