பெரிய நிக்கோபார் தீவு

பெரிய நிக்கோபார் தீவு ( Great Nicobar இந்தி: बड़ा निकोबार, நிக்கோபாரி: टोकिओंग लोंग, Tokieong Long) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் பெரிய பகுதியாகும்.

இது சுமத்ரா தீவின் வடக்கில் உள்ளது. இத்தீவு 1045 கி.மீ2 பரப்பளவு உடையது, என்றாலும் இதன் மக்கள் தொகை மிக்க்குறைவாக 9,440 மட்டுமே கொண்டது. இத்தீவு பெருமளவு மழைக் காடுகளைக் கொண்டு காட்டுயிர்களின் புகளிடமாக உள்ளது.

பெரிய நிக்கோபார் தீவு
Great Nicobar
बड़ा निकोबार
टोकिओंग लोंग
பெரிய நிக்கோபார் தீவு
பெரிய நிக்கோபார் தீவு வரைபடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்6°45′N 93°50′E / 6.750°N 93.833°E / 6.750; 93.833
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
பரப்பளவு1,045 km2 (403 sq mi)
உயர்ந்த ஏற்றம்642 m (2,106 ft)
உயர்ந்த புள்ளிதுய்லியர் மலை
நிர்வாகம்
ஒன்றிய பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை9,440 (2001)

இத்தீவில்தான் மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம், இந்திரா முனை ஆகியவை உள்ளன. இந்த இந்திரா முனைதான் இந்தியாவின் தென்முனையாக உள்ளது. மேலும் ஐ. என். எஸ். பாஸ் கடற்படை விமான நிலையமும் அதன் அருகே காம்ப்பெல் பே கூட்டு சேவைகள் கீழ் இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் வானூர்தி படைப்பிரிவும் (ஏ. என். சி ) உள்ளன. இதுவே இந்திய படைத்துறையின் தென்கோடி வானூர்தி நிலையமாகும்.

இத்தீவு 2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையின்போது பெருமளவு பாதிக்கப்பட்டது. அச்சமயம் வெளியுலக தொடர்பிலிருந்து ஒரு நாள்வரை துண்டிக்கப்பட்டிருந்தது.

நிலவியல்

இத்தீவில் அலெக்சாந்ரா, அம்ரித் கவுர், துக்மர், கலாதியா போன்ற பல ஆறுகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ஆறுகளும் தொற்கு அல்லது தென்மேற்கு திசையில் பாய்வது இத்தீவின் நிலப்பரப்பு எப்பக்கம் சாய்ந்துள்ளது என்பதை குறிப்பதா உள்ளது. இத்தீவில் நிறைய மலைத் தொடர்கள் காணப்படுகிறன. இதில் முதன்மையான தொடர் வடக்கு- தெற்காக அமைந்துள்ளது. இத்தொடரில்தான் துய்லியர் மலை உள்ளது, இதுவே கடல் மட்டத்தில் இருந்து 642 மீட்ர் உயரத்தில் உள்ள பகுதியாகும்.

இந்திரா முனை (6 ° 45'10 "வ மற்றும் 93 ° 49'36" கி) என்ற பகுதியே பெரிய நிக்கோபார் தீவு மற்றும் இந்தியாவின் தென்கோடி புள்ளியாக உள்ளது. இந்திரா முனை 26 திசம்பர் 2004 ஆண்டைய ஆழிப்பேரலையின்போது பாதிக்கப்பட்டது. இதனால் இங்கிருக்கும் கலங்கரை விளக்கம் சேதமடைந்திருந்தது. கலங்கரை விளக்கம் பின்னர் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

விலங்குகள்

தீவின் பெரும்பான்மை பகுதி மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகமாக உள்ளது. இப்பகுதி பல அகணிய உயிரிகளான தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் உறைவிடமாக உள்ளது. இங்குள்ள சில குறிப்பிடத்தக்க உயிரினங்கள் நிக்கோபார் ஸ்குருப்பலோ பறவை, எடிபிலி-கூட்டு ஸ்விஃப்லிட், நிக்கோபார் நீண்ட வால் குரங்கு, உவர்நீர் முதலை, பேராமை, மலேய பெட்டி ஆமை , நிக்கோபார் மர மூஞ்சூறு , இராச மலைப்பாம்பு, தேங்காய் நண்டு ஆகியவை ஆகும்.

மக்கள் தொகை

இந்த தீவு ஷோம்பென் மக்களின் தாயகமாக உள்ளது.

போக்குவரத்து

இங்கு கிழக்கு கடற்கரையில் 915மீ விமான ஓடுபாதை உள்ளது.

  • கப்பல்துறை: இங்கு உள்ள கேம்போல் வளைகுடாவில் ஒரு சிறிய துறைமுகம் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

பெரிய நிக்கோபார் தீவு நிலவியல்பெரிய நிக்கோபார் தீவு விலங்குகள்பெரிய நிக்கோபார் தீவு மக்கள் தொகைபெரிய நிக்கோபார் தீவு போக்குவரத்துபெரிய நிக்கோபார் தீவு மேற்கோள்கள்பெரிய நிக்கோபார் தீவுஇந்திகாட்டுயிர்சுமாத்திராநிக்கோபார் தீவுகள்பொழில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறவஞ்சிஇணையம்மலையாளம்சின்னம்மைபனைசிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்இந்திய உச்ச நீதிமன்றம்ஐங்குறுநூறுஎயிட்சுதமிழ் இலக்கணம்தினகரன் (இந்தியா)கூகுள்மே நாள்பெரியண்ணாதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மாணிக்கவாசகர்முதுமலை தேசியப் பூங்காபிள்ளைத்தமிழ்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஆப்பிள்மனித உரிமைசமுத்திரக்கனிமோகன்தாசு கரம்சந்த் காந்திமெய்ப்பொருள் நாயனார்கண்ணப்ப நாயனார்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பஞ்சாப் கிங்ஸ்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ராதிகா சரத்குமார்சுற்றுச்சூழல் மாசுபாடுகூத்தாண்டவர் திருவிழாமுரசொலி மாறன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சித்தர்ஈரோடு தமிழன்பன்இரட்சணிய யாத்திரிகம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வீரப்பன்இயற்கைபகிர்வுபட்டினத்தார் (புலவர்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கணம் (கணிதம்)ஆர். சுதர்சனம்சுந்தர காண்டம்கண்ணகிஅகரவரிசைதிட்டம் இரண்டுசெங்குந்தர்முத்துலட்சுமி ரெட்டிசேமிப்புக் கணக்குதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்தொல்காப்பியர்கள்ளழகர் கோயில், மதுரைதிருச்சிராப்பள்ளிவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்பிரேமம் (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திரா காந்திநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கொன்றை வேந்தன்புறப்பொருள் வெண்பாமாலைவாற்கோதுமைபழனி முருகன் கோவில்நாயன்மார்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கம்பராமாயணம்சமந்தா ருத் பிரபுமாநிலங்களவைஇடமகல் கருப்பை அகப்படலம்மயக்கம் என்னஇன்ஸ்ட்டாகிராம்ஆனைக்கொய்யாஅழகர் கோவில்🡆 More