மிகுமக்கள்தொகை

மிகுமக்கள்தொகை (human overpopulation) என்பது ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை அதன் வாழிடத்தின் தாங்குத் திறனை விட கூடுதலாக இருக்கும் நிலையைக் குறிக்கும்.

மிகு மக்கள் தொகை உலக மக்கள் தொகைக்கும் சுற்றுச்சூழலுக்கும், புவிக்கும் உள்ள உறவாடலைக் குறிக்கும்.

மிகுமக்கள்தொகை
சதுர கிலோமீட்டரில் உள்ள மக்கள் தொகை அடர்த்தியின் அடிப்படையில் நாடுகளின் வரைபடம்.
மிகுமக்கள்தொகை
உயர் மக்கள் தொகை அடர்த்தியுள்ள பகுதிகள், 1994 நிலவரம்.
மிகுமக்கள்தொகை
பிறப்பு வீத அடிப்படையில் நாடுகள், நிலப்பகுதிகளின் வரைபடம்.

மிகு மக்கள் தொகை மக்களின் எண்ணிக்கை, பரவலை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கும் அவற்றுக்கு கிடைக்கும் பேணவல்ல வாழ்வாதாரங்களுக்கும் உள்ள விகிதமும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்கும் பிரித்து வழங்குவதற்கும் உள்ள வழிமுறைகளும் ஒரு மக்கள் தொகை மிகுந்துள்ளதா என்பதை முடிவு செய்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு வெளித்தொடர்பு இல்லா ஊரில் பத்து பேர் உள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு உணவு, நீர் போதுமானதாக உள்ளது. ஆனால், பத்தாவது ஆளால் உணவு, நீரைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. என்றால் இந்த ஊரில் மக்கள் தொகை மிகுந்துள்ளது. அதுவே, 100 பேர் உள்ள ஊரில் 200 பேருக்கு உரிய உணவு, நீர், உறைவிடம் முதலியவை முடிவற்றுப் பல தலைமுறைகளுக்கும் கிடைக்கும் நிலை இருந்தால், இந்த ஊரின் மக்கள் தொகை அளவோடே உள்ளது.

பிறப்பு வீதம் உயர்வு, மருத்துவத்துறை முன்னேற்றங்கள் முதலிய காரணங்களால் குறையும் இறப்பு வீதம், கூடும் குடிப்பெயர்வு, பேண இயலா உயிர்வளங்கள், குறைந்து வரும் வாழ்வாதரங்கள் முதலியன மிகு மக்கள் தொகைக்கு காரணங்களாக அமைகின்றன.

ஒரு வாழிடம் மனிதர் வாழ மிக கடினமான பகுதியாக இருக்கும். நிலையில் மிக குறைவான மக்கள் தொகை அடர்த்தி, எண்ணிக்கை கூட மிகுந்த மக்கள் தொகையாக கருதப்படும். எடுத்துக்காட்டுக்கு, சகாரா பாலைவனம், அன்டார்ட்டிக்கா முதலிய இடங்கள்.

ஒரு வாழிடத்தில் மக்கள் தொகை மிகுந்துள்ளதா என முடிவு செய்ய, தூய்மையான குடிநீர், தூய்மையான காற்று, உணவு, உறைவிடம், வெயில் முதலிய ஆதாரங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். மேம்பட்ட வாழ்க்கைத்தரமும் ஒரு அளவீடாக இருந்தால், மருத்துவம், கல்வி, கழிவுநீர் அகற்றல், திடக்கழிவு அகற்றல் போன்ற கூடுதல் வசதிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மக்கள் தொகை மிகுவதால், வாழ்க்கைக்கு அடிப்படையான வளங்களுக்கு மிகுந்த போட்டி நிலவும்.

அணு ஆற்றல், உப்பகற்றல், வேளாண்மை முதலிய நுட்பங்களைக் கொண்டு சில நாடுகள் தங்கள் தாங்கு திறனை கூட்டியுள்ளன.

மேற்கோள்கள்

Tags:

உயிரினம்உலக மக்கள் தொகைசுற்றுச்சூழல்புவிவாழிடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் இட ஒதுக்கீடுமலேசியாமரபுத்தொடர்சித்திரைத் திருவிழாபிலிருபின்சீவக சிந்தாமணிகுருதிச்சோகைநாழிகைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்காடுவேலுப்பிள்ளை பிரபாகரன்திருமலை நாயக்கர்தமிழர் நிலத்திணைகள்நம்ம வீட்டு பிள்ளைதொல்காப்பியப் பூங்காவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்மாதம்பட்டி ரங்கராஜ்அகநானூறுபஞ்சாங்கம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பெண் தமிழ்ப் பெயர்கள்மூதுரைஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்மாதோட்டம்நயன்தாராஅகத்தியர்சிவாஜி கணேசன்செப்பேடுசென்னை உயர் நீதிமன்றம்பல்லவர்சீவகன்அன்னை தெரேசாதிருப்பாவைதமிழ்ப் பிராமிஇந்தியாதீரன் சின்னமலைஏக்கர்ஆட்கொணர்வு மனுதாதுசேனன்ஆசாரக்கோவைமரகத நாணயம் (திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)வறட்சிவிளம்பரம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகாற்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கள்ளழகர் கோயில், மதுரைரோகித் சர்மாதமிழர் விளையாட்டுகள்திருநெல்வேலிகரிகால் சோழன்சங்ககால மலர்கள்கொடைக்கானல்பெட்டிதமிழ்ப் பருவப்பெயர்கள்பட்டினத்தார் (புலவர்)நவரத்தினங்கள்கார்லசு புச்திமோன்விக்ரம்பாரதிதாசன்நஞ்சுக்கொடி தகர்வுசுக்கிரீவன்சே குவேராஇந்திய நாடாளுமன்றம்ஏலகிரி மலைசாதிக்காய்ஏற்காடுதலைவாசல் விஜய்வடிவேலு (நடிகர்)தொல்காப்பியர்புறப்பொருள் வெண்பாமாலைசென்னைவிஜய் (நடிகர்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சார்பெழுத்துசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்🡆 More