மாவியம்

மாவியம் அல்லது செல்லுலோசு (cellulose) என்பது ஒரு (C6H10O5)n என்னும் வேதி வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும்.

ஒவ்வொரு குழுவான ஆறு கரிம அணுக்களுக்கும், 10 ஐதரச அணுக்களும் 5 ஆக்சிச அணுக்களும் இணைப்பு கொண்ட நெடுந்தொடர் கரிமச்சேர்மம். அது பல நூற்றில் இருந்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எளிய இனியமாகிய D-குளுக்கோசு அலகுகளை நீண்ட சங்கிலியாக இணைத்த பல்லினியம் அல்லது பாலிசாக்கரைடு என்னும் வகையைச் சேர்ந்த ஒரு சேர்மம்.

மாவியம்
மாவியம் அல்லது செல்லுலோசு
மாவியம்
முப்பரிமாணப்படம் (நான்கு குளுக்கோசு அலகுகள் தெரியும்) (கருப்பு=கரிமம்; சிவப்பு=ஆக்சிஜன்; வெள்ளை=ஐதரசன்.)
மாவியம்
மாவியத்தின் ஒரு போல்மம் (model)

மாவியம், பசும் தாவரங்களின் செல்களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை கோலுரு நுண்ணுயிர் (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது.

தொழிலகப் பயன்பாட்டுக்கு, மாவியம் பெரும்பாலும் மரக்கூழில் (pulp) இருந்தும் பஞ்சில் இருந்துமே எடுக்கப்படுகிறது. முதன்மையாக அட்டைகளும், காகிதங்களும் செய்ய மாவியம் உதவுகிறது. சிறிதளவு பிற பொருட்கள் செய்யவும் இது பயன்படும் (cellophane, rayon,etc).

சில மிருகங்களும், கரையான் போன்ற பூச்சிகளும் மாவியத்தைச் செரிக்க வல்லன. அவற்றின் குடல்களில் வாழும் பிற நுண்ணுயிரிகள் இவற்றைச் செரிக்க உதவும். மனிதர்களுக்கு மாவியத்தை உண்டால் செரிக்காது. அதன் காரணமாகவே உணவுமுறை நார்ச்சத்து என்று இது வழங்கப் படும். நீர்விரும்பு தன்மையாலும் செரிக்காமல் இருப்பதாலும் மலச்சிக்கலை எதிர்க்க இது பெரிதும் உதவும்.

மாவியத்தில் இருந்து மாவிய எத்தனால் என்னும் எரிபொருளும் செய்யப்படும்.

உசாத்துணைகள்

Tags:

அணுஆக்ஸிஜன்ஐதரசன்கரிமம்குளுக்கோசுசேர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. வரதராசன்தேவயானி (நடிகை)மதுரைபகத் பாசில்குமரகுருபரர்இன்று நேற்று நாளைவெட்சித் திணைரெட் (2002 திரைப்படம்)முத்தரையர்வெள்ளியங்கிரி மலைமகாபாரதம்தேவாரம்விருமாண்டியாழ்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கொன்றைவாணிதாசன்மக்களவை (இந்தியா)குகேஷ்சித்ரா பௌர்ணமிஇந்தியன் பிரீமியர் லீக்அக்கினி நட்சத்திரம்மண் பானைதங்கம்சூரரைப் போற்று (திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்இராவணன்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தமிழ் விக்கிப்பீடியாகண்ணகிநவக்கிரகம்மதராசபட்டினம் (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்எட்டுத்தொகைமரம்ஆய்த எழுத்துகலிங்கத்துப்பரணிபரதநாட்டியம்மலைபடுகடாம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நீக்ரோமணிமேகலை (காப்பியம்)இனியவை நாற்பதுஇரசினிகாந்துஜெயம் ரவிபஞ்சபூதத் தலங்கள்உவமையணிவேலு நாச்சியார்வணிகம்ஏப்ரல் 26அரச மரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முருகன்நெருப்புசிலப்பதிகாரம்அகத்திணைஇந்து சமயம்மருதம் (திணை)பெயரெச்சம்புற்றுநோய்உப்புச் சத்தியாகிரகம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்கருக்காலம்வினோஜ் பி. செல்வம்வரலாறுபெரியபுராணம்தஞ்சாவூர்இதயம்மெய்யெழுத்துஜெயகாந்தன்கேள்விகோயம்புத்தூர்கபிலர் (சங்ககாலம்)விநாயகர் அகவல்🡆 More