நாகா மக்கள், இந்தியா

நாகா மக்கள் (Naga people) (pronounced ), இந்தியாவின் வடகிழக்கிலும், மியான்மர் நாட்டு வடமேற்கு எல்லைப்புறத்திலும் பல்லாண்டுகளாக வாழும் இந்தோ-மங்கலாய்டு இன மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர்.

இந்திய மாநிலங்களான நாகாலாந்தில் பெரும்பான்மையாகவும்; மணிப்பூர், மேகாலயா மற்றும் அசாமில் மற்றும் இந்தியாவின் எல்லைபுற பர்மாவின் அரக்கான் மலைத்தொடர்களில் சிறுபான்மையினராகவும் வாழும் நான்கு மில்லியன் நாகா மக்கள் பல்வேறு மொழிகள் பேசினாலும் ஒரே கலாச்சாரம், பண்பாடு, நாகரீகங்கள் கொண்டுள்ளனர். நாகா மக்கள் சுமி மொழி, லோத்தா மொழி, சாங்தம் மொழி, அங்காமி மொழி, போச்சூரி மொழி, அவோ மொழி, மாவோ மொழி, பௌமாய் மொழி, தங்குல் மொழி, தங்கல் மொழி போன்ற பரிமிய-திபெத் மொழிகள் பேசுகின்றனர். இதனுடன் தங்கள் நெருங்கிய குழுக்கிடையே பேசுவதற்கு இந்தோ-ஆரிய மொழியான நாகாமிய கிரியோல் மொழியை, ஆங்கில மொழியின் எழுத்தில் எழுதிப் படித்துப் பேசுகின்றனர். இந்திய அரசு நாக இன மக்களின் சமூக, கல்வி, அரசியல் முன்னேற்றத்திற்காக, நாகா மலைவாழ் பழங்குடி மக்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது.

நாகா மக்கள்
நாகா மக்கள், இந்தியா
கோன்யாக் நாகா இனத் தலைவர்
மொத்த மக்கள்தொகை
4 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
நாகா பழங்குடி மொழிகள், நாகாமிய கிரியோல் மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம் 95.00 % மற்றும் ஆவியுலகக்கோட்பாடு 5.00 %

2012 இல் நாகா இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்களிடம் எதிரிகளின் தலையைச் சீவி நரபலி இடும் முறை 1969 ஆம் ஆண்டு முடிய இருந்தது.

மொழிகள்

நாகா மக்கள், இந்தியா 
மியான்மார் நாட்டின் சுமி நாகா இன பெண்களின் புத்தாண்டு நடனம், 2007

வேறு இந்திய மாநிலங்களை விட நாகாலாந்து மாநில, நாகா இன மக்கள் 89 வகையான மொழிகள் பேசுகின்றனர். இம்மொழிகள் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இன மொழிகள் என மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு பகுதியில் அங்காமி, சோக்கிரி, கேசா மற்றும் ரெங்கமா, மத்தியப் பகுதியில் ஆவோ, லோத்தா; கிழக்குப் பகுதியில் கோன்யாக், போம், சங்கதம், கியாம்னியுங்கன், யும்சுங்கர் மற்றும் சாங் நாகா இனக் குழுவினரும் அடங்குவர். சுமி நாகா இன மக்கள் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வாழ்கின்றனர்.

இதனூடாக நாகா-போடா இன மக்கள் மிக்கிர் மொழியும், குகி மக்கள் லுப்பா மொழியும் பேசுகின்றனர். இவைகள் பர்மிய-திபெத் மொழிகளாகும்.

1967 ஆம் ஆண்டில் நாகாலாந்து சட்டமன்றம் ஆங்கில மொழியை, நாகாலாந்து அரசின் அலுவல் மொழியாகவும்; கல்விக்கூடங்களில் பயிற்று மொழியாகவும் அறிவித்தது. நாகா மக்கள் நாகாமிய கிரியோல் மொழியுடன், ஆங்கிலத்தையும் நன்கறிவர்.

பண்பாடும் அமைப்புகளும்

நாகா மக்கள், இந்தியா 
நாகா போர் வீரன், ஆண்டு 1960

நாகா மக்கள் மொழிகளிளால் பிரிந்தாலும், பண்பாடு மற்றும் நாகரீகத்தால் ஒன்றாக உள்ளனர். நாகா மக்கள் போர்க் குணம் படைத்தவர்கள்.

நாகா மக்களின் ஹார்ன்பில் நடனம் மற்றும் இசை புகழ் பெற்றது.

பெரும்பாலான நாகா மக்கள் உடை, உணவு, பழக்கவழக்கங்கள், மரபுவழிச் சட்டங்கள் முதலியவற்றில் ஒரே உணர்வுடன் உள்ளனர். தொன்மையான வழக்கங்களில் எதிரிகளை நரபலி இடும் முறையை நாகா மக்கள் 1969 ஆம் ஆண்டு முதல் கடைபிடிப்பதில்லை.

வரலாறு

பிற இனத்தவரை தாக்குதல்

நாகா மக்கள், இந்தியா 
நாகா இன மக்களின் புகைப்படம், ஆண்டு 1870

அசாம் மாநில எல்லையில் வாழும் குகி பழங்குடியினருடன் நாகா மக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

அசாம் மாநில அகோம் மக்கள் தவிர பிற இனக் குழுவினருடன் நாகா மக்கள் பழகுவதில்லை. 1826இல் பர்மியப் பேரரசுக்கும் - பிரித்தானிய இந்தியாவுக்கும் ஏற்பட்ட யாந்தபோ உடன்படிக்கையின்படி, அசாம் பகுதி பர்மாவிடமிருந்து இந்தியாவிடன் இணைக்கப்பட்டது. 1830 மற்றும் 1845களில் பிரித்தானியப் படைகள் நாகா மக்கள் வாழும் பகுதிகளை கைப்பற்ற முயன்ற போது, ஆயுதப் போராட்டங்கள் மூண்டது.

1830இல் நாகா அங்காமி இனக் குழுவினரிடமிருந்து, பிரித்தானியப் படையினர் கொரில்லாப் போர் முறையை கற்றுக்கொண்டனர். 1878இல் நாகா மக்கள் வாழும் பகுதி முழுவதையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.

நாகா மக்கள், இந்தியா 
நாகா பழங்குடி மனிதர்கள், 1905

கிறித்தவ அமைப்புகள்

19ஆம் நூற்றாண்டில், கி பி 1839இல் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாகாலாந்திற்கு வந்த சீர்திருத்தத் திருச்சபை கிறித்தவ அமைப்புகள், பெரும்பாலான நாகா மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்தனர். இதனால் நாகா மக்களிடையே பண்டைய பழக்க வழக்கங்கள் ஒழிந்து ஆங்கிலம் நன்கு பரவியதால், கல்வி வளர்ந்தது.

95% நாகா மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிறித்தவமும், திருச்சபைகளும் நாகா மக்களின் சமூக, அரசியல், கல்வி அமைப்புகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது. 2012இல் நாக இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்கள் எதிரிகளின் தலையை சீவி நரபலி இடும் முறை 1969ஆம் ஆண்டு முடிய இருந்தது. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் மறைந்துவிட்டது.

எதிர்ப்புகளும் போராட்டங்களும்

நாகா மக்களுக்கும் நாடு, அரசு, அமைச்சர், ஆளுநர் போன்ற விடயங்கள் தெரியாத காரணத்தால், தாங்கள் வாழும் பகுதிகள் தங்களதே என்ற கொள்கை உடைய நாக மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள விரும்புவதால், தங்கள் இனத்தவர் தவிர பிறரை தாங்கள் வாழும் பகுதிகளில் அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்களை தாக்கி எதிர்ப்பர்.

1918இல் ஆங்கிலக் கல்வி பெற்ற சில நாகா மக்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, இந்திய சீர்திருத்த திட்டத்தில், தங்களை இணைக்கக்கூடாது என சைமன் குழுவிற்கு கடிதம் அனுப்பினர்.

அங்காமி சாபு பிசோ என்பவரின் தலைமையிலான நாகா தேசிய கவுன்சில் (Naga National Council) 14 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா விடுதலை நாளுக்கு ஒரு நாள் முன்னர், 13 ஆகஸ்டு 1947 அன்று நாகா மக்கள் தங்களின் பகுதியை தனி நாடாக அறிவித்து புதிய நாகாலாந்து நாட்டை அறிமுகப்படுத்தினர். நாகா நாடு வேறு எந்த நாட்டவருக்கும் உரிமையில்லை என்று இனப்போராட்டம் அறிவித்தனர்.

சூன் 1947 இல் இந்திய அரசுக்கும் நாகா தேசிய கவுன்சிலுக்கும் இடையே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்பது அம்ச ஒப்பந்தம், அடுத்த பத்து ஆண்டுகள் வரை, இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்டு, தங்கள் பகுதிகளில் நாகா மக்கள் அரசு அமைத்து செயல்படலாம் எனக்கூறியது. இதைப் பல நாகா குழுவினர்கள் எதிர்த்தனர்.

1951 இல் நாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோவின் நாகா மக்களில் 99% விழுக்காடு கொண்ட நாகாலாந்து பகுதியைத் தனி நாடாகப் பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1952ஆம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில நாகா மக்கள், இந்தியப் படைகளுடனும், பிற இன மக்களுடனும் கொரில்லா முறையில் ஆயுதப் போர் தொடுத்தனர்.

நாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோ கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, பின்னர் லண்டனில் தஞ்சம் புகுந்து, 1990இல் இறக்கும் வரை வெளிநாட்டிலிருந்து நாகா மக்களின் விடுதலைக்காகப் போராடினார்.

போர் நிறுத்த ஒப்பந்தம்

1 ஆகஸ்டு, 1997 முதல் பிரதமர் ஐ. கே. குஜரால் முயற்சியால் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தப்படி இந்திய இராணுவத்திற்கும், நாகா கொரில்லாப் படையினருக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நாகா மக்கள், இந்தியா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naga people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

  • Wettstein, Marion. 2014. Naga Textiles: Design, Technique, Meaning and Effect of a Local Craft Tradition in Northeast India. Arnoldsche, Stuttgart 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89790-419-4.
  • von Stockhausen, Alban. 2014. Imag(in)ing the Nagas: The Pictorial Ethnography of Hans-Eberhard Kauffmann and Christoph von Fürer-Haimendorf. Arnoldsche, Stuttgart 2014, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89790-412-5.
  • Stirn, Aglaja & Peter van Ham. The Hidden world of the Naga: Living Traditions in Northeast India. London: Prestel.
  • Oppitz, Michael, Thomas Kaiser, Alban von Stockhausen & Marion Wettstein. 2008. Naga Identities: Changing Local Cultures in the Northeast of India. Gent: Snoeck Publishers.
  • Kunz, Richard & Vibha Joshi. 2008. Naga – A Forgotten Mountain Region Rediscovered. Basel: Merian.
  • Singh, Waikhom Damodar (21 June 2002). "The Indo – Naga Ceasefire Agreement". Manipur Online (originally published in the The Sangai Express). Archived from the original on 26 மே 2005. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகஸ்ட் 2016.

Tags:

நாகா மக்கள், இந்தியா மொழிகள்நாகா மக்கள், இந்தியா பண்பாடும் அமைப்புகளும்நாகா மக்கள், இந்தியா வரலாறுநாகா மக்கள், இந்தியா இதனையும் காண்கநாகா மக்கள், இந்தியா மேற்கோள்கள்நாகா மக்கள், இந்தியா வெளி இணைப்புகள்நாகா மக்கள், இந்தியா மேலும் படிக்கநாகா மக்கள், இந்தியாஅசாம்அரக்கான் மலைகள்இந்திய அரசுஇந்தியாஇந்தோ ஆரிய மொழிகிரியோல் மொழிநாகாலாந்துபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பர்மாமணிப்பூர்மியான்மர்மேகாலயா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைபுறப்பொருள் வெண்பாமாலைவி. கே. சின்னசாமிபுற்றுநோய்இயற்பியல்பெண்ணியம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகலைவ. உ. சிதம்பரம்பிள்ளைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வசுதைவ குடும்பகம்வே. தங்கபாண்டியன்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நீர் மாசுபாடுபங்குனி உத்தரம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்காடுவெட்டி குருநீலகிரி மக்களவைத் தொகுதிஇதயம்இசுலாம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழச்சி தங்கப்பாண்டியன்ஸ்ரீஜோதிகாதமிழர் பருவ காலங்கள்சிதம்பரம் நடராசர் கோயில்வேதாத்திரி மகரிசிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழ்ஒளிகவிதைஆ. ராசாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மும்பை இந்தியன்ஸ்கொங்கு நாடுசினைப்பை நோய்க்குறிகோலாலம்பூர்உயிர்ப்பு ஞாயிறுசுக்ராச்சாரியார்அரிப்புத் தோலழற்சிஈரோடு மக்களவைத் தொகுதிதேம்பாவணிதென்காசி மக்களவைத் தொகுதிதேவதாசி முறைகுறிஞ்சி (திணை)உலா (இலக்கியம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மூவேந்தர்தீரன் சின்னமலைபோதி தருமன்செஞ்சிக் கோட்டைசனீஸ்வரன்பி. காளியம்மாள்நபிசோழர்திருமுருகாற்றுப்படைதேனீவிண்ணைத்தாண்டி வருவாயாகௌதம புத்தர்சங்க இலக்கியம்பெரியாழ்வார்குறுந்தொகைகலம்பகம் (இலக்கியம்)தங்கம் தென்னரசுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிசீனாதாயுமானவர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஓம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இரட்டைக்கிளவிஎஸ். ஜெகத்ரட்சகன்மண்ணீரல்நெடுநல்வாடை (திரைப்படம்)பதுருப் போர்வேற்றுமையுருபுகணியன் பூங்குன்றனார்அகமுடையார்🡆 More