ஜாக்ஸ் துபோகேத்

ஜாக்ஸ் துபோகேத் (பிறப்பு 8 சூன் 1942) ஒரு ஓய்வுபெற்ற சுவிஸ் உயிர் இயற்பியலாளர்.

இவர் ஹிடெல்பர்க், ஜெர்மனியில் உள்ள ஐரோப்பா மூலக்கூறு உயிர்பியல் ஆராய்ச்சிக் கூடத்தின் முன்னால் ஆராய்ச்சியாளர் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன்னே பல்கலைகழகத்தில் உயிர் இயற்பியல் பிரிவில் கெளவரவ பேராசிரியராகவும் உள்ளார்.

ஜாக்ஸ் துபோகேத்
ஜாக்ஸ் துபோகேத்
ஜாக்ஸ் துபோகேத்
பிறப்பு8 சூன் 1942 (1942-06-08) (அகவை 81)
ஐகலே, சுவிட்சர்லாந்து
குடியுரிமைசுவிட்சர்லாந்து
துறைகட்டமைப்பு உயிரியல்
தாழ்வெப்ப எலக்ட்ரான் நுண்ணோக்கி
பணியிடங்கள்ஐரோப்பா மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சிக் கூடம் (1978-1987)
லாசன்னே பல்கலைகழகம் (since 1987)
கல்விலாசன்னே பாலிடெக்னிக் (BS)
ஜெனீவா பல்கலைக்கழகம் (MS)
ஜெனீவா பல்கலைக்கழகம் (PhD)
அறியப்படுவதுதாழ்வெப்ப-எலக்ட்ரான் நுண்ணோக்கி
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2017)

இவர் 2017 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு ரிச்சர்டு ஹென்டர்சன் மற்றும் யோக்கிம் பிராங்கு ஆகியோருடன் இணைந்து கரைசலில் உயிரணு மூலக்கூறுகளின் உயர்தர கட்டமைப்பு உறுதிப்பாடு குறித்து ஆராய்வதற்கு உருவாக்கிய தாழ்வெப்ப ஒற்றைத் துகள் எலக்ட்ரான் நுண்ணோக்கி பற்றிய ஆராய்ச்சிக்காகப் பெற்றார்.

ஆராய்ச்சிப் பணி

1962 ஆம் ஆண்டில் துபாகேத் லாசன்னே பாலிடெக்னிக் கல்லூரியில் இயற்பியல் படித்தார் மற்றும் பெளதீக பொறியியலில் 1967 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1969 ஆம் ஆண்டு ஜெனீவா பல்கலைக்கழகம் இவர் மூலக்கூறு உயிரியலில் சான்றிதழ் பெற்றார் மற்றும் டின்ஏ பற்றி ஆராய எலக்ட்ரான் நுண்ணொக்கி பற்றி படிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் உயிர் இயற்பியல் பற்றிய தனது ஆராய்ச்சிக் கட்டுரையை ஜெனீவா பல்கலைக்கழகம் மற்றும் பேசெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முடித்தார்.

1978 முதல் 1987 ஆம் ஆண்டு வரையில் ஹிடெல்பர்க், மேற்கு ஜெர்மனியில் உள்ள ஐரோப்பா மூலக்கூறு உயிர்பியல் ஆராய்ச்சிக் கூடத்தில் குழுத் தலைவராக இருந்தார். 1987 முதல் 2007 வரையான காலத்தில் லாசன்னே பல்கலைகழகத்தில் பேராசிரியாராக இருந்தார். 2007 ஆம் ஆண்டில் தனது 65 ஆம் அகவையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பின் கெளரவ பேராசிரியராக லாசன்னே பல்கலைகழகத்தில் தொடர்கிறார்.

வாழ்க்கை

துபோகேத் திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு டிஸ்லெக்ஸியா என்ற குறைபாடு உள்ளது.

சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயக கட்சியில் உறுப்பினராக உள்ளார் மேலும் மோர்க்ஸ் நகரசமையில் உறுப்பினராகவும் இருக்கிறார். இங்கு மேற்பார்வை குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கர்மாபாதரசம்குறிஞ்சிப் பாட்டுபுவிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இசுரயேலர்விலங்குகுமரகுருபரர்தேவேந்திரகுல வேளாளர்வெண்குருதியணுபெண்அய்யா வைகுண்டர்கிட்டி ஓ'நீல்அபூபக்கர்நம்ம வீட்டு பிள்ளைஇந்திய ரிசர்வ் வங்கிகார்த்திக் ராஜாசுரதாஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்ஏ. ஆர். ரகுமான்நஞ்சுக்கொடி தகர்வுவேளாளர்இராம நவமிநான்மணிக்கடிகைஅன்புமணி ராமதாஸ்பரிபாடல்பாலை (திணை)இன்னொசென்ட்இந்தியப் பிரதமர்கன்னியாகுமரி மாவட்டம்முருகன்கட்டற்ற மென்பொருள்கருப்பசாமிநாலடியார்சுருட்டைவிரியன்உஹத் யுத்தம்நன்னூல்திரு. வி. கலியாணசுந்தரனார்பூப்புனித நீராட்டு விழாகபிலர் (சங்ககாலம்)சிந்துவெளி நாகரிகம்வேளாண்மைகள்ளுவணிகம்சிறுபாணாற்றுப்படைபாம்பாட்டி சித்தர்யாவரும் நலம்பெரும்பாணாற்றுப்படைவேதநாயகம் பிள்ளைமதுரைக் காஞ்சிதமிழர் கலைகள்சீமான் (அரசியல்வாதி)மார்ச்சு 28ஆளுமைநண்பகல் நேரத்து மயக்கம்யாதவர்தமிழர் பருவ காலங்கள்தோட்டம்இசுலாத்தின் புனித நூல்கள்ஆப்பிள்உப்புச் சத்தியாகிரகம்வல்லம்பர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்புதினம் (இலக்கியம்)கழுகுமலைமஞ்சள் காமாலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உத்தராகண்டம்நுரையீரல் அழற்சிவெ. இராமலிங்கம் பிள்ளைஇணைச்சொற்கள்ஆழ்வார்கள்கருப்பை வாய்பட்டினத்தார் (புலவர்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பண்டமாற்றுமனித நேயம்🡆 More