பன்சன் சுடரடுப்பு

பன்சன் சுடரடுப்பு (Bunsen burner) என்பது எல்லாச் சோதனைச்சாலைகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு கருவியாகும்.

இது சூடாக்குதல், எரித்தல், தொற்று நீக்குதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

ராபர்ட் வில்ஹெல்ம் பன்சன் (Robert Wilhelm Bunsen) என்பவரின் பெயர் இக் கருவிக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பரவலாக நம்பப்படுவதுபோல் இவர் இந்தச் சுடரடுப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உண்மையில் இது மைக்கேல் பரடேயின் முந்திய வடிவமைப்பில், பன்சனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.

இக்கருவி, குளாயின் வழி தொடர்ச்சியாகவரும் எரியத்தக்க வாயுவொன்றைப் பாதுகாப்பாக எரியவைக்கிறது. முக்கியமாக மீதேன் எனும் வாயுவைக் கொண்டிருக்கும், இயற்கை எரிவளி, புரொப்பேன், பியூட்டேன் என்பன அடங்கிய திரவமாக்கிய பெட்ரோலியம் வாயு (liquified petroleum gas), அல்லது இவ்விரண்டினதும் கலவை என்பனவே இக்கருவியில் பயன்படும் எரியூட்டும் வாயுவாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நிலக்கரி வாயுவையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

பன்சன் சுடரடுப்பு
பன்சன் சுடரடுப்பின் பக்கத்துளைகளூடாகச் செல்லும் வளியின் அளவைப் பொறுத்து உண்டாகும் வெவ்வேறுவிதமான சுவாலைகள். 1. வளித்துளைகள் மூடியநிலை 2. வளித்துளைகள் அரைப்பங்கு திறந்தநிலை 3. வளித்துளைகள் ஏறத்தாளத் திறந்தநிலை 4. வளித்துளைகள் முற்றாகத் திறந்தநிலை

பன்சன் சுடரடுப்பு, ஒரு பாரமான அடியையும், அதிலிருந்து மேல்நோக்கியவாறு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயையும் கொண்டது. இக் குழாயின் அடிப்பகுதியில், அடிக்குச் சற்று மேலாக வாயு வழங்கும் குழாயைப் பொருத்துவதற்கான இணைப்புகள் உள்ளன. சோதனைச்சாலை மேசைகளில் பல முனைகளைக் கொண்ட வாயு வழங்கும் இணைப்புக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இம்முனைகளில் இருந்து ரப்பர் குழாய்கள் மூலம் பன்சன் சுடரடுப்புக்கு இணைப்புக் கொடுக்கப்படும். பன்சன் சுடரடுப்பின் நிலைக்குத்துக் குழாயின் அடிப்பகுதியில் நுண்ணிய துளை மூலம் செலுத்தப்படும்வாயு, குழாய் வழியாக மேல்நோக்கிச் செல்லும். இக் குழாயின் அடிப்பகுதியில் பக்கங்களில் துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். இத்துளைகளூடாக வளியும் உள்ளே செல்லும். இக் குழாயின் மேற்பகுதியூடாக வெளிவரும் இக்கலவை எரியூட்டப்படும்போது சுவாலையுடன் எரியும்.

மேற்கோள்கள்

Tags:

ஆய்வுகூடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யானைபகத் சிங்தொல்காப்பியப் பூங்காசைவ சித்தாந்த சாத்திரங்கள்உவமையணிபுவிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)முத்திரை (பரதநாட்டியம்)சுந்தர் பிச்சைகருப்பை நார்த்திசுக் கட்டிநீர்ரோகித் சர்மாமுல்லைப்பாட்டுஸ்ரீலீலாஜவகர்லால் நேருகுருதி வகைகாமராசர்பொருநராற்றுப்படை108 வைணவத் திருத்தலங்கள்இரண்டாம் உலகப் போர்இமயமலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வரலாறுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கிளிமும்பை இந்தியன்ஸ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தொல்காப்பியம்தமிழ்நாடுதமிழ்ப் பருவப்பெயர்கள்இயற்கை வளம்வெண்பாபெண் தமிழ்ப் பெயர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பாரிகள்ளுஎயிட்சுமலக்குகள்ஏலகிரி மலைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ர. பிரக்ஞானந்தாஇல்லுமினாட்டிபண்பாடுகலம்பகம் (இலக்கியம்)தெலுங்கு மொழிநிலம்வீரப்பன்ம. பொ. சிவஞானம்ஆதவன் தீட்சண்யாதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்இன்குலாப்கணினிதஞ்சைப் பெருவுடையார் கோயில்வேதம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்உமறுப் புலவர்அகமுடையார்அருணகிரிநாதர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்குறவஞ்சிநாழிகைதொலமியின் உலகப்படம்இசுலாம்அசை (ஒலியியல்)சுந்தர காண்டம்சிங்கம் (திரைப்படம்)இந்திரா காந்திஔவையார் (சங்ககாலப் புலவர்)சைவத் திருமுறைகள்குலசேகர ஆழ்வார்ஓம்தற்குறிப்பேற்ற அணிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மு. வரதராசன்செயற்கை நுண்ணறிவு🡆 More