திருபாய் அம்பானி: இந்திய தொழிலதிபர்.

தீரஜ்லால் இராசந்த் அம்பானி (Dhirajlal Hirachand Ambani 28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002), பரவலாக திருபாய் அம்பானி என்று அழைக்கப்படும் இவர் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவிய ஓர் இந்திய வணிக அதிபராவார் .

2016 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

திருபாய் அம்பானி
திருபாய் அம்பானி: ஆரம்பகால வாழ்க்கை, ரிலையன்ஸ் நிறுவனம், இறப்பு
2002இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை
பிறப்புதீரஜ்லால் இராசந்த் அம்பானி
(1932-12-28)28 திசம்பர் 1932
சோர்வாத், ஜுனாகத் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(present-day குசராத்து, இந்தியா)
இறப்பு6 சூலை 2002(2002-07-06) (அகவை 69)
மும்பை, இந்தியா
பணிதொழிலதிபர்
அமைப்பு(கள்)ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் கேப்பிடல்
ரிலையன்ஸ் பவர்
வாழ்க்கைத்
துணை
கோகிலா திருபாய் அம்பானி
பிள்ளைகள்4, முகேசு அம்பானி மற்றும் அனில் அம்பானி உட்பட
விருதுகள்பத்ம விபூசண் (2016)

ஆரம்பகால வாழ்க்கை

திருபாய் அம்பானி 28 டிசம்பர் 1932 அன்று குசராத், ஜுனாகத் மாவட்டம், மாலியா தாலுகாவில் உள்ள சோர்வாடில் பிறந்தார். ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி மற்றும் மோத் வானியா (பணியா) சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியரான ஜம்னாபென் அம்பானியின் மகன்களில் ஒருவர் ஆவார். பகதூர் காஞ்சி பள்ளியில் தனது படிப்பைப் பயின்றார்.

1958 ஆம் ஆண்டு ஏடனை விட்டு வெளியேறி, இந்தியாவில் ஜவுளி சந்தை வணிகத்தில் ஈடுபட்டார்.

ரிலையன்ஸ் நிறுவனம்

அம்பானி இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் தனது உறவினரும் தன்னுடன் ஏமனில் தங்கியிருந்த சம்பக்லால் தமனியுடன் இணைந்து "மஜின்" நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் பாலியஸ்டர் நூலை இறக்குமதி செய்து மசாலாப் பொருட்களை யேமனுக்கு ஏற்றுமதி செய்தது.

ரிலையன்ஸ் வணிக நிறுவனத்தின் முதல் அலுவலகம் மஸ்ஜித் பண்டரில் உள்ள நரசிநாத தெருவில் அமைக்கப்பட்டது. அது 350 sq ft (33 m2) ஆக இருந்தது ஒரு தொலைபேசி, ஒரு மேசை மற்றும் மூன்று நாற்காலிகள் கொண்ட அறையாக இருந்தது. துவக்கத்தில், வியாபாரத்தில் இவர்களுக்கு உதவ இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.

இறப்பு

சூன் 24, 2002 அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்பானி மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது பக்கவாதம், முதல் பக்கவாதம் பிப்ரவரி 1986 இல் ஏற்பட்ட போது இவரது வலது கை செயலிழந்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக ஆழ்மயக்க நிலையில் இருந்த இவர் சூலை 6, 2002 அன்று இறந்தார்.

பாராட்டுக்கள்

  • 1996, 1998 மற்றும் 2000 - ஏசியாவீக் இதழின் "பவர் 50-ஆசியாவின் சக்திவாய்ந்த மனிதர்கள்" பட்டியலில் இடம்பெற்றது.
  • சூன் 15, 1998 – தி வார்டன் பள்ளி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் டீன் பதக்கம் (தலைமைத்துவத்தின் சிறந்த முன்மாதிரியை அமைத்ததற்காக ). டீன் பதக்கத்தைப் பெற்ற முதல் இந்தியர் திருபாய் அம்பானி ஆவார்.
  • நவம்பர் 8, 2000, மும்பை - செம்டெக் அறக்கட்டளை மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு ஆகியவற்றால் "நூற்றாண்டின் நாயகன்" விருது வழங்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 10, 2001, மும்பை – தி எகனாமிக் டைம்ஸ் விருதுகள் - கூட்டாண்மை சிறப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு [FICCI] மூலம் திருபாய் அம்பானி "20 ஆம் நூற்றாண்டின் நாயகன்" என்று பெயரிடப்பட்டார்.
  • 28 டிசம்பர் 2002 அன்று திருபாய் அம்பானி இடம்பெற்ற தபால்தலையை இந்திய அஞ்சல் வெளியிட்டது.
  • அக்டோபர் 2011- மரணத்திற்குப் பின் ஏபிஎல்எஃப் குளோபல் ஏசியன் விருதை ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் ஃபோரம் விருது நிகழ்வில் வழங்கப்பட்டது.
  • சனவரி 2016- மரணத்திற்குப் பின் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது.

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Tags:

திருபாய் அம்பானி ஆரம்பகால வாழ்க்கைதிருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம்திருபாய் அம்பானி இறப்புதிருபாய் அம்பானி பாராட்டுக்கள்திருபாய் அம்பானி சான்றுகள்திருபாய் அம்பானி வெளியிணைப்புகள்திருபாய் அம்பானிபத்ம விபூசண்ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெண்பாராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அருணகிரிநாதர்நியூயார்க்கு நகரம்மார்பகப் புற்றுநோய்நிர்மலா சீதாராமன்சூரைதிருமுருகாற்றுப்படைஇயற்கை வளம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஇலங்கைபெண்மூதுரைதினகரன் (இந்தியா)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிதிராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்து சமயம்இராவண காவியம்உ. வே. சாமிநாதையர்கார்லசு புச்திமோன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்திய நிதி ஆணையம்பிரேமலதா விஜயகாந்த்பட்டினப் பாலைநவரத்தினங்கள்அ. கணேசமூர்த்திகம்பராமாயணம்இந்திய தேசிய சின்னங்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிலம்பம்உத்தரகோசமங்கைஇடலை எண்ணெய்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ் எழுத்து முறைவேதம்இராமச்சந்திரன் கோவிந்தராசுவிநாயகர் அகவல்முடக்கு வாதம்கள்ளர் (இனக் குழுமம்)விசயகாந்துகண்ணனின் 108 பெயர் பட்டியல்ஓம்நபிவரைகதைஎலுமிச்சைதமிழக வெற்றிக் கழகம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நாமக்கல் மக்களவைத் தொகுதிமுதற் பக்கம்சித்திரைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஆத்திசூடிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சி. விஜயதரணிபரிதிமாற் கலைஞர்ஜோதிமணிஉரைநடைமுல்லை (திணை)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கண்ணப்ப நாயனார்திருநங்கைபூக்கள் பட்டியல்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)கே. மணிகண்டன்கரணம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇந்திய வரலாறுகணினிஇரச்சின் இரவீந்திராகாற்று வெளியிடைகயிறுசூல்பை நீர்க்கட்டிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஎங்கேயும் காதல்ஜெயகாந்தன்🡆 More