கவிஞர் காளிதாசன்

காளிதாசன் (Kalidasan; இறப்பு: 29 மே 2016) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.

இவர் வைகாசி பொறந்தாச்சு, தெற்கு தெரு மச்சான் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். ஆரம்ப காலத்தில் திருப்பத்தூரான் ௭ன்ற பெயரிலும் பின்னாளில் காளிதாசன் ௭ன்ற பெயரிலும் பாடல்கள் இயற்றினார்.

கவிஞர் காளிதாசன்
பிறப்புகாளிதாசன்
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(2016-05-29)மே 29, 2016
தஞ்சை
பணிகவிஞர், பாடலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
புவனேஸ்வரி
பிள்ளைகள்பாலசுப்பிரமணியம்

அறிமுகம்

1969-இல் தாலாட்டு என்ற படத்தில், மலையாக இருப்பதெல்லாம் ஆசைவடிவம் அது மண்ணாகும் போது ஞானிவடிவம் என்ற பாடல் மூலம் அறிமுகமானார். அப்போது இவர் பெயர் திருப்பத்தூர் ராசு. தாலாட்டு படத்திற்குப் பிறகு திருப்பத்தூரான் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், "கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா' என்ற பிரபலமான பாடலை எழுதினார். எல். ஆர். ஈஸ்வரி பாடிய இப்பாடல் கோயில் விழாக்களில் அதிகம் ஒலிக்கிறது.

தேவாவுடன் கூட்டணி

காளிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பாடல் எழுதத் தொடங்கியதும் வாய்ப்புகள் இவரைத் துரத்திக் கொண்டு வந்து உச்சத்தில் வைத்தது. காளிதாசன் என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார். தேவா இசையில் தொடர்ந்து 75 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார். 800 பாடல்கள் இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறார். 1994-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இவர் பெற்றிருக்கிறார். இவருடைய திரைப்பாடல்கள் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. அதில் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னது போல் எந்தக் கவிஞரும் சொன்னதில்லை. இவர் நீங்க நல்லா இருக்கணும் திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார்.

திரைப்படப் பட்டியல்

  1. - தாலாட்டு
  2. - ஓடி விளையாடு தாத்தா
  3. - சட்டம் ௭ன் கையில்
  4. - தெற்கு தெரு மச்சான்
  5. - வைகாசி பொறந்தாச்சு
  6. - வைதேகி கல்யாணம்
  7. - அருணாச்சலம்
  8. - நட்புக்காக
  9. - கரிமேடு கருவாயன்
  10. - கந்தா கடம்பா கதிர்வேலா
  11. - கண்ணுக்கு கண்ணாக
  12. - கலர் கனவுகள்
  13. - பாட்டாளி
  14. - பரம்பரை
  15. - புது மனிதன்
  16. - மதுமதி
  17. - சந்திப்போமா
  18. - தை பொறந்தாச்சு
  19. - நாடு அதை நாடு
  20. - நம்ம ஊரு பூவாத்தா- (வசனம் பாடல்கள்)
  21. - விரலுக்கேத்த வீக்கம்
  22. - ஊர் மரியாதை
  23. - நம்ம அண்ணாச்சி
  24. - ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
  25. - ஜமீன் கோட்டை
  26. - பாளையத்து அம்மன்
  27. - பொண்டாட்டி ராஜ்ஜியம்
  28. - ஞானப்பழம்
  29. - தாய்மாமன்
  30. - என் ஆசை மச்சான்
  31. - ௭ங்களுக்கும் காலம் வரும்
  32. - வீட்டோட மாப்பிள்ளை
  33. - பொன் விழா
  34. - விடுகதை
  35. - சுந்தர புருஷன்
  36. - தாலி காத்த காளியம்மன்
  37. - பெரிய இடத்து மாப்பிள்ளை
  38. - முதல் சீதனம்
  39. - ஒயிலாட்டம்

இறப்பு

கவிஞர் காளிதாசன் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 29 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கவிஞர் காளிதாசன் அறிமுகம்கவிஞர் காளிதாசன் தேவாவுடன் கூட்டணிகவிஞர் காளிதாசன் திரைப்படப் பட்டியல்கவிஞர் காளிதாசன் இறப்புகவிஞர் காளிதாசன் மேற்கோள்கள்கவிஞர் காளிதாசன் வெளி இணைப்புகள்கவிஞர் காளிதாசன்தெற்கு தெரு மச்சான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்கலைப்புயாவரும் நலம்மாமல்லபுரம்பெரும்பாணாற்றுப்படைமுத்துலட்சுமி ரெட்டிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சிவவாக்கியர்கொன்றைரயத்துவாரி நிலவரி முறைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இயற்கை வளம்திருக்குர்ஆன்விஜய் ஆண்டனிகூகுள்சேக்கிழார்எஸ். பி. பாலசுப்பிரமணியம்முல்லை (திணை)கிருட்டிணன்மார்ச்சு 28பரதநாட்டியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காமராசர்புதினம் (இலக்கியம்)தமிழ் எண் கணித சோதிடம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்அறுசுவைதமிழர் விளையாட்டுகள்மீரா சோப்ராஉமறு இப்னு அல்-கத்தாப்இந்திய தேசியக் கொடிஅண்ணாமலை குப்புசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமதயானைக் கூட்டம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிமாலைத்தீவுகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்முதற் பக்கம்பித்தப்பைமனித மூளைவீரப்பன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கர்மாநயினார் நாகேந்திரன்பதினெண்மேற்கணக்குநாயன்மார்தமிழ் இலக்கியம்கருத்தரிப்புஅல் அக்சா பள்ளிவாசல்சுப்பிரமணிய பாரதிகுண்டூர் காரம்பெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்மயங்கொலிச் சொற்கள்இளையராஜாதருமபுரி மக்களவைத் தொகுதிஅண்ணாதுரை (திரைப்படம்)தங்கர் பச்சான்இயேசுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வேதாத்திரி மகரிசிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅன்னை தெரேசாநவரத்தினங்கள்வி.ஐ.பி (திரைப்படம்)பங்குச்சந்தைதேர்தல் பத்திரம் (இந்தியா)நற்கருணைதாயுமானவர்காடைக்கண்ணிவிஜயநகரப் பேரரசுபரணி (இலக்கியம்)தண்டியலங்காரம்பொதுவாக எம்மனசு தங்கம்வரலாறுஇயேசு பேசிய மொழி🡆 More