ஜெப் பெசோஸ்: அமெரிக்க தொழிலதிபர்.

ஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார்.

இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.தற்போதைய கணக்குப்படி இவர் தான்உலகிலேயே பெரும்பணக்காரர் ஆவார். இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.

ஜெப் பெசோஸ்
ஜெப் பெசோஸ்: அமேசான் டாட் காம், பிற தொழில்கள், கொடைகள் அளித்தல்
2018 சனவரியில் பெசோஸ்
பிறப்புஜெஃப்பெரி ப்ரெஸ்டன் ஜோர்ஜென்சென்
சனவரி 12, 1964 (1964-01-12) (அகவை 60)
ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ), ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்மெதைனா, வாசிங்டன், அமெரிக்கா
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
பணி
  • தொழில் நுட்பம்
  • தொழிலதிபர்
  • முதலீட்டாளர்
  • கொடையாளர்
அறியப்படுவதுஅமேசான் மற்றும் ப்ளு ஒருஜின் நிறுவனங்களைத் தொடங்கியது
சொத்து மதிப்புUS$137 பில்லியன் (சனவரி 2019)
பட்டம்பங்குதாரர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அமேசான் தலைவர்
வாழ்க்கைத்
துணை
மேக்கென்சி டட்டில் (தி. 1993)
பிள்ளைகள்4

அமேசான் டாட் காம்

1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது.

மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படுகிறார். கொடைகள் வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.

பிற தொழில்கள்

இணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது.

ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார்.

கொடைகள் அளித்தல்

  • ஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார்.
  • கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது.
  • சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.

மேற்கோள்

Tags:

ஜெப் பெசோஸ் அமேசான் டாட் காம்ஜெப் பெசோஸ் பிற தொழில்கள்ஜெப் பெசோஸ் கொடைகள் அளித்தல்ஜெப் பெசோஸ் மேற்கோள்ஜெப் பெசோஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தனுஷ் (நடிகர்)சீனாகன்னி (சோதிடம்)மலையாளம்கிளிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சிவாஜி (பேரரசர்)விலங்குசுபாஷ் சந்திர போஸ்கிருட்டிணன்எட்டுத்தொகைஇன்று நேற்று நாளைஆப்பிள்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இடலை எண்ணெய்நாழிகைகாதலர் தினம் (திரைப்படம்)பராக் ஒபாமாபரதநாட்டியம்பொது ஊழிபண்பாடுஇன்னொசென்ட்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழர்யூடியூப்அகமுடையார்இனியவை நாற்பதுபதுருப் போர்கருக்கலைப்புஅகழ்ப்போர்இந்திய வரலாறுவிளையாட்டுதிராவிட முன்னேற்றக் கழகம்முதல் மரியாதைவேதாத்திரி மகரிசிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுகணியன் பூங்குன்றனார்ஊட்டச்சத்துகருப்பசாமிகட்டபொம்மன்முருகன்நெல்சனகராஜ்சித்தர்கள் பட்டியல்விஜய் (நடிகர்)ஜிமெயில்திருமணம்சூரியக் குடும்பம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857வே. செந்தில்பாலாஜிஇரவுக்கு ஆயிரம் கண்கள்பிள்ளையார்நாய்தியாகராஜா மகேஸ்வரன்போதைப்பொருள்கொங்கு வேளாளர்நுரையீரல் அழற்சிஇயற்கை வளம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குசேலம்ஐஞ்சிறு காப்பியங்கள்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கங்கைகொண்ட சோழபுரம்சுப்பிரமணிய பாரதிஎங்கேயும் காதல்வெள்ளி (கோள்)ஆங்கிலம்திதி, பஞ்சாங்கம்கணிதம்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ் மாதங்கள்மூலிகைகள் பட்டியல்கால்-கை வலிப்பு🡆 More